Sunday, February 12, 2012
எம்பிஏ பட்டதாரியான கீழக்கரையின் முதல் சப்- இன்ஸ்பெக்டர் பயிற்சி நிறைவு!
முகம்மது அனஸ்
பயிற்சியின் போது..
கீழக்கரையில்... பழைய படம்
கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்னை புதுக்கல்லூரியில் 2005 - 2008 ஆண்டுகளில் பி.காம் பட்டபடிப்பை முடித்த இவர் தொடர்ந்து மேற்படிப்பான எம்.பி.ஏ. 2008 - 2010 வரை கீழக்கரை சதக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இவர் அரசு தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.கடந்த ஒரு ஆண்டாக சப் இன்ஸ்பெக்டரக்கு உண்டான பல் வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். வரும் 15ந்தேதி இவரின் பயிற்சி நிறைவு பெறுகிறது.
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.இதில் கீழக்கரையை சேர்ந்த சப்-இன்ஸ்பெடராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனஸ் தனது பயிற்சியை நிறைவு செய்கிறார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அனசிடம் கீழக்கரை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து பயிற்சி நிறைவு குறித்து கேட்ட போது,
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.எல்லா புகழும் இறைவனுக்கே.இப்பணிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது எனது பெற்றோர்தான.மேலும் வாழ்த்துக்களையும்,ஆதரவையும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இது தொடர்பாக சென்ற வருடம் வெளியிடப்பட்ட முந்தைய செய்தி...
http://keelakaraitimes.blogspot.com/2011/03/blog-post_6210.html
Subscribe to:
Post Comments (Atom)
dear anus , iam your child hood friend .Conragulation
ReplyDeleteவாழ்த்துக்கள் அனஸ்....தங்களின் பணி சிறக்க இறைவனிடம் துவா செய்கிறேன்....
ReplyDeleteall the best
ReplyDeletemahathir
MASHA ALLAH
ReplyDeleteALL PRAISE IS DUE TO THE ALMIGHTY ALLAH... I EXPRESS MY SINCERE GRATITUDE TO EDITORS AND ALL OTHERS IN KILAKARAI NEWS TEAM.. ZASAKALLAH HAIRU....
ReplyDeleteALHAMDULULLAH... BEST WISHES MACHAN....
ReplyDeleteஎங்க வீட்டு மாப்பிள்ளைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் , நிலத்திலஞ்சா தைரியமும் கொண்டு, ஊழலையும், இலஞ்சத்தையும் வென்று, தமிழக காவல் துறையில் மாபெரும் இடத்தை நோக்கி தாங்கள் வெற்றி நடை போட இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஅன்புடன்
கீழை இளையவன்
மகிழ்ச்சி தரும் செய்தி..
ReplyDeleteசகோ. சப்-இன்ஸ்பெக்டர் அனஸ் அவர்கள் இறைவனுக்கு மட்டுமே அஞ்சி மக்களுக்கு நற்சேவையாற்ற நாம் எல்லோரும் பிராத்திப்போம்.