தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டம் கிராமபுறங்களை சேர்ந்தவர்களுக்கு இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார். பயிற்சி கண்காணிப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். மகளிர் திட்ட இணை இயக்குநரும் திட்ட அதிகாரியுமான சுகுமார் பயிற்சியை துவங்கி வத்தார் மாவட்டத்தின் கிராமபுறங்களிலிருந்து டீசல் மெக்கானிக்,வெல்டிங்,மற்றும் பேப்ரிகேஷன்,கார்,ஜேசிபி,ஓட்டுநர் பயிற்சிகளுக்கு 125 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்று மாத கால ஊக்கதொகையுடன் நடைபெறும் இப்பயிற்சியின் நிறைவில் உரிய பணி நியமனம் செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாலிடெக்னி திட்ட அலுவல யேசுவா,மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவி திட்ட அலுவலர் பொன்குமார் ஆகியோர் பயிற்சியின் நோக்கம் மற்றும் திட்டம் பற்றி பேசினர்.பயிற்றுநர் நாதர்ஷா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.