Monday, November 21, 2011

பரபரப்பாக நடைபெற்ற கீழக்கரை நகராட்சி கமிட்டி தேர்தல் முடிவுகள் !

பட விளக்கம் :-கீழக்கரை நகராட்சியில் புதியதாக பதவியேற்ற நிர்வாகத்தின் முதல் கூட்டம் தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்றது.
கீழக்கரை நகராட்சி தலைவராக‌ ராபியத்துல் காதரியா (அதிமுக )இருந்து வருகிறார். அதிமுக சார்பில் ஆறு கவுன்சிலர்களும்,திமுக சார்பில் நான்கு கவுன்சிலர்களும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் ,10 சுயேட்சை கவுன்சிலர்களும் மொத்தம் 21 பேர்கள் உள்ளனர்.

இநிலையில் இன்று நடைபெற்ற புதியதாக பதவியேற்ற நிர்வாகத்தின் முதல் நகராட்சி கூட்டத்தில் போட்டியின்றி கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என செய்திகள் வெளியான நிலையில் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நடைபெற்றது கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகராட்சி கமிட்டி தேர்தலில் ,போட்டியிட்டவர்களை அனைத்து கவுன்சிலர்களும் ஒட்டு பதிவு செய்து தேர்வு செய்தனர்.

கீழக்கரை நகராட்சி வரிமேல் முறையீட்டு கமிட்டிக்கு 4 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட கவுன்சிலர்கள் பெற்ற ஓட்டுக்கள்
சாகுல் ஹமீது(திமுக), 20 ஓட்டுக்கள்
மீரா பானு (திமுக) 18 ஓட்டுக்கள் ,
சித்திக் அலி (சுயே) 19 ஓட்டுக்கள்,
தங்கராஜ் (சுயே) 16 ஓட்டுக்கள்,
முகம்மது ஜரினா பானு(அதிமுக)14 ஓட்டுக்கள்
பெற்றனர் இதில் குறைவான ஓட்டுக்கள் பெற்று தோல்வியுற்ற‌ ஜரினா பானுவை(அதிமுக)தவிர‌ மற்ற நான்கு கவுன்சிலர்கள் வரி மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு உறுப்பினர் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டிய ஒப்பந்த(டெண்டர்) கமிட்டிக்கு போட்டியிட்ட 3 கவுன்சிலர்களில்
அன்வர் அலி(சுயே)8ஓட்டுக்கள்,
சுரேஷ்(அதிமுக) 10ஓட்டுக்கள்
முகைதீன் இப்ராகிம் 4ஓட்டுக்கள்
பெற்றனர்.இதில் சட்ட விதிகளின்படி குறைவான வாக்குகள் வாங்கிய முகைதீன் இப்ராகிமை போட்டியிலிருந்து நீக்கி விட்டு அன்வர் அலி மற்றும் சுரேஷ் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நடைபெற்றது
அன்வர் அலி(சுயே) 12 ஓட்டுக்களும்
சுரேஷ் (அதிமுக)10 ஓட்டுக்களும் வாங்கினர்
ஒரு ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது இதில் முந்தைய சுற்றில் 8ஓட்டுக்கள் மட்டுமே பெற்றிருந்த அன்வர் அலி இம்முறை கூடுதலாக 4 ஓட்டுக்கள் பெற்று 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.முந்தைய சுற்றில் 4 ஓட்டுக்களை முகைதீன் இப்ராகிம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

நியமன‌(அப்பாயிண்மெண்ட்) கமிட்டி உறுப்பினருக்கான தேர்தலில் துணை தலைவர் ஹாஜா முகைதீன்(அதிமுக) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

3 comments:

  1. ஆஹா.. அருமை.! லஞ்சம் வாங்க மாட்டேன் என்று சூளுரைத்து அனைவருக்கும் முன்னுதாரமாக செயல்பட்ட கவுன்சிலரின் நிலைமையை பார்க்கும் போது..
    நெஞ்சி பொறுக்குதில்லையே..; இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்...

    ReplyDelete
  2. @KEELAI SINGAM
    கொடுகுறவங்க இருக்கும் போது என்ன செய்ய ?முதலில் அவர்களயும் திருத்தனும்!!!!!!!!

    ReplyDelete
  3. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 23, 2011 at 7:33 PM

    லஞ்சம் கொடுப்பதில் ஏழை, பணக்காரன் பேதம் இல்லாமல் யாரும் வழிய போய் கொடுப்பதில்லை.

    நாட்டிற்கு உதவாத பொது மக்களுக்கு பயன்படாத, சட்ட நடைமுறையினால் தான் வயரெரிந்து வேறு வழி இல்லாததினால் கொடுக்கிறர்களே தவிர யாரும் மனமுவந்து யாரும் கொடுப்பதில்லை.

    கால தாமதம், வீண் அலைச்சல். வீணான போக்குவரத்து செலவினங்களை தவிர்க்க வேண்டியே
    கனத்த இதயத்துடன் தான் காலத்தின் கட்டாயத்தின் பேரில் பெரும்பாலர் கொடுக்கிறார்கள்.இதில் பெண்களும் அடக்கம்.

    எந்த காரணமாக இருந்தாலும் எப்படியும் லஞ்சம் வாங்கியே தீர வேண்டும் என்ற ’’ உயர்ந்த ’’ நோக்கத்துடன் தான் நடமுறைக்கு ஒவ்வாத சட்ட நெறிமுறைகளை அரசு துறை நிர்வாகத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.இது காலத்தின் கொடுமை.

    ஒரு ஜனாஸாவை வெளி ஊரிலிருந்து அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு,அவர்கள் அடைந்த வேதனைகளை சம்பந்தபட்டவர்களிடம் கேட்டால் தான் லஞ்சததின் கொடுரம் பூரணமாக புரியும்.

    இன்று மதியம் கூட (23/11/11 புதன்) கீழக்கரை குடும்பம் ஒன்றுக்கு ராமநாதபுரம் ரோட்டில் நடந்த கர்ண கொடுரமான விபத்து எந்த கல் நெஞ்சக்காரனையும் கண்ணீர் விட வைக்கும். ஆனால் நடைமுறை சிக்கல் காரணமாக இன்னும் ஜனாஸா ஊர் வரவில்லை. பிணவறையில் உள்ளது. நாளை காலையில் வரக்கூடும், இன்ஷா அல்லா

    இருக்கிற சிக்கல் காணாது என்று அரசியல் வாதிகளும் இடியப்ப சிக்கலாக்கி லஞ்சத்தை ஊக்குவிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத நடைமுறை உண்மை.

    இது விசயத்தில் யாருக்கும் வெட்கமில்லை.

    இந்தியன் என்று சொல்லடா.
    தலை குனிந்து நில்லடா!!!!!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.