Friday, November 4, 2011

கீழக்கரை வடக்குத்தெருவில் மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளி திறப்பு விழா (படங்கள்)







































கீழக்கரை வடக்குத்தெருவில் புதுபிக்கப்பட்ட மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மாலை 5மணியளவில் பள்ளிவாசல் கட்டிடக்குழு தலைவர் சேகுமுகைதீன் தலைமையில் நடைபெற்றது .இவ்விழாவில் மொள‌ல‌வி ஜைனுல் ஆப்தீன் பாக‌வி(முன்னாள் முத‌ல்வ‌ர் ஜாமிஆ அல் பாக்கிய‌த்துஸ் ஸால‌லிஹாத் அர‌பிக்க‌ல்லூரி,வேலூர்),முப்தி முஹ‌ம்ம‌து ருஹீல் ஹ‌க் (முத‌ல்வ‌ர் ஜாமிஆ அல்வாருல் உலூம் அர‌பிக் க‌ல்லூரி,திருச்சி,த‌லைவ‌ர் திருச்சி மாவ‌ட்ட‌ ஜ‌மாத்துல் உல‌மா பேர‌வை) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வடக்குத்தெரு ஜமாத் தலைவர் பசீர்,ஜபருல்லா,இக்பால்,செய்யது இப்ராகிம்,அக்பர்கான்,முன்னாள் நகர்மன்ற தலைவர்ப‌ஷீர் அக‌ம‌து,முகைதீன் ,ரெத்தின‌ முக‌ம்ம‌து,முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை இய‌க்குந‌ர்க‌ள் யூசுப் சாகிப்,ஹ‌பீப் முக‌ம்ம‌து, ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்,அதிமுக‌ சிறுபாண்மை பிரிவு ந‌க‌ர் செய‌லாள‌ர் யாசின் ம‌ற்றும் கீழ‌க்கரையின் பல் வேறு ஜ‌மாத் த‌லைவ‌ர்க‌ளும், நிர்வாகிக‌ளும் க‌ல‌ந்து கொண்டு பேசின‌ர்.முக‌ம்ம‌து ர‌பீக் நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கினர்.ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. vision of kilakarai 2020November 4, 2011 at 7:17 PM

    திறப்பு விழா மிகவும் சிறப்பாக இருந்தது

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

    இன்று வெள்ளிகிழமை முதல் ஜும்மா தொழுகையை நடத்தினார்கள். முதல் மற்றும் இரண்டாம் தளம் ஊரின் பல பகுதி மக்களால் நிறைம்பியும் இருந்தது மனதிற்கு நிறைவாகவும் இருந்தது


    எல்லாப் புகழும் இறைவனுக்கே (2-ம் முறை)

    சிறப்பு அம்சங்கள்

    இஸ்லாத்தில் குறித்த நேரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கு ஏற்ப சரியாக மாலை 5 மணிக்கு துவக்கம் செய்தார்கள் பாரட்டுக்குறியது

    முதியவர்களும் மூட்டு வலிக்காரர்களும் எளிதாக இறை இல்லத்திற்குள் நுழைய வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாய்வு நடை மேடை அமைத்திருப்பது மீண்டும் பாரட்டுக்குறிய சிறப்பம்சம்

    சுமார் 1500 பேர் தாரளாமாக தொழக்ககூடிய அளவுக்கு காற்றோட்டமாக உள்ள முறையில் அமைத்திருப்பது பாரட்டுக்குறிய அடுத்த சிறப்பம்சம்

    பயானை தெள்ளத் தெளிவாக கேட்கும் முகமாக பல லட்சங்களை செலவழித்து ஒலிபரப்பு சாதனங்களை அமைத்திருப்பதையும் பாரட்டாமல் இருக்க முடியாது

    இன்னும் பல சிறப்பம்சங்கள் உண்டு
    பணிகள் முழுமையாக பூர்த்தியாகவில்லை

    உருவாக, உருவாக்க, உருவாக்கிய்
    அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக
    கீழக்கரை வாழ் அனைத்து மக்களும் பிரார்த்திப்போமாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

    குறிப்பு: சிற்சில குறைகளை மறப்போம் சிறப்புகளை மட்டும் மதிப்போம்

    ReplyDelete
  2. vision of kilakarai 2020November 4, 2011 at 7:54 PM

    இன்றைய ஜும்மாவின் கடைசி நிகழ்ச்சியாக கோயமுத்தூர் ஆலிம் ஒருவர் (பெயர் மறதியாகி விட்டது) சிலருக்கு பொருந்தும்படியான சிறப்பான பயானாக இருந்தாலும் மூமினான முஸ்லீம்கள் அனைவரும் என்றென்றும் மனதில் நிலை நிறுத்தி வைத்திருக்கக்கூடிய ஒன்றாகும்
    SHORT & SHOT என்று சொல்லுவார்களே அதுபோல அதாவது சுருக்கமானது நெத்தியடியானது.

    குறிபபு: சாய்வு நடைமேடை மேற்கு என்று இருப்பதை கிழக்கு என்று திருத்தம் கொள்ள வேண்டுகிறேன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.