Wednesday, July 11, 2012
கீழக்கரை கல்லூரியில் 750 மாணவ, மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும் பயிற்சி !
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் மற்றும் முதலாம் ஆண்டு சார்பாக முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 'முதலாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இலக்கு நிர்ணயித்தல்" ஆலோசனை பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார் ,தாளாளர் யூசுப் சாகிப் விழாவை துவக்கி வைத்தார்.பொறியியல் கல்லூரி முதல்வர் ஜகாபர் வாழ்த்துரை வழங்கினார். விழாவை தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை கிருஸ்ணவரதராஜன் நடத்தினார்.
பெற்றோர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுதல்,இலக்கு நிர்ணயித்தல்,ஆளுமைதிறன் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் 750 மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. விழாவின் இறுதியில் இளமுருகு நன்றி கூறினார்.ஒருங்கினைப்பாளர் சேக் தாவுத் உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.