Tuesday, November 29, 2011

கீழக்கரை நுழைவு வாயில் அருகே பயங்கர‌ விபத்து ! ஒருவர் பலிநெல்லை மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் சென்று மீன்களை வாங்கி கொண்டு திசையன்விளை நோக்கி சென்ற வழியில் கீழக்கரை நுழைவு வாயில் தூணில் சரக்கு ஏற்றும் ஜீப் ஒன்று பயங்கரமாக மோதியதில் திசையன் விளையை சேர்ந்த ஜீப் டிரைவர் ஜெயமுருகன்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,உடன் சென்ற திசையன்விளையை சேர்ந்த பொன் சுயம்புலிங்கம்(19), தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரை சேர்ந்த மோகன் ஆகிய இருவருடன் படுகாயமடைந்தனர்.காயமடைந்த இருவரும் 108 ஆம்புலண்ஸ் மூலம் ராமநாதபுரம் அழைத்து செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 comments:

 1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 29, 2011 at 10:05 PM

  மிகச் சமீபத்தில் அதே கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலையில்தான்
  கீழக்கரையை சார்ந்த இளம் கர்ப்பிணி பெண் அகால மரணம் எய்தினார்.

  அந்த கொடுமையான துயரச் சம்பவம் நினைவு அலையிலிருந்து மறையும் முன் மற்றும் ஒரு துயரச் சம்பவம்.
  தாங்க முடியலையடா படைத்தவனே. மரணித்தவர் வெளி ஊர்வாசியாக இருந்த போதிலும் சம்பவம் நடநத இடம் நாம் அனைவரும் அனுதினமும் பயணிக்கும் நெடுஞ்சாலையில் தானே.

  இந்த தருணத்தில் கனத்த இதயத்துடன் பொது மக்களின் சார்பில் கீழ்கண்ட பணிவான வேண்டு கோளை


  மரியாதைக்குரிய பகுதி சட்ட மனறம், பாராளும்மன்றம் உறுப்பினர்கள்

  மாவட்ட ஆட்சியர்,

  மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள்,

  மாவட்ட நெடுஞ்சாலை உயர் அதிகாரிகள்

  கீழக்கரை மற்றும் காஞ்சிரங்குடி கிராம அதிகாரிகள்

  மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்
  ஆகியோர் முன் சமர்பிக்கின்றேன்.

  கீழக்கரை ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அகத்தியர் கோவில் எதிர்புரம் உள்ள வண்ணண்துறை வளைவில் மற்றும் கோவிலின் இடதுபுரம் உள்ள வலைவில் உள்ள காட்டு கருவேல மரங்கள், பனை மரங்கள்,( இந்திய சில்க் ஹவுஸ் விளம்பர பலகை உட்பட ) வேரோடு களையப்பட வேண்டும். இருபுரத்திலும் வளைவை நெருங்கும் வாகனங்களுக்கு
  எதிர் வரும் வாகனங்கள் அறவே தெரிவதில்லை
  .மேலும் சமீப காலங்களில் இந்த குறிப்பிட்ட பகுதியில் பற்பல விபத்துக்கள் நடந்ததை அனைவரும் அறிவோம். மற்றோரு துயரச் சம்பவம் நடப்பதற்கு முன் நீக்கி விட்டால் பாதை தெளிவாக இருக்கும். வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு வளைவுகளும் தெளிவாக புலப்பட்டு விபத்தை தவிர்க்கலாம்.

  இது போன்று அதே நெடுஞ்சாலயில் திருப்புல்லாணி முக்கூட்டு சாலையிலும் காட்டு கருவேல மரங்களின் மறைப்பினால் விபத்துகள் ஏற்பட்டு சமீப காலத்தில் கல்லூரி மாணவியர் மாண்ட துயரச் சம்பவமும் நடந்தது உண்டு. இது போன்று தொடரத்தான் வேண்டுமா?
  ஆகவே அந்த பகுதியிலும் பார்வையை மறைக்கும் அனைத்து மரங்களும் வேரோடு களையப்ப்ட் வேண்டும்.

  மேலும் அதே பகுதியில் ஆதி திராவிடர் விடுதிக்கு சற்று எதிர்புரம் இடது பகுதியில் வாய்க்காலின் சுற்றுச் சுவர் ஒரு விபத்தின் காரணமாக தரை மட்டமாகி விட்டது. இதை அறியாத இருபுரத்திலிருந்து வரும் வெளியூர் வாகன ஓட்டிகள் அவசியத்தை முன்னிட்டு வளைக்க வேண்டிய சூல்நிலை ஏற்பட்டால் நிச்சயம் விபத்துகுள்ளாகும். அதற்கும் அவசியமாக உடனடியாக சுற்றுச் சுவர் கட்டப்பட வேண்டும்.
  அடுத்ததாக அதே நெடுஞ்சாலையில் தெற்குதரவை முக்கூட்டு சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ள மரங்களும், பயன்பாடு இல்லாத காவல்துறை கண்காணிப்பு கட்டிடங்களையும் உடனடியாக களையப்பட வேண்டிய அவசியமான ஒன்றாகும்.

  இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளூம் பொது மக்கள் பிரதிநிதிகளும் உடனடி நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்து மக்களின் உள்ளங்களை குளிர்விப்பார்களா? நம்புவோம். வேறு என்ன செய்வது

  (தொடரலாம்)

  ReplyDelete
 2. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 30, 2011 at 1:03 PM

  அதே நெடுஞ்சாலையில் இராமநாதபுரம் நகரை நுழையும் இடத்தில் அமைந்துள்ள ரயில்வே லெவல் கிராஸிங்கின் இரு சாலை தடுப்பு மேடைக்கு இடைப்பட்ட சாலையை கடக்கும் வாகனங்கள் படும் அவதி சொல்லும் தரமன்று. குறிப்பாக கர்ப்பிணிகள், கழுத்து வலி,தண்டு வட
  அறுவை சிகிச்சை செய்தவர்கள் படும் வலி வேதனையை காண சகிக்க முடியாது. பார்ப்பவர்களுக்கு உணர சாத்தியமில்லை. பட்டு அனுபவிப்பவர்களுக்குதான் மட்டும்தான் அதை உணர முடியும்.

  ராமநாதபுரம் மதுரை நெடுஞ்சாலையில் கமுதக்குடிக்கு அருகில் மற்றும் மானாமதுரை பைபாஸ் சாலையில் உள்ள ரயிலவே லெவல் கிராஸிங்களில் இருபுரமும் உள்ள சாலை தடுப்பு மேடையின் இடைப்பட்ட சாலையை வாகனங்களில் செல்லுபவர்கள் சொகுசாக செல்லும் விதமாக எவ்வளவு உன்னிப்புடன் பொருப்புடன் அமைத்திருக்கிறார்கள். இது இப்படி இருக்க கீழக்கரை சாலையில் மட்டும் என்ன கேடு வந்தது. இது கீழக்கரை வாழ் மக்களுக்காக ஏவப்பட்ட சாபக்கேடு. என்று தீருமோ நம்முடைய வேதனை.

  கொழுத்த கருப்பு பூனைக்கு யார் மணி கட்டுவது
  யாம் ஒன்றும் அறியோம் பராபரமே

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.