Thursday, November 17, 2011
கந்து வட்டி வசூலில் வாலிபர் மீது தாக்குதல்
காயமடைந்த பரக்கத் அலி
ஏர்வாடி தர்காவை சேர்ந்தவர் பரக்கத் அலி வாடகை ஆட்டோ டிரைவராக உள்ளார்.இவரது தாயார்,, பவானியின் கணவர் சக்திவேல் என்பவரிடம் ரூ 30000 ஆயிரம் வட்டிக்கு வாங்கியிருந்தார் கந்து வட்டிக்காரரான சக்திவேல் பணம் கொடுக்கும் போதே ரூ 1000த்திற்கு ரூ200 வட்டி என்ற கணக்கில் ரூ 6000 ஆயிரத்தை வட்டியாக பெற்று கொண்டாராம்.மீதமுள்ள பணத்திற்கு தினமும் ரூ 300 கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பரக்கத் அலியின் தாயார் பணம் கட்டி வந்துள்ள சமயத்தில் அவருக்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது அதற்கான பொறுப்பை அவரது மகன் பரக்கத் அலி ஏற்று தினமும் ரூ300 கட்டி வந்தாராம் .
சம்பவத்தன்று வசூலுக்கு சென்ற கந்து வட்டிக்காரர் சக்திவேலிடம் இன்று ஆட்டோவில் வாடகை வசூல் குறைந்த அளவே ஆகியுள்ளது பிறகு ரூ 300 தருகிறேன் என்று பரக்கத் அலி கூறியுள்ளார் உடனே ஆத்திரமடைந்த சக்திவேல் பரக்கத் அலியை தகாத வார்த்தையில் திட்டி முகத்தில் கடுமையாக தாக்கி விட்டு சென்றாராம். இதனால் முகத்தில் காயம்பட்ட பரக்கத் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் சுலதான் இப்ராகிம் கூறுகையில் , ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கந்து வட்டிகாரார்களின் அட்டகாசம் பெருகிவிட்டது.ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி இவர்கள் அட்டை போல் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் வெளியே சொல்வதற்க்கு அஞ்சுகிறார்கள்.ஒரு சிலர் இவர்களுக்கு பயந்து ஊர் திரும்பாமல் உள்ளார்கள்.மாவட்ட நிர்வாகம் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.