கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை சார்பக மேலத்தெரு அருஸியா தைக்கா வளாகத்தில் கல்விக்கான உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
மக்கள் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் உமர் அப்துல் காதர் தலைமை வகித்தார். மாவட்ட காஜி சலாஹீதீன் வரவேற்றார்.
நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன், ரிபாய்தீன்,ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹசன் இப்ராகிம்,கைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி தாளாளர் சாதிக், சமூக நுகர்வோர் இயக்க செயலாளர் தங்கம் ராதாகிருஸ்ணன்,சிராஜீதீன் அகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ,மாணவியருக்கு கல்விக்கான உதவி தொகை வழங்கப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம்,அன்வர் அலி,,ஜெயபிரகாஷ்,செய்யது பாவா கருணை,சாகுல் ஹமீது மற்றும் கைராத்துல் ஜலாலியா துவக்க பள்ளி தாளாளர் செய்யது இப்ராகிம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மனங்கனிந்த இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள். தம்பி எம்.கே.இ. உமர் அப்துல் காதர் அவர்களின் சீரிய தலைமையிலும் வழிகாட்டுதலிலும் நகரில் சீரோடும் சிறப்போடும் நீணட காலமாக இயக்கி வரும் மக்கள் சேவை அறக்கட்டளையால் சுமார் ரூபாய் நான்கு இலட்சம் அளவுக்கு கல்விக்கான உதவி தொகை வழங்கியது அறிந்து எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வல்ல ரஹ்மானிடம் இருகரம் ஏந்தி துவா செய்தோம் அவர்களின் தன்னலம் அற்ற சேவை மென்மேலும் தொடர, விரிவடைய.
ReplyDelete