Saturday, November 5, 2011

விபத்து அபாயம் ஏற்படும் சாலை



கீழக்கரையிலிருந்து ஒன்பது வீடு வழியாக சின்ன மாயாகுளம் பெரிய நயினார் அப்பா தர்ஹா செல்லும் வழியாக கடந்த சுமார் நான்கு மாதங்களுக்கு முன் ரோடு போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன அதில் பெரிய கற்கள் போட்டு செம்மண் போடப்பட்டது. அத்துடன் சரி மேலும் ரோட்டிற்கு மேல் போடக்கூடிய சின்ன ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டு சில தினங்களில் குவிக்கப்பட்ட கற்கள் மாயமாய் மறைந்தது(யார் அள்ளி சென்றார்களோ தெரியவில்லை) .சரியான முறையில் சாலைபணி நடைபெறாததாலும் ,மழை பெய்து வருவதாலும் இப்பாதை சேதமடைந்து பல்லாங்குழி போல் காணப்படுகிறது.பெரிய கற்கள் பெயர்ந்து சாலையில் சிதறி கிடக்கிறது.இதனால் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அடிக்கடி சிறிய அளவில் விபத்துகள் நடைபெறுகிறது. ‌
இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் இன்பராஜ் கூறியதாவது, சம்நதப்பட்டவர்கள் இந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என்றார்.

1 comment:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 5, 2011 at 2:28 PM

    இதில் குறிப்பிட்ட பகுதி தில்லையேந்தல் பஞ்சாயத்து நிர்வாகத்ததிற்கு உட்பட்டதாக இருக்கலாம்

    இருப்பினும் அங்கு குடி இருப்போர் அதிகபட்சமாக கீழக்க்ரை வாசிகளே நகர் அபிவிருத்தியின் காரணமாக அங்கு சென்றவர்கள்

    இதனால்தான் விவாதத்திற்ககுரிய யோசனை ஒன்று ஊரில் பேசப்படுகறது அதாவது தில்லையேந்தல் பஞ்சாயத்தையும் இணைத்து கீழக்கரை நகராட்ச்சியின் எல்லையை விரிவுபடுத்தி முதல் நிலை நகராட்சியாக உயருமானால் 500 பிளாட் மற்றும் கீழக்கரை இரண்டாம் நிலை நகராட்சியின் எல்லையில் உள்ள குடிஇருப்பு வாசிகளின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வினியோகம் போன்றவை மேம்படக்கூடிய வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கக்கூடும்

    கீழக்கரை மற்றும் சுற்று வட்டார குப்பைகளை சேகரித்து அவைகளை நவீன முறையில் கையாண்டு உரிய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குரிய் பொருத்தமான இடம் ஊரின் குடி இருப்புக்கு வெகுதூரத்தில் கிடைக்க வாய்ப்பும் பிரகாசமாக இருக்கக்கூடும்

    அரசியல் மற்றும் தன்நலம் காணாது சுகாதாரம் மற்றும் ஊர் வளர்ச்சியை மட்டும் உயர்ந்த ம்னதில் நிலை நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா ?

    ந்ல்லதையே நினைப்போம் ந்ல்லதையே நாடுவோம்
    இறைவன் நிச்சயம் வழி காட்டுவான்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.