Tuesday, November 22, 2011

ஆட்டம் போடும் ஆட்டோ மற்றும் மினி வேன் டிரைவர்கள் மீது நடவடிக்கை


அதிக சுமையுடன் மினி வேன்கள் படங்கள் :நன்றி:-ஜ‌குபர் ஹமீது இப்ராகிம்


அதிகமான குழந்தைகளுடன் ஆட்டோ :நன்றி:-ஜ‌குபர் ஹமீது இப்ராகிம்
கீழக்கரையில் 500க்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்களும் 300க்கும் மேற்பட்ட மின் வேன்களும் இயக்கப்பட்டு வருகிறது.இவைகளில் பெரும்பாலானவை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ ,மாணவிகளை மாத வாடகை அடிப்படையில் ஏற்றி செல்கின்றனர்.இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பலருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் சிறுவர்களும் வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்றும் சிலர் குடிபோதையில் ஓட்டுகிறார்கள் என்றும் நீண்ட காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது.இது தொடர்பாக போக்குவரத்துறையும் ,காவல்துறையும் பாராமுகமாக இருந்து வருவாதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

அதிக வாடகை ஆசையில் மினிவேன் மற்றும் ஆட்டோக்கள் பள்ளி மாணவ,மாணவிகளை உப்பு மூட்டை ஏற்றுவது போல் அதிகப்படியான எண்ணிக்கையில் ஏற்றுகின்றனர்.இதனால் அவர்களின் புத்தக பைகள்,உணவு பைகளை மினி வேன் போன்ற வாகனங்களின் உட்புறம் வைப்பதற்கு இடமில்லாமல் வாகனங்களின் மேற்புறத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி வைத்து செல்கிறார்கள் இதனால் வாகனம் வளைவுகளில் திரும்பும் போது பைகள் கீழே விழுந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கீழக்கரையில் உள்ள சிறிய சந்துகளிள் அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டுவதால் உயிரழப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது.பல இடங்களில் சிறிய அளவிளான விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.சில ஆட்டோக்களில் முன் இருக்கையிலும் 2 பள்ளி குழந்தைகளை அமர்த்தி செல்கிறார்கள் மேலும் மாணவ,மாணவிகளை கல்விகூடங்களுக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை எதையுமே இவர்கள் கடைபிடிப்பதில்லை.மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த ஹசன் ஜலால் கூறிய‌தாவ‌து, ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ குற்ற‌ச்சாட்டு இருந்து வ‌ருகிற‌து மேலும் வாட‌கை வாக‌ன‌ங்க‌ளின் ஓட்டுந‌ர்களாக உள்ள சில வாலிபர்கள் மாண‌விக‌ளை க‌ல்வி கூட‌ங்க‌ளுக்கு அழைத்து செல்லும் போது உதவியாளர் என்ற‌ பெய‌ரில் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் யாரையாவ‌து ஒருவ‌ரை வாக‌ன‌ங்களின் ஏற்றி செல்வ‌தாக‌வும் இவ‌ர்க‌ள் வாகனங்களில் உள்ள மாண‌விக‌ளிட‌ம் கேலி,கிண்ட‌லில் ஈடுப‌டுகிறார்கள்.ஒரு சில ஓட்டுநர்கள் என்ற போர்வையிலுள்ள சமூக விரோதிகள் மாணவிக‌ளின் இருப்பிடங்களின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது,தொலைபேசியில் தொல்லை செய்வது போன்ற செயலிலும் ஈடுபடுகிறார்கள்.பல பெற்றோர்கள் வெளியே தெரிந்தால் தங்கள் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி பலரும் இது குறித்து புகார் அளிக்க தயங்குகிறார்கள் .எனவே இது போன்ற புகார்களை பெறுவதற்கு கீழக்கரை காவல் நிலையத்தில் ஹெல்ப்லைன் இணைப்பை தர வேண்டும் புகார்களை ரகசியமாக விசாரிக்க வேண்டும்.

இப்திகார்
இது குறித்து மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார் கூறியதாவது, இது மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவே அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக மாசா சார்பில் ஏற்கெனவே காவல் துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.





முகைதீன் இப்ராகிம்
இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் என்ற சின்ன ராஜா கூறியதாவது, எங்கள் பள்ளிக்கு மாணவ,மாணவிகளை ஏற்றி வரும் டிரைவர்களின் விபரங்களை பள்ளி நிர்வாகத்திடம் தர வேண்டும் என்ற வேண்டுகோளை பெற்றோர்களிடம் வைத்தோம்.ஆனால் இது போன்ற தகவல்களை பெற்றோகளிடமிருந்து பெறுவதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் நான் பள்ளிக்கு வரும் போது மாணவ,மாணவிகளை வாகனங்களில் ஏறி செல்வதை நானே முன்நின்று கண்காணிப்பேன் ஓட்டுநர்களிட உரிமம் உள்ளதா என்று சோதனை செய்துள்ளேன்.அதே போல் ஒவ்வொருமுறையும் எங்களது பள்ளி ஆசிரியர்களும் வாகனங்களில் மாணவ,மாணவிகள் செல்லும் வரை மேற்பார்வையிடுகிறார்கள் ஆனால் பள்ளிக்கு வெளியே எப்படி ஏற்றி செல்கிறார்கள் என்பதை நம்மால் கண்காணிக்க முடியாது இது போன்ற பிரச்சனையை தவிர்ப்பதற்காக எங்கள் பள்ளி சார்பாக மாணவ,மாணவிகளை ஏற்றி செல்ல பெண் உதவியாளருடன் வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்வதாக அறிவித்திருந்தோம்.ஆனால் இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை இன்று வரை பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் வாகனங்களில் தான் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். என்னதான் பள்ளிகள் மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்தாலும் பெற்றோர்கள் மனது வைத்தால் தான் செயல்படுத்த முடியும்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது. இது குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

3 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன் என்ற பெயரில் நமக்கு வந்த பதிவு கீழே தரப்பட்டுள்ளது..........

    கடந்த 2010 - ல் நடந்த கீழக்கரை பைத்துல் மால் வருடாந்திர பொது கூட்டத்தில் வடக்குத் தெரு ஹாஜி ரெத்னா முகம்மது காக்கா அவர்கள் இந்த பிரச்சனையை பற்றி காரசாரமாக பேசினார்கள். அக்கூட்டத்தில் கலந்த் கொண்ட ஹாஜி செ.மு. ஹமீது அப்துல் காதர் காக்கா ( சதக்கு டிரஸ்ட் ) இது ஊர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருப்பதால் ஐக்கிய ஜமாத் கூட்டத்தை கூட்டி நல்ல தீர்வு காண்போம் என கூறினார்கள்.அதில் பேசிய சிலர் மினி வேனின் பக்கவாட்டு கண்ணாடியில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை அகற்றுவது,ஆடியோ ஸ்பீக்கர் சாதனங்களை அகற்றுவது, குறைந்த பட்சம் பணி நேரத்தில் பயன் படுத்தாமல் இருப்பது. பள்ளி, கல்லுரி களுக்கு செல்லும் வயது பெண்கள் செல்போன் கொண்டு செல்லாமல் தடுப்பது, அவசியம் செல்போன் கொண்டு போகக்கூடிய சூழ்நிலை இருந்தால் அதை கண்காணிப்பது, இன்டர்நெட் மற்றும் கணிணி பயன்படுத்துவதை கண்காணிப்பது போன்ற ஆலோசனைகள் கூறப்பட்டன. குறிப்பாக கடைசியாக பயனிக்கும் மாணவிகளை பற்றி கூடுதல் அச்சம் தெரிவிக்கப்பட்டது. மத சம்பந்தப்பட்ட பிரச்சனை எழக்கூடிய வாய்ப்புக்கள் பற்றியும் அலசப்பட்டது. அதன் பின் இது சம்பந்தமாக என்ன நடந்தது என்று அறியப்படவில்லை. ஆனல் இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து கொண்டு இருக்கிறது என்பதே வேத்னையின் உச்ச கட்டம் . சில விரும்பத்தகாத வேதனை அளிக்கக் கூடிய சம்பவங்களும் நடந்தது உண்டு. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை நிச்சயமாக ஒழிக்க முடியாது. சகோதரர் ஜனாப். எம்.எம்.கே.முகைதீன் இபுறாகிம் அவர்கள் சொல்லுவது சத்தியமான உண்மை. பெற்றோர்கள் மனம் வைத்து ஒத்துழைத்தால் தான் இந்த பிராச்சனையின் உக்கிரத்ததை நூறு சதவீதம் தீர்க்க முடியாவிட்டாலும் குறைந்த படசமாவது மட்டுப்படுத்த நிச்சய்மாக முடியும். THE LAST BUT NOT THE LEAST இந்த பிரச்சனையில் அதிக பட்ச அசிங்கங்கள் ஏற்படாமல் இருக்க உடனடியாக காவல் துறை, கல்லூரி-மேனிலை-உயர்நிலை பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள், ஐக்கிய ஜமாத் அனைத்து உறுப்பினர்கள், அனைத்து சமுதாய பிரதிநிதிகள், அனைத்து பொது நல சங்கங்கள், தலைவி ம்ற்றும் அனைத்து வார்டு பிரதிநிதிகள் குறிப்பாக முக்கிய ஊர் பிரமுகர்கள் மற்றும் மாணவச் செல்வங்களின் பெற்றோர்கள் அடங்கிய கூட்டம் கூட்டப்பட்டு நல்ல சுமுகமான தீர்வு காணப்பட்டே ஆக வேண்டும். ஊர் கூடி தேர் இழுக்கப்பட வேண்டும். வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும். இது ஆன்றோர் வாக்கு. இது நடக்குமா ? ஆனால் நடந்தே ஆக வேண்டும். நல்லதையே நினைப்போவோமாக. உயர்ந்த் உள்ளத்தோடுமுயற்சி செய்வோம். அனைத்தும் அறிந்த இறைவன் நிச்சயமாக வழி காட்டுவான்.

    By மங்காத்தவின் தங்கச்சி மகன்
    ________________________________________________________________________-

    கருத்துக்கள் அருமை .உங்கள் பதிவுக்கு நன்றி .தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த கருத்தில் இரண்டு வரிகள் எடிட் செய்யப்பட்டுள்ளது.
    செய்தி குழு

    ReplyDelete
  2. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 23, 2011 at 1:42 PM

    இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு மனு கொடுத்திருப்பதாக மாஸா அமைப்பின் நிறுவனர் தகவல் தந்துள்ளார்கள்.

    ஆனால் காவல் துறையினர் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்கள்.

    எத்தகைய மாறுபட்ட தகவல் !!!

    இருப்பினும் காவல் துறைக்கு நன்றி. பெரு வெள்ளம் ஏற்பட்டு சேதாரம் ஏற்படுவதற்கு முன் அணை போட மிகவும் பணிவன்புடன் பெற்றோர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

    ReplyDelete
  3. Fylur

    min van ...Mini van

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.