Sunday, November 27, 2011

விபத்து ஏற்படுத்தியது யார் ? விசாரணை மந்தம் !

கீழக்கரையை சேர்ந்த இளம்பெண் செய்யது அலி பாத்திமா ராமநாதபுரம் அருகே கணவருடன் டூவீலரில் சென்ற போது பஸ் மோதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.கணவரும் ,கைகுழந்தையும் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.விபத்து ஏற்படுத்திய பஸ் மின்னல் வேகத்தில் மறைந்தது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய பஸ் மற்றும் டிரைவர் இது வரை கண்டுபிடிக்கபடவில்லை.இவ்வழக்கரை ராமநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்தியது டூரிஸ்ட் பஸ் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் கர்நாடக மாநிலத்தின் பஸ் டிரைவரை விசாரணை செய்ததாகவும் பின்னர் அவர் இல்லை என்று விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இது வரை யாரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பது கீழக்கரை பகுதி மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ஹ‌மீது பைச‌ல் என்ப‌வ‌ர் கூறுகையில், இது போன்ற‌ விபத்து வேறு இடங்களில் நடைபெற்று விப‌த்துக‌ள் ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ளை கைது செய்யப்படாம‌ல் இருந்திருந்தால் இதை கண்டித்து சாலை ம‌றிய‌ல் ,உள்ளிட்ட‌ போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு க‌ளேப‌ர‌மாகியிருக்கும்.ந‌மதூர் ம‌க்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் ,போராட்ட‌ம் போன்ற‌வ‌ற்றில் ஈடுபடவில்லை என்பதை சாதகமாக எடுத்து கொண்டு போலீசார் இச்ச‌ம்ப‌வ‌ம் குறிந்து மந்தமாக விசாரித்து வருகிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது. டூரிஸ்ட் ப‌ஸ்சாக‌ இருக்கும் என்று ச‌ந்தேக‌ம் இருப்ப‌தால் அவ்வ‌ழியே உள்ள‌ உள்ள‌ சோத‌னை சாவ‌டிக‌ளிலும்,வாகன நுழைவு வ‌ரி வ‌சூல் மைய‌ங்க‌ள் மூல‌ம் த‌கவ‌ல்க‌ளை பெற்று துரித‌மாக‌ விப‌த்து ஏற்ப‌டுத்திய‌து யார் என்று க‌ண்டுபிடித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.சில மாதங்களுக்கு முன் அமைச்ச‌ர் ம‌ரிய‌ம் பிச்சை கார் விபத்தில் உயிரிழந்தார் அப்போது காரை இடித்த‌ வாக‌ன‌த்தின் ஓட்டுநரையும்,வாகனத்தையும் மேற்கு வ‌ங்க‌ம் சென்று போலீசார் பிடித்து வ‌ந்த‌ன‌ர்.அதே போல் போலீசார் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து குற்ற‌வாளியை கைது செய்ய‌ வேண்டும் என்றார்.

1 comment:

  1. vision of kilakarai 2020November 27, 2011 at 10:31 PM

    ஹமீது பைஸல் அவர்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கிறோம்.

    ஆளும் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளும்,தொகுதி எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்களும் அந்த குடும்ப்த்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியும் கிடைக்க வழி காண வேண்டும். அந்த நிதி பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் முதலீடு செய்து பருவ வயதை அடையும் தருணத்தில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இறைவன் நற்கருணை புரிவானாக. ஆமீன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.