ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கீழக்கரை வருகை பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அவரின் பயணத்தின் போது கீழக்கரையில் கட்டபட்டு வரும் இஸ்லாமிய துவக்கப்பள்ளியை பார்வையிட்டார்.
மேலும் பழைய குத்பா பள்ளி ஜமாத் நிறுவாகத்தில் உள்ள மக்தூமியா உயர்நிலை பள்ளியை பார்வையிட்டார். அவரிடம் எம் எல் ஏ நிதியில் கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கீழக்கரை நகர் தமுமுக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.எல்.ஏ கூறியதாவது.
2012மத்திய அரசின் புள்ளியல் துறை சார்பாக நடந்த கணக்கெடுப்பில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 42 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது.இதில் 1லட்சத்து 39ஆயிரத்து 91 பேர் மரணமடைந்துள்ளனர்.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 67 ஆயிரத்து 757 விபத்துகள் நடைபெற்றுள்ளது.இதில் 16 ஆயிரத்து 175 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் இரு சக்கர விபத்தில் பலியானவர்கள் மட்டும் 15 ஆயிரத்து 422பேர் ஆவார்கள் எனவே இரு சக்கர விபத்துகள்தான் அதிகளவில் நடைபெற்றுள்ளது.இதற்கு காரணம் ஹெல்மெட் அணியாமலும்,செல்போன் பேசி கொண்டு ஓட்டுவதுதான். மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்றவைகளால் விபத்துகள் நடைபெற காரணமாகி விடுகிறது.எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமுமுக சார்பில் கீழக்கரையில் டிச 7 முதல் 13 வரை சாலை பாதுகாப்பு வார விழா பிரச்சாரம் பேரணி நடத்தப்படுகிறது.இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் .
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றாலும் பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை அதே போல் சீட்பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும்.இதனால் விபத்துகள் நடைபெறும் போது விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்க முடியும்.
கீழக்கரையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிலர் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குகின்றனர்.டூ வீலரை 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களும் ஓட்டுகின்றனர்.இதனை தடுக்க வேண்டும்.கீழக்கரைக்கு போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் இதற்காக சட்டசபையில் வெட்டு தீர்மாணம் கொண்டு வந்துள்ளேன்.
மேலும் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஸ்பீடு ரேடார் கருவியை ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




ReplyDeleteமறு பதிப்பு கீழக்கரை டைம்ஸிலிருந்து
கீழக்கரை அலி பாட்சா October 30, 2013 at 11:35 PM
எத்தனையோ முறை இது சம்பந்தமாக பலரும் பல தரப்பட்ட சூழ்நிலையில் சங்கை ஊதி விட்டார்கள். ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாக இருக்கிறது. விழிப்புணர்வு என்பது காத தூரத்தில் உள்ளது.என்ன செய்வது விதிக்கபட்டது தான் நடக்கும்.
இதை விட பெரிய கொடுமை சமீப காலத்தில் கீழ்க்கரையில் 10,12 வயதுக்கு குறைவானவர்கள் மூவராக (டிரிப்பில்ஸ்) செல்லுவது அதிகரித்து வருகிறது. என்னென்ன விபரிதங்கள் நடக்க இருக்கிறதோ? படைத்தவன் தான் அறிவான்.
இது விஷயத்தில் முதல் குற்றவாளி பெற்றோர்கள்.
இரண்டாவது போக்குவரத்து காவலர்கள் (இது வரை கீழக்கரையில் இவர்கள் நியமிக்க பட்வில்லை).
மூன்றாவது பள்ளிக் கூட நிர்வாகம் (இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருபவர்களை கண்டிக்காதது)