Thursday, February 16, 2012

கீழக்கரை நகராட்சியின் ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிக‌ளை நான் த‌டுக்க‌வில்லை .. க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகீம் !


நகராட்சியில் தற்போது நிலவும் ஒற்றுமையின்மைக்கும், பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? மக்கள் நலப்பணிகள் நடைபெறாமல் தடுக்கும் கவுன்சிலர்களில் 18-வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் முக்கிய பங்கு வகிப்பதாக குற்றச்சாட்டு குறித்து க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகீமிட‌ம் கீழக்கரை டைம்ஸ் சார்பாக‌ கேட்ட‌ போது அவ‌ர் பதிலளித்தார்.

கேள்வி: கீழக்கரையில் மக்கள் நலப்பணிகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக நீங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே?

பதில்: நமது ஊரில் மக்கள் நலப்பணிகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என பாடுபடும் உண்மையான சமூக நலனில் அக்கறை உள்ளவன் நான் என்பதை பொதுமக்களுக்கும் நான் கூறி தெரிய வேண்டியதில்லை.
கடந்த காலங்களில் ஊழலே தலையாய நிலைபாடாக கொண்டு அந்த நகராட்சி நிர்வாகத்தால் நமது நகர் மக்கள் அடைந்த வேதனைகள் ஏராளம்.கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகளை நாம் எந்த அளவு விமர்சனம் செய்திருகின்றோம் என்பதையும் அறிவோம். கடந்த ஆட்சியில் பல கோடி ஒதுக்கப்பட்டு நமது கீழக்கரையில் எந்த உருப்படியான திட்டமும் நடைபெறவில்லை. இதை உணர்ந்த மக்கள் நங்கு சிந்தித்து எங்களை தங்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்திருக்கிறார்கள். தேர்வு செய்த பொது மக்களின் சாபத்திற்க்கு ஆளாக கூடாது என்பதால்தான் இந்த நகர் மக்களுக்கு முதலில் என்ன தேவையோ அதை செயல்படுத்துங்கள் என்று எங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றோம் என்பதுதான் உண்மை.

கேள்வி: சேர்மன் அவர்களுடன் அவருடைய கணவரும் அவருடைய உறவினர்களும் உடன் வரக்கூடாது என துணைச்சேர்மன் ,நீங்கள் உள்பட சில கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறதே ?ஏன் கணவர் உடன் வரக்கூடாதா ?

பதில்: இந்த கேள்வியை தாங்கள் கேட்பது வேதனையாக உள்ளது. இப்படி ஒரு தவறான செய்தியை மக்கள் தன்மீது அனுதாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே இதை அவர்கள் தரப்பு கூறி வருகின்றார்கள். சேர்மன் அவர்களுடன் இன்னும் ஏழு பெண் கவுன்சிலர்கள் இருகின்றார்களே அவர்களை பற்றி இவர்கள் ஏன் கவலை படவில்லை. எந்த இஸ்லாமிய பெண்ணும் வெளியில் வரும்போது தக்க துணையுடன் வரவேண்டும் என்பது இறைக்கட்டளை. இதற்கு மாற்றமாக யார் கூறினாலும் உண்மையான மூஃமினாக இருக்க முடியாது. அவர் துணையாக வருவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. நாங்கள் கூறுவதையெல்லாம் நிர்வாகத்தில் அவர்களுடைய கணவரோ, உறவினறோ நேரிடையாக தலையிட கூடாது என்பது மட்டும்தான். இப்படிபட்ட சம்பவம் கடந்த நான்கு மாத காலமாக நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை நடந்துள்ளது என்பதை தாங்களும் பொது மக்களும் அறிந்ததே. இனி வரும் காலங்களில் இப்படிபட்ட தலையீட்டை எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம்.

கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பகுதிகளில் ஊழல் மலிந்து இருந்ததுடன் மக்கள் திட்டங்கள் உருப்படியாக சென்று அடையவில்லை என்பது வரலாறு.இதை உணர்ந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் கணவன், உறவினர்கள் தலையிட கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.


கேள்வி: தங்கள் 18வது வார்டை முறையாக கவனிப்பது இல்லை என கூறப்படுகின்றதே?

பதில்: கடந்த காலங்களில் எங்கள் வார்டில் பல தெருவிளக்குகள் எறிவது இல்லை. தற்போது அனைத்து விளக்குகளும் எறிந்து கொண்டு இறுக்கின்றது. இதற்காக நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன். தங்கள் கீழக்கரை டைம்ஸ் சுட்டிக்காட்டிய சின்னக்கடை தெரு பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றி இன்று வரை சுத்தமாக வைக்க முயற்சி செய்கின்றேன். விரைவில் சுகாதாரத்தை வலியுறுத்தி அறிவிப்பு பலகை வைக்க ஆவண செய்ய இருக்கின்றேன். வார்டு மக்கள் நலன் கருதி சுமார் 8 இடங்களில் குடிநீர் குழாய் அமைக்க நகராட்சி நிர்வாகத்தை கேட்டு இருக்கின்றேன். அரசு அறிவித்துள்ள முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் மருத்துவ உதவித் தொகை தகுதி உள்ள நபர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன்.

கேள்வி: தற்போது பல நல்ல திட்டங்களை நகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றது. குறிப்பாக கீழக்கரையில் பூங்கா அமைக்க நடவடிக்கை என்று பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றதே இதை பற்றி உங்கள் கருத்து?

பதில்: கடந்த முறை கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைப்போம் என்று பதவிக்கு வந்தவர்கள் கீழக்கரையையே குப்பை நகராக மாற்றி தன் நிலைகலை உயர்த்திக் கொண்டார்கள். தற்போது கீழக்கரைக்கு முறையான குடிநீர் வினியோகம், குப்பைகளை முழுமையாக நீக்க ஆக்கபூரவமான நடவடிக்கை, வாருகால்களில் மூடி அமைத்தல் இதை தான் தற்போது நகர் மக்கள் எதிர்பார்கின்றார்கள். மலேரியா மருந்து மற்றும் புகை அடிக்கப்பட்டு பல நாட்களாகி விட்டது. இதனால் மக்கள் நோய்களால் அவதி படுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் இதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இந்நகர் மன்றம் பதவி ஏற்று 4 மாதம் ஆகியும் சுகாதாரத்தில் பழைய நிலையே நீடிக்கின்றது என்பது வேதைனையாக இருக்கின்றது.


கேள்வி: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிறப்புக் கூட்டத்தை புறக்கணித்த காரணம் என்ன?

பதில்: கீழக்கரை வாழ் நண்பர்களுக்கும், நடுநிளையாலர்களுக்கும் உங்கள் இணையதளம் மூலம் என் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். இந்தியாவை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை நாளாக உள்ளது. ஆனால் கீழக்கரை போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பானையாக வாழும் நகரங்களில் கல்விக்கூடங்களும், வியாபார நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைதான் விடுமுறையாக இருகின்றது. வெள்ளிக்கிழமை காலையில் நகர்மன்ற கூட்டம் நடத்தினால் ஜும்மா தொழுகைக்கு செல்ல வேண்டும் என்பதால் முழுமையான விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது. மாலை நேரம் கூட்டம் நடத்தினால் இந்த விடுமுறை நாளை குழந்தைகளுடன் கழிக்க முடியாது. கவுன்சிலர்களான எங்களுக்கும் உணர்வு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த நகர் மன்ற கூட்டங்களில் அனைத்து கவுன்சிலர்களும் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்த வேண்டாம் என்று கூறினார்கள் இதை மரியாதைக்குரிய சேர்மன் அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஆனால் கடந்த நகர்மன்ற கூட்டம் கவுன்சிலர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதனால் ஜனநாயக வழியில் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்து முறையாக நகர்மன்ற கவனத்திற்க்கு எழுத்து பூர்வமாக தெரிவித்து புறக்கணிப்பு செய்தேன். என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்பெரும்பான்மையான கவுன்சிலர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதால் தான் புறக்கணிப்பு செய்தேன். இப்படிபட்ட ஜனநாயக வழி போராட்டம் தொடரும்.


கேள்வி: கடந்த முறை நகராட்சி கூட்டத்தில் விடப்பட்ட டெண்டரை ஏன் எதிர்த்தீர்கள்? திட்டம் நிறைவேறவில்லை என்றால் அரசு நிதியை திரும்ப பெற்று விடும் என்று கூறப்படுகிறதே?இதனால் கீழக்கரையின் நலனுக்கு பாதிப்பு ஏற்படாதா?

பதில்: நாங்கள் கூறுவது எல்லாம் இந்த நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்யவேண்டும் என்பதுதான். கீழக்கரைக்கு சாலைகள் மட்டும் அமைப்பதால் பெரும் அளவில் முறை கேடுகள் மட்டுமே நடைபெறும். எனவே முதலில் குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் கழிவு நீர் வாய்கால்களை சீரமைக்க வேண்டும். அதன்பின் தான் சாலை அமைக்க வேண்டும் என்பதால் தான் இந்த டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தினோம். மேலும் டெண்டர் அவசர கதியில் விடப்பட்டதால் முறையாக விதிகள் பின்பற்றபடவில்லை என்பதும் ஒரு காரணம். இதனால் நிதி திரும்ப சென்றுவிடும் என்பது எல்லாம் கிடையாது . காரணம் நகராட்சிக்கு ஒதுக்கப்படும் எந்த நிதியும் எக்காரணம் கொண்டும் திரும்ப அரசு பெறாது. அது நமது நகராட்சியின் பொது நிதியில் சேர்த்துக் கொள்ள நகர்மன்றம் நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் நோக்கம் எல்லாம் மக்கள் வரிப்பணம் உண்மையாக மக்களை சென்று அடைய வேண்டும் என்பது மட்டுமே.

கேள்வி: நகராட்சியில் நிலவும் ஒற்றுமையின்மைக்கு என்னதான் தீர்வு? உங்கள் கருத்து என்ன?

பதில்: நாங்கள் முன் வைக்கும் அனைத்து காரணங்களும் நியாயமானவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இங்கு நிலவும் ஒற்றுமையின்மையை போக்க உண்மையான சமூக நலனில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னிலையில் அனைவரும் அமர்ந்து பேசி ஒரு சிறப்பான நகராட்சி நிர்வாகம் அமைய நாம் அனைவரும் திட்டமிட்டு செயல்பட முயற்சி செய்யலாம் என்பது எனது கருத்தாகும். இதற்காக உங்களை போல பத்திரிக்கையாளர்கள் முயற்சி மேற்கொள்ளலாம். மரியாதைக்குரிய சேர்மன் அவர்கள் நகராட்சி நிர்வாகம் பற்றி ஆலோசனை கேட்க தகுதி உள்ளவர்களையும், நல்லவர்களையும் ஆலோசகர்களாக தேர்வு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

13 comments:

  1. வெளிநாடுFebruary 16, 2012 at 7:01 PM

    Dearகீழக்கரை டைம்ஸின்(avl),
    நாங்கள் சொந்தங்களை பிரிந்து,சோகங்களை சுமந்தவர்களாய்,வருவாய் தேடி,வெளி நாட்டில் வசித்துவருகிறோம்.அதனால் அடைந்த வேதனைகள் ஏராளம்.ஆகையால் இந்த பிரச்சனைக்குறிய (18&12வது வார்டு)தயவுசெய்து எந்த பிரயோஜனமும் இல்லாத இந்த (இரு வார்டு கவுன்சிலர்) சம்பந்தமாக செய்திகளை,'கீழக்கரை டைம்ஸில்' வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

    இப்படிக்கு
    வெளிநாடு.

    ReplyDelete
  2. இன்று காலையில் 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாகீம் காக்காவை சந்திக்க நேர்ந்த போது நான் அவர்களிடம் முன் மொழிந்த வார்த்தைகள் தங்கள் பார்வைக்கு:

    "தங்களிடம் கீழக்கரை மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைத்த சில முக்கியமான கேள்விகளுக்கு, தாங்கள் அளித்துள்ள விளக்கங்கள் வரவேற்க்கத்தக்கது. அதே நேரம், தாங்களும், நாம் நிறுத்திய வேட்பாளர் வரவில்லை என்பதற்காக, எந்த வித காழ்ப்புணர்ச்சிக்கும் இடமின்றி, மிகுந்த கவனத்தோடும், நாடு நிலை மாற எண்ணத்தோடும், மனிதாபிமான அடிப்படையில், நகராட்சித் தலைவர் சில விசயங்களை, சிறப்பாக அணுகும் பொருட்டு அவர்களுக்கு உங்களுடைய அறிவுரைகளை, செயல் திட்டங்களை நேரடியாக தெரிவியுங்கள்.. அவர்களும் நீங்கள் மட்டுமல்லாது, நகராட்சித் துணை தலைவர் அவர்களிடமிருந்தும், அனைத்து கவுன்சிலர்களிடமிருந்தும் நல்ல பல ஆலோசனைகளை பெற காத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    கடந்த நான்கு மாதத்தில் உங்கள் அனைவருக்குல்லும் எழுந்த அனைத்து கசப்புணர்வுகளையும் மறந்து, இனி வரும் காலங்களிலாவது ஒற்றுமையோடு செயலாற்ற, அனைவரும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ள ஆர்வம் காட்டுங்கள். உங்களுக்குள்ளான அனைத்து பிணக்குகளும், முறையாக பேசப்பட்டு, எந்த எந்த இடங்களில் பிரச்சனைகள் உருவாக்கம் பெறுகிறதோ... அவற்றை எந்த இலாப நோக்குமின்றி, தங்களுடைய கண்ணியத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு, நடு நிலைமையோடு முடிவு மேற்கொள்ளுங்கள். நீங்கள் இரண்டு குழுவாக, சிறப்பாக செய்து கொண்டிருக்கும் பணிகளை, ஒற்றுமையோடு, ஒரே குழுவாக, இன்னும் சிறப்பாக செய்து முடிக்க ஆவன செய்யுங்கள்"

    என்று நம் நகர் நலனை கருத்தி கொண்டு பேசியதை, விளங்கி கொண்டுள்ள காக்கா அவர்கள் அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளில் நிச்சயம் ஈடுபடுவதாக உறுதி அளித்தார்கள்.

    மேலும் இந்த கீழக்கரை செய்திகள் வலை தளத்தில், இன்னும் முகம் காட்டிக் கொள்ள மறுக்கும் 'திண்ணை தோழர்' அவர்கள், 'உண்மை' பேசுபவர், 'வெளி நாடு', 'சீலா மீன் செம்மறியாடு' என்று இன்னும் எத்தனையோ பேர்கள்.... பல நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும், அவை ஆற்றில் இறங்கிய மணல் குதிரை போலவே, அங்கீகரிக்கப் படாமல் கரைந்து விடுகிறது. ஆகவே, நம் ஊர் நலனில் அக்கறை கொண்ட தோழர்கள் அனைவரும், நல்ல உறுதியான தைரியத்துடன், சொந்தப் பெயரில் , சொந்த முகத்தில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, தங்களுடைய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் தாங்கள் அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் சமயம், உண்மை நிலவரங்களை, தொலை பேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பகிர்ந்து கொள்ள ஏதுவாக அமையும்.

    அன்புடன்
    கீழை இளையவன்

    ReplyDelete
  3. இன்று காலையில் 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாகீம் காக்காவை சந்திக்க நேர்ந்த போது நான் அவர்களிடம் முன் மொழிந்த வார்த்தைகள் தங்கள் பார்வைக்கு:

    "தங்களிடம் கீழக்கரை மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைத்த சில முக்கியமான கேள்விகளுக்கு, தாங்கள் அளித்துள்ள விளக்கங்கள் வரவேற்க்கத்தக்கது. அதே நேரம், தாங்களும், நாம் நிறுத்திய வேட்பாளர் வரவில்லை என்பதற்காக, எந்த வித காழ்ப்புணர்ச்சிக்கும் இடமின்றி, மிகுந்த கவனத்தோடும், நாடு நிலை மாற எண்ணத்தோடும், மனிதாபிமான அடிப்படையில், நகராட்சித் தலைவர் சில விசயங்களை, சிறப்பாக அணுகும் பொருட்டு அவர்களுக்கு உங்களுடைய அறிவுரைகளை, செயல் திட்டங்களை நேரடியாக தெரிவியுங்கள்.. அவர்களும் நீங்கள் மட்டுமல்லாது, நகராட்சித் துணை தலைவர் அவர்களிடமிருந்தும், அனைத்து கவுன்சிலர்களிடமிருந்தும் நல்ல பல ஆலோசனைகளை பெற காத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    கடந்த நான்கு மாதத்தில் உங்கள் அனைவருக்குல்லும் எழுந்த அனைத்து கசப்புணர்வுகளையும் மறந்து, இனி வரும் காலங்களிலாவது ஒற்றுமையோடு செயலாற்ற, அனைவரும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ள ஆர்வம் காட்டுங்கள். உங்களுக்குள்ளான அனைத்து பிணக்குகளும், முறையாக பேசப்பட்டு, எந்த எந்த இடங்களில் பிரச்சனைகள் உருவாக்கம் பெறுகிறதோ... அவற்றை எந்த இலாப நோக்குமின்றி, தங்களுடைய கண்ணியத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு, நடு நிலைமையோடு முடிவு மேற்கொள்ளுங்கள். நீங்கள் இரண்டு குழுவாக, சிறப்பாக செய்து கொண்டிருக்கும் பணிகளை, ஒற்றுமையோடு, ஒரே குழுவாக, இன்னும் சிறப்பாக செய்து முடிக்க ஆவன செய்யுங்கள்"

    என்று நம் நகர் நலனை கருத்தி கொண்டு பேசியதை, விளங்கி கொண்டுள்ள காக்கா அவர்கள் அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளில் நிச்சயம் ஈடுபடுவதாக உறுதி அளித்தார்கள்.

    மேலும் இந்த கீழக்கரை செய்திகள் வலை தளத்தில், இன்னும் முகம் காட்டிக் கொள்ள மறுக்கும் 'திண்ணை தோழர்' அவர்கள், 'உண்மை' பேசுபவர், 'வெளி நாடு', 'சீலா மீன் செம்மறியாடு' என்று இன்னும் எத்தனையோ பேர்கள்.... பல நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும், அவை ஆற்றில் இறங்கிய மணல் குதிரை போலவே, அங்கீகரிக்கப் படாமல் கரைந்து விடுகிறது. ஆகவே, நம் ஊர் நலனில் அக்கறை கொண்ட தோழர்கள் அனைவரும், நல்ல உறுதியான தைரியத்துடன், சொந்தப் பெயரில் , சொந்த முகத்தில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, தங்களுடைய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் தாங்கள் அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் சமயம், உண்மை நிலவரங்களை, தொலை பேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பகிர்ந்து கொள்ள ஏதுவாக அமையும்.

    அன்புடன்
    கீழை இளையவன்

    ReplyDelete
  4. செய்யது ரியாஸ்February 18, 2012 at 7:59 AM

    ஒரு வார்டின் முக்கிய தேவைகள். தெருவிளக்குகள் எந்த குறைவின்றி எரிதல் , ரோட்டோரங்களில் கிடக்கும் குப்பைகளை அகற்றுதல் , குழாய்நீர் அமைத்து கொடுத்தல் போன்ற சேவைகளை 18வது வார்டு கவுன்சிலர் திறன் பட செய்துவருகிறார். Vice chairman பதவிக்கு ஓட்டு போடுவதற்கும் பெரும் தொகையை எல்லா கவுன்சிலர்களும் வாங்கினார்கள் ஆனால் இவர் அல்லாஹ்க்கு பயந்தும் தனக்கு ஓட்டு போட்ட மக்களின் மரியாதையை காப்பாற்றவும் இவர் பணம் வாங்கவில்லை.
    முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)
    அஸ்ஸலாமு அலைக்கும் கீழக்கரை டைம்ஸ் நிர்வகி அவர்களே சில தெளிவில்லாத சகோதர்கள் நீங்கள் இந்த செய்தியை போட வேண்டாம் அந்த செய்தியை போட வேண்டாம் என்று சொல்வதை காதில் வாங்கி கொள்ள வேண்டாம் உங்கள் செய்திகள் அனைத்தும் திறன் படவும் , நேர்மையானதாகவும், நடுநிலையாகவும் இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் உங்கள் பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  5. கரையில் இருந்துFebruary 18, 2012 at 8:59 AM

    இவரை பற்றி அவதுரும்,அசிங்கமான செய்திகள்,சமிப காலமாக வந்து கொண்டு இருப்பது வேதனையே !!!
    இதற்கு ஏன்றே ஒரு குறிபிட்ட நபர்கள் அவதுறு செய்து கொண்டு இருகிறார்கள் !!!

    இவருடைய பேட்டியை வைத்தே புரிந்து கொள்ள முடியும் இவரின் தன்மையை !!!

    வாழ்க இவருடைய போராட்டம் !!!
    வளர்க இவருடைய பணி !!!

    ReplyDelete
  6. கரையில் இருந்துFebruary 18, 2012 at 9:07 AM

    நாங்கள் சொந்தங்களை பிரிந்து,சோகங்களை சுமந்தவர்களாய்,வருவாய் தேடி,வெளி நாட்டில் வசித்துவருகிறோம்.அதனால் அடைந்த வேதனைகள் ஏராளம்.ஆகையால் இந்த பிரச்சனைக்குறிய (18&12வது வார்டு)தயவுசெய்து எந்த பிரயோஜனமும் இல்லாத இந்த (இரு வார்டு கவுன்சிலர்) ????

    என்னது உங்களுடைய வெளிநாட்டு மோகத்துக்கு இந்த இவர்கள் தான் காரணமா ????
    என்பா இது ???? இவர்களாவது வெளிநாடு என்ற கொடூரத்தில் சிக்காமல் ,அடம்பரத்துக்கு ஆசை படாமல் ஊருக்காகவும்,தான் தெருவுக்காகவும் இந்த மானம் கேட்ட வெளிநாட்டு வாழ்கையை துறந்து இருகீரர்களே இது போதாதா ????

    தைரியம் இருந்தால் இவர்களை போல் ஊரில் இருந்து உங்கள் குடும்பத்திற்கு மட்டும் வேலை செய்யுங்கள் பார்போம் !!!!

    ReplyDelete
  7. அருமையான கருத்து ரியாஸ் அவர்களே !!!

    தன்கள் சொல்வது முற்றுலும் உண்மை !!!
    அவர் அல்லாஹுக்கு பயந்து பணம் வாங்க வில்லை !!!
    இது போதும் இவரிடத்தில் நிச்சயமாக நீயாயம் இருக்கும் இறைவன் நாடினால் !!!

    அருமையன் இறை வசனம் !!!

    ReplyDelete
  8. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கீழக்கரை மக்களுக்கு இன்னும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

    ReplyDelete
  9. இங்கு யாரும் யாருக்கும் எதிரி கிடையாது. தங்கள் செய்யும் செயல்களில் உள்ள குறை நிறைகளை நாங்கள் எடுத்து கூறுகின்றோம். நட்புடன் ஜெகதீஷ்

    ReplyDelete
  10. உங்கள் கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தில் 18வது வார்டு கவுன்சிலரும் மக்கள் நல பாதுகாப்பு கழக செயளாலரும் முகைதீன் இபுராஹீம் அவர்களின் பேட்டியை கண்டு உண்மையில் உங்கள் இணையதளத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு இணையதளத்தில் அவருடைய பெயரை போட்டு விமர்சனம் செய்ய தைரியம் இல்லாமல் அவரை பற்றி விமர்சனம் செய்து இருந்தது என்னை மிகவும் வேதனை அடைய வைத்தது இவர் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளவர். இவருடன் கழகத்தில் இருக்கும் அனைவரும் யாரிடமும் எந்த நன்கொடைகளும் எதிர்பார்க்காமல் தன் சொந்த செலவில் ஏழை மக்களுக்கும் இந்த நகருக்கும் எத்தனையோ நல்ல காரியங்களை முனைப்புடன் செய்து வருகின்றார் என்று நான் நன்கு அறிவேன். இவரை பற்றி விமர்சனம் செய்தவர்கள் மனு நீதி சோழன் என கூறியிருக்கின்றார்கள். வண்ணாந்துறை வளைவுகளில் மனு மூலம் வேகத்தடை அமைத்ததில் இருந்து BSNL அனைத்து சேவைகளும் கீழக்கரையில் செயல்பட அரசின் கதவுகளை தட்டி இந்த மனுநீதி சோழ இளவரசன் செயல்படுத்தி இருக்கின்றார் என்று கீழக்கரை மக்கள் அறிவார்கள். நன்மைக்கு குரல் கொடுக்கும் இவரை பாராட்டாமல் கூட இருங்கள். ஆனால் உண்மைக்கு புறம்பாக விமர்சனம் செய்யாதீர்கள் Plzzzzzzzzzzzz..........

    ReplyDelete
  11. உங்கள் கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தில் 18வது வார்டு கவுன்சிலரும் மக்கள் நல பாதுகாப்பு கழக செயளாலரும் முகைதீன் இபுராஹீம் அவர்களின் பேட்டியை கண்டு உண்மையில் உங்கள் இணையதளத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு இணையதளத்தில் அவருடைய பெயரை போட்டு விமர்சனம் செய்ய தைரியம் இல்லாமல் அவரை பற்றி விமர்சனம் செய்து இருந்தது என்னை மிகவும் வேதனை அடைய வைத்தது இவர் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளவர். இவருடன் கழகத்தில் இருக்கும் அனைவரும் யாரிடமும் எந்த நன்கொடைகளும் எதிர்பார்க்காமல் தன் சொந்த செலவில் ஏழை மக்களுக்கும் இந்த நகருக்கும் எத்தனையோ நல்ல காரியங்களை முனைப்புடன் செய்து வருகின்றார் என்று நான் நன்கு அறிவேன். இவரை பற்றி விமர்சனம் செய்தவர்கள் மனு நீதி சோழன் என கூறியிருக்கின்றார்கள். வண்ணாந்துறை வளைவுகளில் மனு மூலம் வேகத்தடை அமைத்ததில் இருந்து BSNL அனைத்து சேவைகளும் கீழக்கரையில் செயல்பட அரசின் கதவுகளை தட்டி இந்த மனுநீதி சோழ இளவரசன் செயல்படுத்தி இருக்கின்றார் என்று கீழக்கரை மக்கள் அறிவார்கள். நன்மைக்கு குரல் கொடுக்கும் இவரை பாராட்டாமல் கூட இருங்கள். ஆனால் உண்மைக்கு புறம்பாக விமர்சனம் செய்யாதீர்கள் Plzzzzzzzzzzzz..........

    ReplyDelete
  12. 18 வது வார்டு கவுன்சிலர் மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் பொருத்தமானவையே?
    by
    www.roadrafee.weebly.com

    ReplyDelete
  13. 18-வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் அவர்கள்... உங்கள் இணையதளத்திற்கு அளித்த பேட்டி உண்மையில் மனம் திறந்த பேட்டியாகும்..
    22:56. அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கு தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான். ஆகவே ஈமான் கொண்டு சாலிஹான (நல்ல) செயல்களை செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
    இக்குரான் ஆயத்தின் அடிப்படையில் எல்லா செயல்களையும் இறைவன் பார்த்து கொண்டு இருகின்றான்...
    ஆகவே! ஆட்சியாளர்கள் மட்டுமின்றி இறையச்சம் உடையவர்கள் உண்மையில் ஒவ்வொரு செயல்களையும் இறைவன் அறிவான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.