அக்டோபர் 1ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி துவங்கியது. சேர்க்கை, திருத்தம், பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கு உரிய படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும். வரும் ஜன.,1ம் தேதி, 18 வயது பூர்த்தியான அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் என்று தேர்தல் கமிசன் அறிவித்துள்ளது .இதன் மூலம் வாக்களர் பட்டியலில் தங்களை இணைத்து கொள்வதோடு சேர்க்கை, திருத்தம், பெயர் நீக்கம் ஆகியவற்றை சரி செய்து கொள்ள முடியும். முதல் முறையாக கவுன்சிலராக பொறுப்பேற்றுள்ள 18வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு ,வீடாக சென்று இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அதற்கு தேவையான உதவிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, இது கவுன்சிலர் பணியாக இல்லாவிட்டாலும் தமது வார்டு மக்களின் மீதுள்ள அக்கரையில் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் செயல்படுவதாக தொடந்து இதே போல் செயல்பட வேண்டும் என்றனர். அவருடன் முஜீப் உடன் சென்றார்.
இதே போல் அனைத்து கவுன்சிலர்களும் தமது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இது போன்று உதவியில் ஈடுபட்டு தமது பகுதியில் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களை வாக்களர் பட்டியலில் இணைத்து கொள்ள முயற்சி மேற்கொண்டால் தமது பகுதி மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
என் உடன் பிறவா சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ... நமது 18ஆவது வார்டு கவுன்சிலர் காக அவர்கள் செய்த செயலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
ReplyDeleteமேலும் அவர் மட்டும் அல்ல இன்னும் சில வார்டுகளில் அந்த அந்த கவுன்சிலர்களும் அதுபோல செய்து உள்ளனர் ... அவர்களையும் கண்டறிந்து உங்கள் கீழக்கரை டைம்ஸ் இல் சேர்த்தல் மிகவும் நன்றாக இருக்கும்.. இது என் சிறிய விண்ணப்பம் ..... அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)