Wednesday, November 16, 2011

மகளிருக்கு உபயோகமில்லாத மகளிர் சுகாதார வளாகம்




கீழக்கரை ஜின்னா தெருவில் கடந்த 2004ல் பொதுமக்கள் உபயோகத்திற்க்காக சொர்ணா ஜெயந்தி திட்டத்தின் கீழ் மகளிர் சுகாதார வளாகம் (கழிப்பறை) கட்டப்பட்டு அதில் மின்சார மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டி வசதியுடன் செயல்பட்டு வந்தது.பொது மக்களுக்கு பெரும் பயனாக இருந்தது அதன் பிறகு ஆறு வருடங்களாக உபயோகமில்லாமல் சுகாதார சீர்கேடுடன் பூட்டியே உள்ளது.
இது குறித்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது, கடந்த 7 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட இந்த கழிப்பறை ஒரு வருடம் மட்டுமே செயல்பட்டது பின்னர் திடீரென அங்கிருந்த மின்சார மோட்டரும்,பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியும் காணமல் போனது. இது குறித்து முந்தைய‌ நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .தற்போது பொறுப்பேற்று உள்ள புதிய நகராட்சி நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 7 வருடங்களுக்கு முன் செயல்பட்டது போல் மோட்டார் இணைப்புடன் தண்ணீர் வசதி செய்து கழிப்பறை செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து நகராட்சி சுகாதார அதிகாரியிடம் கேட்ட போது, இந்த புகார் பற்றி எனக்கு தெரியாது மேலும் பயன்பாடில்லாமல் உள்ள கழிப்பறைகள் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் நீங்கள் குறிப்பிட்டுள்ள கழிப்பறையையும் சரி செய்து மக்கள் பயன்பாடிற்கு விட ஏற்பாடு செய்வோம் என்றார்.

2 comments:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 16, 2011 at 7:37 PM

    இப்படித்தான் கடந்த காலங்களில் அதிகாரிகள் பணி செய்து அரசு திட்டங்களின் பயன்பாட்டை மக்கள் அடைய முடியாமல் செய்து விட்டார்கள்

    நீண்ட காலமாக ஊரில் சுகாதார ஆய்வாளர் இல்லாமல் இருந்து 2010 ஆரம்ப வாக்கில் திரு.சரவணன் சுகாதார ஆய்வாளராக பொறுப்பு ஏற்றார். பணி ஏற்ற உடனேயே அவருடைய கட்டுப்பாட்டில் கீழ் வரும் பணிகளை கண்காணித்து இருந்தால் இந்த குறை ஏற்பட்டிருக்காது.

    நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்

    சுகாதார ஆய்வாளர் அவரது வாக்குறுதிப்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஜின்னா தெருவில் உள்ளஅந்த மகளிர் சுகாதார வளாகம் வெகு சீக்கிரத்தில் பயன் பாட்டிற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே

    இந்த செய்தியை சுகாதார ஆய்வாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உங்களது சிறப்பான பணிக்கு மனமார்ந்த பாரட்டுக்கள். மேலும் இந்த பணி தொடர்கிறதா என்பதையும் கண்காணித்து தூண்டுகோளாக இருக்க வேண்டுகிறேன். ஏன் என்றால் தனி மனிதனை விட அமைப்பு சக்தி வாய்ந்தது என்பது எனது பணிவான கருத்து

    கீழ்க்கரையில் சீதன வீடுகள் கட்டுமானம், மராமத்து தொடர்ச்சியான பணியாக,காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் நகராட்சியில் நிரந்திர கட்டிட பொறியாளர் இல்லை. இதனால் மக்களுக்கு உண்டாகும் அசௌகரியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதையும் தலைவி, தொகுதி எம்.எல்.எ மற்றும் நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு செய்யும் சேவையாகவும் இருக்கும்

    ReplyDelete
  2. நன்றி உங்கள் பதிவுகள் அருமை . உள்ளூர் தகவல்களை நீங்கள் விரும்பினால் keelakaraitimes@yahoo.com மெயிலில் அனுப்பி தரலாம் செய்தியாக வெளியிட தயாராக உள்ளோம்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.