Saturday, November 5, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர் ,கவுன்சிலர்களுக்கு மாஸா சார்பாக பாராட்டு விழா !
கீழக்கரை நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மஹ்தூமியா சமூக நல அமைப்பின் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது. கீழக்கரை நகர்மன்ற தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,மற்றும் 20 கவுன்சிலர்களுக்கும் பழைய குத்பா பள்ளி ஜமாத்திற்கு உட்பட்ட மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாத்தின் தலைவர் முகம்மது சதக் தம்பி தலைமையிலும்,மாஸா அமைப்பின் நிறுவனர் இப்திகார் ஹசன் ,ஜமாத் உப தலைவர் சீனி முகம்மது,செயலாளர் ஜின்னா சாகிபு ,முகைதீன் கருணை சம்மாட்டி மற்றும் ராய‌ல் புரோமோட்ட‌ர்ஸ் ச‌யீது இப்ராகிம்,மாஸா நிர்வாகிக‌ள் ஆகியோர் முன்னிலையில் பாராட்டு விழா ந‌டைபெற்ற‌து.


இவ்விழாவை ம‌ஸ்ஜித் ஜெய்ன‌பிய்யா ஆலிம் ஷெய்கு க‌ஸ்ஸாலி கிராஅத் ஓதி துவ‌ங்கி வைத்தார்,மாஸா ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் துபாய் ஒருங்கினைப்பாள‌ர் ப‌ர‌க்க‌த் அலி அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று பேசினார். அமைப்பின் க‌வுர‌வ‌ ஆலோச‌க‌ரும் ,ம‌துரை காம‌ராஜ‌ர் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ முன்னாள் துணை வேந்த‌ருமான‌ சாலிஹூ சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு பேசினார்.நிக‌ழ்ச்சிக‌ளை லெப்பை த‌ம்பி தொகுத்து வ‌ழ‌ங்கினார்.இவ்விழாவில் கீழ‌க்க‌ரையின் ப‌ல்வேறு ஜ‌மாத் நிர்வாகிக‌ளும் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

1 comment:

 1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 5, 2011 at 10:01 PM

  ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்கும் மேலான சரித்திர பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்ட கீர்த்தி மிகு கீழக்கரையின் நகராட்சியின் தானய தலைவிக்கும் மற்றும் உதவி தலைவர், கவுன்சிலர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

  கடந்த காலத்தை போல் அல்லாது துடிப்புடன் தன்னலமற்ற சேவை செய்வோம் எனற உங்கள் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு அயராத உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்தித்து மீண்டும் ஒரு முறை ம்னதார வாழ்த்துகிறோம்

  தலையாய பிரச்சனையான

  நகரின் குப்பைகளை அகற்றுவது,

  கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்து சுகாதார சீர்கேட்டை கலைவது,

  பெண்கள் சிறுவர் சிறுமிகள் முதியவர்கள் கர்ப்பிணிகள் (வாகனத்தில் போகும் போது) சீராகா செல்லும் விதமாக சாலைகளை மேம்படுத்தி சீரமைப்பது,

  குடிநீர், குறிப்பிட்ட நேரங்களில் வினியோகம் செய்வது

  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் படும் துயரங்களை களையும் விதமாக கிடப்பில் இருக்கும் கீழக்கரையை தாலுகா அந்தஸ்து கிடைத்திட கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமுகமாக அரசுக்கு தீர்மானம் அனுப்புவது

  கீழக்கரை பழைய மருத்துவமனை, வ்ள்ளல் சீதக்காதி சாலையில் குனாதான ஜவுளிக்கடைக்கு எதிர்புறமுள்ள இடத்தை அரசிடமிருந்து போராடி பெற்று நகராட்சியின் வருமானத்தை பெருக்கும் முகமாக வணிக வளாகங்களோ அல்லது இடமில்லாமல் ஊரை காலி செய்து பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக அமைய இருக்கும் சார் பதிவாளர் அலுவலகம்,பொது நூலகம் வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு வாடாகைக்கு விட்டும், மற்றும் பொது மக்களுக்கு பேருதவியாக மின்சார கட்டணம், பி.எஸ்.என்.எல் கட்டணம் கட்டுவதற்கு வாடகைக்கு இடம் அளிப்பது

  போன்ற காரியங்களுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் உங்களை தேர்ந்தெடுத்த மகிழ்ச்சி கொள்வார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

  மேற்சொன்ன காரியங்களுக்கு நீங்கள் முயற்சி எடுத்தால் உங்கள் பதவி காலத்திலும் அதற்கு பின் உள்ள காலத்திலும் உங்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள்

  மேலும் இதே மாஸா அமைப்பினர் நன்றி பாராட்டு கூட்டமும் நடதத்க்கூடும்

  வெளியூரில் வெளிநாட்டில் வசிக்கும் கீழக்கரை வாசிகளின் மேலான பார்வைக்காக கீழ்கண்ட தகவலை சமர்ப்பிக்கின்றோம் அவசியப்பட்டால் நேரிடையாக தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்

  குறிப்பு:தொந்தரவு காரணமாக தொடர்பு எண்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக் கொண்டால் நான் பொருப்பில்லை
  ஆதாரம்: தினமலர் நாள்: 03-11-2011 வியாழன் ம்துரை பதிப்பு.

  தலைவி: ஜனாபா. ராவியத்துல் காதரியா + 77083 05330

  உதவி தலைவர்: வார்டு 09.
  ஜனாப். ஹாஜா மொய்தீன்
  + 94438 79639

  கவுன்சிலர்கள்:

  வார்டு 01. திரு.சுரேஷ்
  + 94433 23110
  வார்டு 02. திருமதி. மீனாள்
  + 95667 38280
  வார்டு 03. திரு. ரமேஷ்
  + 99653 52641
  வார்டு 04. ஜனாபா.பாத்திமா
  04567 - 242074
  வார்டு 05. ஜனாப். சாகுல் ஹமீது
  + 90033 17905
  வார்டு 06. திரு. தங்க ராஜ்
  + 97882 10219
  வார்டு 07. ஜனாப்.அன்வர் அலி
  + 98946 75624
  வார்டு 08. ஜனாப். செய்யது கருணை
  (பாவா)
  + 99447 06596
  வார்டு 10. ஜனாப். அஜ்மல் கான்
  + 96290 70683
  வார்டு 11. ஜனாபா. மீரா பானு
  + 82203 03909
  வார்டு 12. ஜனாப். சித்தீக் அலி
  04567 - 246202
  வார்டு 13. ஜனாப். ரபியுதீன்
  +98435 84228
  வார்டு 14. ஜனாபா. தாஜின் அலிமா
  + 90039 10049
  வார்டு 15. ஜனாபா. முகம்மது
  மஜிதா பீவி
  + 99442 51121
  வார்டு 16. ஜனாபா முகம்மது ஜரினா
  பேகம்
  + 96776 35267
  வார்டு 17. ஜனாப்முகைதீன்காதர்சாகிப்
  + 96773 78113
  வார்டு 18. ஜனாப்.முகைதீன் இபுராகீம்
  04567 - 243050
  வார்டு 19. ஜனாபா அரூசியா பேகம்
  + 98425 42865
  வார்டு 20. ஜனாப். ஹாஜா நஜ்முதீன்
  + 97504 13195
  வார்டு 21. திரு.ஜெய பிரகாஷ்
  + 95979 36464

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.