Saturday, November 12, 2011

கீழக்கரையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்! நகராட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை!




கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இம்முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை அதிகார் அங்காளரெட்டி,டாக்டர் அசின் ,ராமநாதபுரம் வட்ட வழங்கல் தாசில்தார் செழியன்,மின் வாரியத்துறை போர்மேன் ரிச்சார்ட்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன்,சுகாதார‌த்துறை அதிகாரி ச‌ர‌வ‌ண‌ன் ம‌ற்றும் அதிகாரிக‌ளும் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.இதில் பொது ம‌க்க‌ள் த‌ர‌ப்பில் 40க்கும் மேற்ப‌ட்ட‌ ம‌னுக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.இதில் பெரும்பாலான‌வை சுக‌தார ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ புகார்க‌ள் என கூற‌ப்ப‌டுகிற‌து.
இது குறித்து ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ கூறிய‌தாவ‌து, அனைத்து ம‌னுக்க‌ளையும் க‌லெக்ட‌ரின் பார்வைக்கு எடுத்து சென்று போர்க்கால‌ அடிப்ப‌டையில் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்துவேன் என்றார்.

புதிய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் பொறுப்பேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முத‌ல் முக்கிய‌ நிக‌ழ்வான‌ குறை தீர்க்கும் முகாமிற்கு ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா வ‌ருகை த‌ராத‌து பொதும‌க்க‌ளுக்கு பெரும் ஏமாற்ற‌த்தை அளித்த‌து.
இது குறித்து கீழ‌க்க‌ரை டைம்ஸ் சார்பாக நகராட்சி தலைவரிடம் கேட்ட‌போது , இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து என‌க்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. அத‌னால்தான் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லை என்றார்

2 comments:

  1. Ithu daan vottu pottu jeikavaitha makkalukku vaikkum muthal aappu....iniyum appugal todarum.....

    ReplyDelete
  2. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 12, 2011 at 8:03 PM

    அன்புடையீர்

    கீழக்கரை நகராட்சி தலைவியின் பதிலை நம்புவோமாக. அவரது கடமை உணர்வைப் பற்றி மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றுமில்லை

    மக்கள் குறை தீர்க்கும் முகாம் பற்றி விரிவான முறையில் பொது மக்கள் அறியும் வண்ணம் செய்யப்பட வேண்டும் இனியாவது சம்பந்த்ப்பட்டவர்கள் ந்டவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோமாக

    முகாம் சம்பந்தமாக அனைத்து ஜமாத், மற்றும் அனைத்து சமூக சங்கங்கள், பொது நல சேவை சங்கங்கள், கல்வி வளாகங்கள் ஆகியவற்றுக்கு பொது அறிவிப்பு செய்ய வேண்டுகோள் வைத்து தகவல் அனுப்ப வேண்டும்


    என்னுடைய தாழ்மையான கருத்து ஊர் நலனில் குறிப்பிடும்படியான அக்கறை கொண்ட கீழக்கரை டைம்ஸும் கீழக்கரை அஞ்சல் போன்றவை இது போன்ற முக்கிய அறிவிப்புக்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு ஏற்க வேண்டும்.

    கடும் மழை ஓய்ந்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. கீழ்க்கரையின் ஒரே பிரதான வீதியான வள்ளல் சீதக்காதி சாலையில் நடுத்தெரு ஜும்மா பள்ளியின் வணிக வளாகத்தின் முன் மழை நீர் கழிவு நீராக மாறி நகராட்சியின் சுகாதார சேவையை கொட்டடித்து மேளம் தட்டி பறை சாட்டிக் கொண்டிருக்கிறது இன்றளவும்

    நகராட்சியின் முதற் கூட்டம் வரும் 15-ம் தேதி நடக்க இருப்பதாக ஊரில் ஒரு வதந்தி உலா வருகிற்து. பார்ப்போம் (பெரு மூச்சு தான் வருகிறது)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.