Sunday, November 24, 2013

துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு!


செய்தி :தினகரன்
துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த புதிய விமான சேவையால் பயண நேரமும், செலவும் அதிகளவில் குறைவதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையம் ரூ.128 கோடியில் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்ட பின், முதல் முறையாக கொ ழும்புக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் கடந்த 2012, செப்.20ல் துவக்கியது. இதனை தொடர்ந்து 2வது சர்வதேச விமானத்தை மதுரையில் இருந்து துபாய்க்கு நேற்று முன்தினம் இயக்கியது. நேற்று அதிகாலை 3.50 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்னை வழியாக காலை 9.35 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது. துபாயில் இருந்து விடப்பட்ட முதல் விமானம் என்பதால், விமான நிலையத்தின் சார்பில் வாட்டர் சல்யூட் அடித்து ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் துபாயில் இருந்து வந்த பயணிகளை ஸ்பைஸ் ஜெட் விமான நிலைய சேவைப்பிரிவு முதுநிலை துணைத்தலைவர் கமல்கிங்கோரானி, விற்பனை பிரிவு முதுநிலை துணைத்தலைவர் ராஜா, துணைப் பொது மேலாளர் ரஞ்சீவ், மதுரை விமான நிலைய ஸ்பைஸ்ஜெட் மேலாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த புதிய சேவை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணம் செய்த துபாய் வாழ் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த  அமுதஅரசன்,கோவில்பட்டியை சேர்ந்த ஜெகநாதன்,  நெல்லையை சேர்ந்த மீரான் கூறுகையில், 
கடந்த 3 ஆண்டுகளாக மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் இயக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இப்போது தான் ஸ்பைஸ்ஜெட் மூலம் எங்களது கனவு நிறைவேறியுள்ளது. தென் தமிழகத்தில் இருந்து சென்று துபாயில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சேவை மிகப்பெரிய உதவியாக அமையும். இதனால் பயண நேரம் பல மணி நேரம் குறைகிறது. டிக்கெட் உள்ளிட்ட பல வழிகளில் பணமும் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பும், தொழில் வளமும் பெருகும் என்றனர்.
மதுரை செல்லூரை சேர்ந்த ராமமூர்த்தி (கார்பென்டர்), அவரது மனைவி காளீஸ்வரி கூறுகையில், இதுவரை சென்னை சென்று,
 அங்கிருந்து வேறு விமானம் மூலம் துபாய் சென்று வந்தோம். இதனால் சமயத்தில் துபாய் செல்வதற்கு 2 நாட்கள் கூட ஆகும். உணவு, தங்குமிடம், அலைச்சல் என பல வழிகளில் சிரமங்களை அனுபவித்து வந்தோம். தற் போது நேரடியாக சில மணி நேரங்களில் மதுரைக்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தினரை அடிக்கடி துபாய் அழைத்துச் செல்லவும் ஆசையாக உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்திற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி� என்றனர்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.