வேட்பாளர் ஆனா மூனா என்ற முகம்மது முகைதீன் (வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்)
கீழக்கரை நடுத்தெரு பகுதி 18வது வார்டு கவுன்சிலருக்கு ஆனா மூனா என்ற முஹம்மது முகைதீன் சுயேச்சையாக அலமாரி சின்னத்தில் போட்டியிடுகிறார் இவரது தந்தையார் ஹசன் அப்துல் காதர் நடுத்தெரு ஜீம்மா பள்ளி ஜமாத்தில் துணை செயலாளராக பணியாற்றியவர்.
வேட்பாளர் முஹம்மது முகைதீன் கூறியதாவது, கவுன்சிலர் பதவி என்பது சேவை செய்வதற்கு கூடுதல் பலம் மட்டும் தான் என்பது என் கருத்து ஏனென்றால் ஏற்கெனவே பொது நல பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனது வார்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் எனக்கு நன்றாக தெரியும் எனவே நான் வெற்றி பெற்றால் அவற்றை தீர்ப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் மேலும் வார்டில் ஏதாவது குறை என்றால் எந்நேரமும் என்னை அணுகலாம் என்றார்.
இவரது தரப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது, இந்த வார்டில் முகம்மது முகைதீன் நன்கு அறிமுகமானவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மேலும் இப்பகுதியில் உள்ளோர் அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாகத்தான ஆனா மூனாவை நினைக்கின்றனர்.வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.