Saturday, June 9, 2012
கீழக்கரை வடக்குத்தெரு பகுதியில் சாக்கடை குளம்! பொதுமக்கள் அவதி !
கீழக்கரை வடக்கு தெரு மணல் மேடு பகுதியிலிருந்து பழைய போலீஸ் ஸ்டேசன் செல்லும் வழியில் சாலையில் சாக்கடை குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்களும்,அவ்வழியே செல்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.இதனால் பலரும் நோய் பாதிப்புக்குள்ளக்குவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த உமர் கூறியதாவது, இப்பகுதியில் சாக்கடை நீர் தேக்குவதற்கு தொட்டி உள்ளது.இத்தொட்டி நிரம்பி கழிவு நீர் சாலைக்கு வந்து விடுகிறதுது.பல ஆண்டுகளாக இப்பிரச்சனை நீடித்து வருகிறது.அடிக்கடி இப்பிரச்சனை ஏற்படுகிறது.இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காண்பதற்கு அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்களை கொண்டு அலோசனை செய்து நிரந்தர தீர்வு காணவேண்டும்.இது மட்டுமில்லாமல் சாக்கடையோடு குப்பையும் கலந்து சுகாதார கேடு நிலவுகிறது என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியாவிடம் கேட்ட போது,
தாழ்வான அப்பகுதியில் மோட்டர் மூலம் கழிவு நீர் வேளியேற்றபப்டுகிறது.தற்போது மோட்டார் பழுதடைந்துள்ளதால் தொட்டியிலிருநது கழிவு நீர் வெளியேற்றப்படாமல் நிரம்பி வழிந்து சாலையில் வழிந்தோடுகிறது.உடனடியாக சீர் செய்யப்படும்.மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண ஆலோசனை செய்யப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.