Sunday, January 27, 2013

கீழ‌க்க‌ரை வேலைவாய்ப்பு முகாமில் 159 பேர் ப‌ணியில் நிய‌ம‌ன‌ம்!!

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் மின்னியல், மின்னணுவியல், தொடர்பியல் படிப்புகள் முடித்தவர்கள் மற்றும் 2013ல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது வரவேற்றார், சென்னை அவலான் டெக்னாலஜி பன்னாட்டு நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை முதுநிலை மேலாளர் முருகன், அலிபாதுஷா, ஜிட்இன்பான்ட்ராஜ், பிரபாகரன் ஆகியோர் நேர்முகத்தேர்வை நடத்தினர்.

தங்கச்சிமடம், காரைக்குடி, தூத்துக்குடி, தேவகோட்டை, சிவகாசி, பரமக்குடி போன்ற ஊர்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து 270க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 2010&2011&2012ல் டிகிரி முடித்த 70 மாணவர்களும், 2013 இறுதியாண்டு பயிலும் 89மாணவர்களும் என 159 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியாண்டு மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து, மே மாதத்தில் வேலையில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது செய்திருந்தனர்.

1 comment:

  1. MADURAI TO DUBAI NERADI VIMANAM SEVAI VARAVERPUKURIYATHU ,INDIA GOVERNMENT INTHA NALLA THIDATHAI UDENNADIYA NIRAVEDRI SOUTH INDIA MAKKALUKKU UTHAVI PURIYA VENDUM,ITHU PONDU RAMANATHAPURAM DISTRIC IL ORU,UL NADU VIMANAM POKUVARUTHU AMAIKKA PADA VENDUM,(UL NADU VIMANAM NILAYAM RAMANATHAPURATHIL AMAIKKA VEDUM)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.