Sunday, November 27, 2011

கட்டுமான பொருட்களை ரோட்டில் கொட்டுவதால் பொதுமக்கள் அவதி
கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் நடுரோட்டில் கட்டுமான பொருட்களை இறக்கி வியாபாரம் செய்து வருவதாலும் , ஜூம்மா பள்ளி அருகில் வாகனங்கள் இரண்டு புறங்களிலும் நிறுத்துவதாலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் பழைமை வாய்ந்த ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இந்தப் பள்ளியை பார்ப்பதற்காக தினமும் வெளிமாநிலங்களிலிருந்து குறிப்பாக கேரளாவிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளிவாசல் அருகில் இரண்டு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். மேலும் செங்கல், மற்றும் மணலை நடுரோட்டில் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி மாதக்கணக்கில் போட்டு வியாபாரம் செய்கின்றனர்.

இதனால், கீழக்கரை நகருக்குள் வரும் அரசு டவுன் பஸ்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. ஒரு சில வியாபாரிகள் மற்றும் வாடகை வாகன உரிமையாளர்களின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புக்கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், ‘கீழக்கரையில் வி.ஏ.ஓ சாவடியிலிருந்து பழைய பஸ்ஸ்டாண்டு வரையும், அதேபோல் லிட்டரரி கிளப்பிலிருந்து முஸ்லிம் பஜார் வரையும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதேபோல் கட்டுமானப் பொருட்கள் இறக்குவதற்கு நகராட்சியில் அனுமதிபெற்று கட்டணம் செலுத்தித்தான் இறக்க வேண்டும். ஆனால் மாதக்கணக்கில் போட்டு பொருட்களை விற்பனை செய்கின்றனர். ஊருக்கு வெளியில்தான் செங்கல், மணல், விற்பனை செய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாட்டுதுறை உத்தரவு இருந்தும் விதிமுறை மீறி ஊருக்குள் விற்பனை செய்யப்படுகிறது. இதைதடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கீழக்கரை நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான்(பொ) கூறுகையில், “இதுகுறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

5 comments:

 1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 27, 2011 at 7:11 PM

  நகராட்சியின் ஆணையரின் பதில் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
  மக்களாட்சி முறையில் சட்டங்கள் இயற்றுவதையும் அதை அமுல் படுத்த மக்களின் வரிப் பணத்தில் அதிகாரிகளை நியமிப்பதையும் கேளிக்குறியாக்குகிறது.
  பொது மக்களாக பார்த்து பொறுக்க முடியாத சூல்நிலையில் புகார் கொடுக்கும் வரை அலுவலகத்திலேயே அடைந்து கிடக்க எந்த நடைமுறை சட்டம் சொல்லுகிறது?
  ஒரு வேளை மந்திரி, எம்.பி, எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் யாராவது நகருக்கு அவசர வ்ருகை தரும் பட்சத்தில் பொருத்துக் கொள்ள மக்கள் அவர்களை முற்றுகை இட்டால் அது சமயம் இது போன்ற பதிலை அவர்களிடம் கூறுவாரர்களா?

  இவரை போன்ற பொறுப்பற்ற அதிகாரிகளின் செயலால்தான் கீழக்கரையின் நகர் அமைப்பு குட்டிச் சுவரானது. கடந்த காலத்தில் கீழக்கரை நகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் தன் பொறுப்பு உணர்ந்து மன்சாட்சிக்கு பயந்து செவ்வன செயல் பட்டிருந்தால் நகராட்சிக்கு அதிகமான வரி வருமானத்தை அள்ளி கொடுத்த நகர் மேம்பாடு இவ்வளவு சீர் கெட்டு இருக்குமா? தட்டிக் கேட்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் கண்டும் காணாமல் இருந்தது தான் ஒப்புக் கொள்ளப்பட்ட உச்சக்கட்ட உண்மை.
  (மின்சாரம் இல்லை. இணைப்பு கிடைத்ததும் இது தொடரக்கூடும்)

  ReplyDelete
 2. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 27, 2011 at 9:50 PM

  முதல் பதிவில் 15-ம் வரியில் பொருத்துக் கொள்ள மக்கள் என்பதை பொறுத்துக் கொள்ளாத மக்கள் என திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 3. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 27, 2011 at 9:53 PM

  ஊரின் சுகாதார சீர் கேட்டின் காரணமாக கடுமையான தொற்று வியாதியால் மக்கள் கொத்து கொத்தாக மருத்துவமனைக்கு அழையும் போது எனக்கு தகவல் வரவில்லை என்று அலுவலகத்திலே சாயா குடித்துக் கொண்டு அடைந்து கிடப்பாரோ? மக்களின் குறிப்பாக வறிய மக்களின் சாபத்திற்கு ஆளாதீர்கள்.மக்களின் வரி பணத்திலிருந்து வாங்கும் சம்பளத்திற்கு பொறுப்புடன் பதில் கூறுங்கள். செயல் படுங்கள். மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன. மாதம் முடிந்தால் சம்பளம் வருவதை யாரால் தடுக்க முடியும் என்ற மனோ பாவத்தை கீழக்கரை கடலில் குளித்து விட்டு சுத்தமாக மனதிலிருந்து தயவு செய்து தூக்கி எறிந்து விடுங்கள். இது உங்களுக்கும் நல்லது. உஆர் மக்களுக்கும் நல்லது.

  கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகளும் நகராட்சி அதிகாரிகளும் பொறுப்புடன் செயல் பட்டிருந்தால் கீழக்கரை நகர் வீதிகள் இந்த அளவுக்கு படிகட்டிக்களால் சுருங்கி இருக்குமா?

  அவசரத்திற்கு கர்ப்பிணிகளை, மாரடைப்புக்கு ஆளானவர்களை உடனடியாக ஆட்டோவிலோ மினி வேனிலோ கொண்டு செல்ல முடியவில்லை.
  பலர் கூடி தூக்கிச் செல்லக்கூடிய ஜனாஸாவை கொண்டு செல்ல கூடமுடியவில்லையே
  கல்லூரி, பாடசாலை செல்லும் வயது வந்த மாணவிகள், பள்ளி வாகனங்கள் குறுகிய வீதி காராணமாக வீட்டின் அருகே வர முடியாததால் சில இடங்களில் சில வீதிகளை கடந்து சென்று வாகனத்தில் ஏறி பள்ளி வளாகம் சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளதே.இது பொது மக்களால் கட்டிய படிக்கட்டுகளால் ஏற்படுகிறது என்றால் தடுக்க வேண்டிய பொறுப்பு யாருடையது?. சில சந்துக்களில் இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாது என்பது கொடுமையின் உச்ச கட்டம்
  சிந்திப்பீர் செயல்படுவீர்.

  இது விஷயத்தில் தொகுதி எம்.எல்.ஏ யின் மகத்தான பங்கு உண்டு. கீழக்கரையில் உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் (வெள்ளை சட்டை காரர்கள்) நியமித்து சாலை போக்குவரத்தை ஒழுங்கு செய்ய வேண்டும்.இதில் பள்ளி கல்லூரி மாணவ, மாண்விகளை பயன் படுத்தி அவர்களுக்கும், அவர்கள் மூலம் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  பூனைக்கு மணி கட்டுவது யார்?

  போக்குவரத்து இடையூர்கள்
  பள்ளி, கல்லூரிகள் திறக்கும், மூடும் நேரங்களில் உச்ச கட்டத்தில் உள்ளது.
  குறிப்பாக முதன்மை தபால் அலுவலத்திற்கு முனபும், பழைய பஸ் நிலையத்திற்கு முன்பும் உள்ளது. இந்த தருணத்தில் ஆண்கள், வ்னிதையர் கல்லூரி நிர்வாகத்திற்கு அன்பான வேண்டுகோள். நகருக்குள் பெரிய பஸ்களை தவிர்த்து மின் பஸ்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுங்கள்.

  ஆம்னி பஸ் காரர்களும் உங்கள் வாகனங்கள் புறப்படும், மற்றும் வந்தடையும் இடங்களை மாற்றி அமைத்து நகரின் போக்குவரத்து நெரிச்சலை குறைக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள்.

  இப்போது நிறைய ஆண்களும், (கோஷா) பெண்களும் தலைமை தபால் அலுவலகத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.காரணம் இப்போது மின் இணைப்பு கட்டணம், தொலைபேசி மற்றும் வளைத்தள கட்டணம், வெஸ்டன் மணி டிரான்ஸ்பரில் வெளி நாட்டு பணம் பெற வசதி உள்ளது. மேலும் தபால் அலுவலம் இருக்கும் வீதியில் தான் அனைத்து வங்கிகளும், பொது நூலகமும் உள்ளது.த்டையை மீறி ஆட்டோக்களும் நிறுத்துப்டுகின்றன. ஆகவே இப்போது எல்லாம் அந்த்ப் பகுதியில் பகல் பொழுதில் உச்சக்கட்ட போக்குவரத்து நெரிச்சல். அதனால் க்டுமையான சட்ட நடவடிக்கை மூலம் மட்டுமே ஒழுங்கு செய்யமுடியும். போக்குவரத்து காவல் துறையின் சேவை கட்டாயமான அவசர , அவசிய தேவை. இவர்களின் லஞ்ச லாவண்ணியம் அற்ற கடுமையான நடவடிக்கை மூலமே வீதியில் கேட்பாரற்று கிடக்கும் கட்டுமான பொருட்களை நீக்க முடியும் என்பதுதான் சத்தியமான உண்மை.

  ReplyDelete
 4. "கட்டுமான பொருட்களை ரோட்டில் கொட்டுவதால் பொதுமக்கள் அவதி" என்கிற செய்தியோடு இணைக்கப்பட்ட புகைப் படத்தில் காணும் மின் கம்பத்தின் பரிதாப நிலையையும் கவனத்தில் கொண்டு சம்பத்தப் பட்ட அதிகாரிகளை அணுகி ஆவண செய்யவும். அன்புடன் MJS, Riyadh.

  ReplyDelete
 5. மங்காத்தாவின் தங்கச்சி மகன் அவர்களுக்கு, /கருத்துக்கள் அருமை.மங்காத்தாவின் தங்கச்சி மகன் என்ற பெயரில் எழுதும் நீங்கள் விரும்பினால் மக்களுக்கு பயனுள்ள கட்டுரைகளை எழுதி அனுப்புங்கள். நமது வலைதளத்தில் வெளியிடுவோம்.

  MJS/ அவர்களுக்கு,/ புகைபடத்தில் இன்னோரு பிரச்சினையும் இணைந்துள்ளது என்று நாங்கள் கவனிக்க தவறியதை சுட்டிகாட்டியதற்கு மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க‌ள்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.