Friday, January 11, 2013

தேங்கி நிற்கும் சாக்க‌டை!அருகிலேயே மீன்க‌டை!தேவை ந‌ட‌வ‌டிக்கை!காங்கிர‌ஸ் ந‌க‌ர் த‌லைவ‌ர் கோரிக்கை!


கீழ‌க்க‌ரையில் ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி தெருவில் ப‌ழைமைமிக்க‌ மீன் மார்க்கெட்டும், புதிய‌ பேருந்து நிலைய‌ம் அருகே மீன் மார்க்கெட்டும் என‌ இர‌ண்டு மீன் மார்க்கெட்டுக‌ள் உள்ள‌ன‌.

க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ பெய்து வ‌ரும் ம‌ழையால் ம‌ழைநீர் வெளியேறுவ‌த‌ற்கு வ‌ழியில்லாம‌லும் க‌ழிவு நீர் க‌ல‌ந்து சாக்க‌டையாக‌ மார்க்கெட்டில் தேங்கி நிற்கிற‌து.இத‌னால் நோய் ப‌ர‌வி சுற்றுப்புற‌ம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளதால் ந‌க‌ராட்சி நிர்வாக‌ அப்பகுதியில் த‌ண்ணீர் தேங்காம‌ல் வெளியேறுவ‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து நக‌ர் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌மீதுகான் கூறிய‌தாவ‌து,
புதிய‌ மீன் மார்க்கெட்டில் பொதும‌க்க‌ள் ந‌ட‌ந்து செல்ல‌க்கூடிய‌ நிலையில் இல்லை.அந்த‌ அள‌வுக்கு மீன் க‌ழிவுக‌ளுட‌ன் ம‌ழைநீர் தேங்கி துர் நாற்ற‌ம் வீசுகிற‌து.மேலும் அங்கு அம‌ர்ந்துள்ள‌ வியாபாரிகள் துர்நாற்றை ச‌கித்து கொண்டு வியாபார‌ம் செய்கின்ற‌ன‌ர்.ஏற்கேன‌வே கீழ‌க்க‌ரை ப‌ல்வேறு நோய்க‌ள் ப‌ர‌வி வ‌ரும் சூழ‌லில் இது போன்று உண‌வு பொருள்க‌ள் விற்ப‌னை செய்யும் இட‌ங்க‌ள் சுகாதார‌ம‌ற்று இருப்ப‌து மேலும் நோய்க‌ள் ப‌ர‌வ‌ வாய்ப்பாகும். ப‌ண‌ம் கொடுத்து நோயை விலைக்கு வாங்குவ‌து என்று கூற்று இந்த‌ சூழ்நிலைக்கு பொருந்தும்.என‌வே உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் இப்ப‌குக‌ளில் சுகாதார‌த்தை பேண‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

1 comment:

  1. raviyath kadariya unga veetaium & unga mapla rizwandaiuk kaatra akkaraya konjam pothu makkalidamum kattungha sariya toli

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.