Sunday, July 1, 2012
கீழக்கரை நிகழ்வுகளின் சங்கமம் !கீழக்கரைடைம்ஸ்.காம் தொடக்கம்
பல்வேறு நாடுகளில் முத்துக்களாக சிதறி கிடக்கும் நமதூர் சொந்தங்களுக்கு கீழக்கரையின் அன்றாட நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட கீழக்கரைடைம்ஸ் பிளாக் wwww.keelakaraitimes.blogspot.com உங்களின் அமோக வரவேற்பை பெற்று குறுகிய காலத்தில் உங்கள் ஆதரவுடன் 2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹிட்களை பெற்றுள்ளது.தற்போது கிழக்கரைடைம்ஸ் பிளாக் என்பது கீழக்கரைடைம்ஸ்.காம் (www.keelakaraitimes.com) என்று முழுமையான வலைதளமாக உருவெடுத்துள்ளது.
உங்கள் அனைவரின் ஆதரவை பெற்று இதற்கான தொடக்க நிகழ்ச்சி துபாயில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.கீழக்கரை டைம்ஸ்சின் நிர்வாகி குத்புதீன் ராஜா தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.கீழக்கரை டைம்ஸ் நிர்வாகி ஹமீது யாசீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.கீழக்கரை டைம்ஸின் செய்தித்துறை பொறுப்பாளர்கள் அல்லா பக்ஸ்,சாகுல் ஹமீது(பாம்பே),யாசர் அராபாத்,ஐ.டி பிரிவின் பொறுப்பாளர் சபீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
30ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் பணிபுரியும் அஹமது தெரு வெல்பேர் அசோஸியசன் தலைவர் ஹமீது கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ந்ந்ந்.கேலகரைடிமெச்.cஒம் வலைதளத்தை துவங்கி வைத்தார். அஹமது அப்துல் காதர்,அஹமது அஸ்பாக்,ஜெயினுலாப்தீன்,அஹமது தெரு வெல்பேர் அசோஸியசன் இணை செயலாளர் கீழை ராஸா,நாசா அமைப்பின் ஜெயினுலாப்தீன்,மிர்ஷா,ஐ.என்.டி.ஜே அமிரக பொறுப்பாளர் கீழை ஜமீல்,அமீரக காயிதே மில்லத் பேரவையின்(ஐ.யூ.எம்.எல்) பொருளாளர் ஹமீது ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.மஹ்மூது நெய்னா,)கீழக்கரைசேர்மன் வலைதளத்தின் ஆலோசகர்)வாழ்த்து செய்தி தெரிவித்திருந்தார். மேலும்
மாஸா அமைப்பின் அமீரக துணை தலைவர் நசீர்,கலாப்,நசீருதீன்,அஹமது ஹீசைன்,ஆகில்,ரியாஸ்,ஆரிப்,கீழக்கரை கிளாசிபைட் எஸ்.கே.வி ,ஹமீது சுல்தான்,தாஹா,சுல்தான் செய்யது இப்ராகிம் உள்ளிட்ட துபாயில் பணி புரியும் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழக்கரை டைம்ஸ் நிர்வாகி குத்புதீன் ராஜா நன்றியோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
”எப்போதெல்லாம் என் பேனா முனை தலை சாய்கிறதோ அப்பொதெல்லாம் என் சமூகம் தலை நிமிரும்..! “ என்றான் ஒரு கவிஞன். எழுத்து என்பது ஒரு வரம்...வாள் முனை சாதிக்க இயலாததை பேனா முனை சாதிக்கும் என்பார்கள்...இந்த நவீன உலகில் அந்த புரட்சிமிக்க பணிக்கான களமே, இந்த வலைப்பூக்களும், வலை தளங்களும்..
ReplyDeleteகீழக்கரை செய்திகள் என்ற சிறப்பான வலைப்பூவை நடத்தி, கடந்த ஒன்றரை வருடங்களில் 2,70,000 ஹிட்ஸ், 250 சந்தா தாரர்கள், 751 இடக்கைகள், என்ற மகத்தான சாதனையை படைத்து, அதன் அடுத்த கட்டமாக வலைப்பூவிலிருந்து வலைதளத்திற்கு பயணித்திருக்கும்...”கீழக்கரை செய்திகள்” குழும நண்பர்களை மனதார பாராட்டுகிறேன்.
முக்கியமாக இதன் பிண்ணனில் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கும் Hameed Yasin, மற்றும் Ahamed Kuthubdeen Raja ஆகியோருக்கு என் உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்...
இது மென்மேலும் வளர்ச்சி கண்டு, தடையின்றி, செய்திகளை தரமாக தருவதுடன், நடுநிலை தவறாமல், பொது நலம் புரிவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.
வாழ்த்துக்கள்!ஜஸகல்லாஹ் கைரன்.
ReplyDelete