Friday, June 15, 2012

கீழ‌க்க‌ரையில் ஆட்ட‌ம் காண‌ வைக்கும் ஆட்டோ க‌ட்ட‌ண‌ம்! முறைபடுத்த கோரிக்கை !


கீழ‌க்க‌ரையில் நூற்றுக்கணக்கான வாடகை ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில் பெட்ரோல் விலை உய‌ர்வை கார‌ண‌ம் காட்டி தாறுமாறாக‌ வாட‌கையை உய‌ர்த்தி விட்ட‌தாக‌ குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.



இது குறித்து கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செய்ய‌து இப்ராகிம் கூறுகையில்,

கீழ‌க்க‌ரையில் குறைந்த‌ப‌ட்ச‌ வாட‌கையாக‌ ரூ 25லிருந்து ரூ30 வ‌ரை பெற்று கொண்டிருந்த‌ ஆட்டோ ஓட்டுந‌ர்க‌ள் த‌ற்போது மினிம‌ம் வாட‌கை ரூ40 கேட்கிறார்க‌ள்.இத‌னால் ஆட்டோவில் ப‌யனிப்ப‌வ‌ர்க‌ள் க‌டும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்க‌ள்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டுள்ளது என்றால் அதற்கு ஏற்றவாறு நியாயமான அளவு வாடகையை உயர்த்தி கொள்ளலாம்.அதை விட்டு மலை அளவு வாடகையை உயர்த்துவது ஏற்கதக்கதல்ல மேலும் எவ்வ‌ள‌வு உயர்த்தினாலும் கீழ‌க்க‌ரை மக்கள் கேட்கும் வாடைகையை த‌ருவார்க‌ள் என்ற‌ ஆட்டோ டிரைவ‌ர்க‌ளின் எண்ண‌ ஓட்ட‌மே இத‌ற்கு கார‌ண‌ம்.இக்க‌ட்ட‌ண‌ உய‌ர்வை நாம் ஏற்க‌ கூடாது.

மேலும் ந‌‌க‌ர் முழுவதும் பெய‌ர‌ள‌வுக்குத்தான் ஆட்டோவில் மீட்ட‌ர் பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌து ஆனால் யாரும் மீட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. கீழ‌க்க‌ரையில் ஆட்டோ க‌ட்ட‌ண‌ங்களை முறைப்ப‌டுத்த‌ப‌டுத்தி‌ ந‌டைமுறை ப‌டுத்த‌ வேண்டும்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் கேட்ட‌ போது,

நான் மினிமம் ரூ40 வாங்குவதில்லை.ஆனால் பெட்ரோல் விலையை உயர்த்தியதால் மிகவும் கஷ்டப்படுகிறோம். கூடுதலாக கேட்க வேண்டிய நிலை உள்ளது.
சாலைகள் மோசமாக உள்ளதால் ஆட்டோக்களும் அடிக்கடி பழுதடைகிறது.
ஆட்டோ வாடகை கட்டணம் ரூ.150, பெட்ரோலுக்கு 200 என ஒரு நாளைக்கு ரூ.350 செலவாகிறது.தினமும் ரூ.500-க்காவது ஓட்ட வேண்டும். ஆனால் அவ்வளவு வருமானம் வருவதில்லை.எங்க‌ளுடைய‌ பிர‌ச்ச‌னையையும் ப‌ய‌ணிக‌ள் க‌வ‌னத்தில் கொள‌ள‌ வேன்டும் என்றார்.

அரசு தரப்பில் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்து கிழ‌க்க‌ரையில் அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் அழைத்து ஆட்டோ ஓட்டுந‌ர்க‌ளை அம‌ர‌ வைத்து பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி நியாயமான‌ ஆட்டோ க‌ட்ட‌ண‌த்தை நிர்ண‌ய‌ம் செய்வ‌தோடு அதை ந‌டைமுறைப‌டுத்தி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ப‌தே பொதும‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

2 comments:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்June 15, 2012 at 10:03 PM

    பெட்ரோல் விலை கீழக்கரையில் மட்டும் ஏறவில்லை. கீழக்கரையை தவிர மற்ற ஊர்களில் துபை.சிங்கப்பூரை போன்று சாலைகளும் கிடையாது. கிணற்றுத் தவளையாக இருந்து பிரச்சனையை அணுகுவதில் பயன் யாதோன்ரும் இல்லை.

    நகரில் தேவைக்கு அதிகமாக எண்ணிக்கையில் ஆட்டோக்கள். இதுதான் பிரதான காரணம்.ஆகவே நிறைவான வருமானம் அனைவருக்கும் என்பது அறிதான விஷயம்.

    பெட்ரோல் செலவு, நாள் வாடகை, நியாயமான வருமானம் அனைத்தையும் கூட்டி, சராசரி சவாரி கிடைக்காத கைவிட்டு எண்ணக்கூடிய ஒரு சில வாகன ஓட்டிகள் மட்டும் அல்லல் படுகிறார்கள். புலம்புகிறார்கள்.

    பழைய மீன் கடையிலிருந்து கிழக்கு தெரு கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவ்மனைக்கு முப்பது கேட்பவர்களும் உண்டு. நாற்பது கேட்பவர்களும் உண்டு. ஏன் இந்த வேறுபாடு? முஸ்லீம் பஜாரிலிருந்து யூசுப் சுலைகா மருத்துவமனைக்கு நாறுபது கேட்பவர்களும் உண்டு. ஐம்பது கேட்பவர்களும் உண்டு. ஏன் இந்த முரண்பாடு? நாற்பது கேட்பவர்களுக்கும் ஐம்பது கேட்பவர்களுக்கும் அதே பெட்ரோல் செலவு. அதே நிலைமையில் உள்ள சாலைதான். நமக்கு அறிய உணரும் காரணம் 40 கேட்டவருக்கு அன்றைக்கு திருப்தியான சவாரி கிடைத்திருக்கக்கூடும்.நகரின் தேவைக்கு அதிகமான ஆட்டோக்களின் எண்ணிக்கை காரணமாக 50 கேட்டவருக்கு கிடைத்த அன்றைய தின சவாரி குறைவாக இருந்திருக்கும்.

    மனசாட்சியோடு பேசுவதாக இருந்தால் மதுரை மற்றும் அருகில் உள்ள ஊர்களோடு ஒப்பிடும் போது நமது நகரில் குறைந்த தூரத்திற்கு கேட்கப்படும் வாடகை மிக அதிகமே. பிரச்சனை சுமுகமாக தீர வேண்டுமானால் வாகனங்களின் கணிசமாக குறைக்கப்பட வேண்டும். முடிந்த அளவுக்கு பெட்ரோல் வவாகனங்கள் டீசல் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும். ஷேர் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்த வேண்டும். உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்.

    இறுதியாக பயனிப்பவர்களை பற்றியும் மனதில் கொள்ள வேண்டும். விலைவாசி ஏற்றம் உங்களைப்போல அவர்களுக்கும் பாதிப்பு உண்டு என்பது நிர்சயமான தவிர்க்க முடியாத உண்மை. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் அவர்களும் பயணிக்கிறார்கள். ஆதலால் அவர்களும் மனகசப்புக்கோ பாதிப்புக்கோ ஆளாகக் கூடாது எண்பதில் உறுதி கொள்ள் வெண்டும்.

    ReplyDelete
  2. nice topic publish more like this n fight for increase auto rent vr behind with u

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.