Wednesday, November 2, 2011

30க்கு மேற்பட்ட பொன்னிக்குருவிகள் பறிமுதல் ! வனத்துறை எச்சரிக்கை !




பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து ஏராளமான வெளிமாநில பறவைகளும் ,வெளிநாட்டு பறவைகளும் கடலோர மாவட்டஙகளில் குவிய தொட்ங்கியுள்ளது.குறிப்பாக இந்தியன் பிட்டா என்றழைக்கப்படும் பொன்னிக்குருவி அதிகளவில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பறவைகள் சரணாலயம்,சக்கரகோட்டை கண்மாய், மற்றும் அதன் சுற்றுப்புற உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது.
பறவைகளின் வருகைக்காக காத்திருந்த வேட்டைக்காரர்கள் தங்களின் பணியை செவ்வென தொடங்கிவிட்டார்கள்.
இவர்களால் பிடிக்கப்படும் பொன்னிக்குருவி ரூ30லிருந்து ரூ50 வரை கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்கப்படுகிறது.கம்பத்தான் என்றழைக்கப்படும் குருவிகளும் விற்கப்படுகிறது .



இந்நிலையில் கீழக்கரை பகுதி வனத்துறையினர் நடத்திய சோதனையில் விறபனைக்காக ஒருவரிடம் இருந்த 30க்கும் மேற்பட்ட குருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வகை குருவிகளை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறியாதாவது , பொன்னிக்குருவி வகை பறவைகளை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து கீழக்கரை முஜீப் கூறுகையில், பொன்னிக்குருவி மற்றும் கம்பத்தான் வகை இறைச்சி ருசியாக இருக்கும் என்ற காரணத்தினால் இவ்வகை குருவிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஒரு சிலர் இதை சீஸன் தொழிலாக செய்து வருகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.