பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்





தகவல் :- http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp
இடம் மற்றும் மனைகளுக்கான அரசின் வழிகாட்டுதல் மதிப்புக்கான
(Guideline Draft) வரைவு வெளியாகியுள்ளது.ஏற்கெனவே இருந்த வழிகாட்டுதல் மதிப்பை விட நான்கு மடங்குக்கு மேல் கூடுதலாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
உதாரணத்திற்கு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி ஒரு இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 400 என்றால் 1000 சதுர அடிக்கு ரூபாய்400000 விலையாகிறது.இதில் 9% பத்திர செலவு மட்டும் ரூ36000 ஆகிறது. இதுவே அரசில் பழைய வழிகாட்டுதல் படி சதுர அடி ரூ200 என்று வைத்து கொள்வோம் இதன் மூலம்1000 சதுர அடிக்கு ரூ200000 ஆகிறது. இதற்கு பத்திரபதிவுக்கான செலவு ரூ 18000ம்தான் ஆகும். எனவே புதிய வழிகாட்டுதலின் படி பத்திரபதிவுக்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ரியல் எஸ்டே தொழில் செய்து வரும் ஜகுபர் கூறியதாவது,
தற்போதுள்ள வரைவு மிக அதிக விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால் பத்திரபதிவு செலவு எக்கச்சக்கமாக இருக்கும் இதனால் இடத்தை வாங்குபவர்கள் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.குறிப்பாக கீழக்கரை பகுதியில் அதிக அளவில் இடங்களை விற்பது,வாங்குவது நடைபெற்று வருகிறது இந்த வரைவு நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த வியாபாரம் குறைந்து விடும் அரசு இந்த விலை நிர்ணயத்தை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த அஹமது அப்தாகிர் கூறுகையில்,
இடத்திற்கான சந்தை விலைக்கு இணையாக அரசின் விலை நிர்ணயம் இருக்க வேண்டும் என்று முயற்சித்துள்ளார்கள் ஆனாலும் இது ரெம்ப அதிகம். பத்திரபதிவு செலவு அதிகமாக இருந்தால் இடத்தின் விலையை குறைத்து வாங்க முயற்சி செய்வார்கள் இந்த மூலம் வீட்டு மனைகள் விலை கட்டுக்கும் வரும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எது எப்படி இருந்தாலும் தற்போது வெளியிட்டுள்ள கீழக்கரைக்கான வரைவை பரிசீலனை செய்து விலை நிர்ணயத்தை குறைத்து வெளியிட வேண்டும்.நமது ஊர் முக்கிய பிரமுகர்கள் இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றார்
மேலும் அதிக தகவல்களுக்கு
http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.