Saturday, November 5, 2011

அகற்றப்பட வேண்டிய அகமது தெரு அவலம்




குடியிருப்புப் பகுதியில் நாள் கணக்கில் அகற்றப்படாத குப்பைகள், மழை நீரில் ஊறி, நோய்க்கிருமிகளை பரப்பும் இடமாக மாறி வருகிறது. உடனடியாக அகற்றி வரும் முன் காக்க வேண்டும் என கீழக்கரை பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கீழக்கரை கோக்கா அகமது தெருவில் ஹமீதியா பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் வீடுகள் உள்ளன. குடியிருப்பு மற்றும் பள்ளி மைதானத்துக்கு வெகு அருகே குவிந்து கிடக்கும் குப்பைகள் நீண்டகாலமாக அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால், குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கும், அந்த பகுதியில் குடியிருப்பவர்களுக்கும் அடிக்கடி நோய்கள் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து பட்டாளம் மன்சூர் கூறியதாவது: இந்தப்பகுதியில் தினந்தோறும் ஏராளமான குப்பைகள் சேருகிறது. நகராட்சி நிர்வாகம் தினந்தோறும் குப்பைகளை அகற்றுவதில்லை. இங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றி பல நாட்கள் ஆகிறது. இதனால் பள்ளி மைதானத்தில் விளையா டும் குழந்தைகளுக்கும், இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கும் அடிக்கடி நோய்கள் பரவுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 5, 2011 at 6:54 PM

    வேதனையான விஷயந்தான்

    அகமது தெரு குடியிருப்பு பகுதி மட்டும் அல்ல
    தினமும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கடந்து சென்று கல்வி பயிலக்கூடிய கல்வி வளாகங்கள் உள்ள முக்கியமான பகுதி என்பதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை

    மேலும் அந்தப் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணி கீழக்கரை வெல்பேர் அஷோஸியேஷனின் நேரடிப் பார்வையில் நடந்து வந்தது. அதில் என்ன குழப்பம் ஏற்பட்ட்து என புரியவில்லை

    எது எப்படி இருப்பினும் பகுதி மக்களுக்கு மட்டும் அல்ல கடந்து செல்லும் பள்ளி மாணவமணிகளுக்கும் தொற்று நோய் ஏற்படுவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் கீழக்கரை வெல்பேர் அஷோஸியேஷனும் கீழக்கரை நகராட்சியும் இணைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மேலும் நகராட்சி தலைவியும் அகமது தெரு மக்களால் நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலரும் கண் அயராது பெரும் முயற்சி எடுத்து குப்பைகளை நீக்கி வாக்களித்த நன் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க கீழக்கரை டைம்ஸ் மூலமாக வேண்டுகோள் வைக்கிறோம்

    நம்பினோர் கேடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

    ReplyDelete
  2. ahmed street mattum illamal keelakaraiyil ulla anaithu wardukalukum avaravar ward counsilar nalla murai theruvaiyum ooraiyum suthamaga vaithukollungal

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.