Thursday, December 1, 2011

கீழக்கரை முழுவதும் கழிவுநீர் வாய்கால் துப்புரவு பணி துவங்கியது !


பட விளக்கம் :- 21வது வார்டிலிருந்து தொடங்கிய இப்பணியை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன் , அன்வர் அலி உள்ளிட்ட கவுன்சிலர்கள் நேரில் பார்வையிட்டனர்.
கீழக்கரை நகராட்சியில் கழிவுநீர் வாய்கால்கள் தூர் வாராமல் குப்பைகள் மற்றும் மண் நிறைந்து இருந்ததால் சாக்கடை நீர் சீராக செல்லாமல் கழிவுநீர் வெளியேறி நகர் முழுவதும் பல்வேறு சாலைகளில் வழிந்தோடியது.துப்புரவு தொழிலாளர் பற்றாக்குறையினால் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நகரின் சுகாதாரத்தை சீர்குலைக்கும் இந்த‌நிலையை மாற்ற‌ போர்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் உள்ள நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டு நகர் முழுவதும் 21வார்டுகளில் உள்ள கழிவுநீர் வாய்காலை தூர் வாரி சுத்தம் செய்யும் பணி ரு1லட்சம் செலவில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.தூர் வாரும் பணி இன்று தொடங்கியது .21வது வார்டிலிருந்து தொடங்கிய இப்பணியை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன் , அன்வர் அலி உள்ளிட்ட கவுன்சிலர்கள் நேரில் பார்வையிட்டனர்.
இதுகுறித்து சமூக நல ஆர்வலர் பாட்சா கூறியதாவது,நகராட்சியின் பணிகளை நேரில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று மேற்பார்வையிடுவது பணிகள் விரைவாகவும்,நேர்மையாக நடப்பதற்கு வழிவகுக்கும்.எனவே இது பாராட்டுக்குறிய விசயம்.மேலும் நம்மை போன்ற பொது மக்களும் குப்பைகளை கழிவு நீர் வாய்காலில் வீசாமல் நகரின் சுகாதாரத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

2 comments:

 1. மங்காத்தவின் தங்கச்சி மகன்December 1, 2011 at 7:12 PM

  அகமகிழ்ந்து உளமார பாரட்டுகிறோம்.

  கடந்த கால நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கை காரணமாக சீர் கெட்டு போன ஊர் சுகாதாரம் இப்போது சீர் செய்ய முற்படும் போது சிலவற்றில் பிரச்சனைகள் பூதகரமாக தெரிய வாய்ப்புண்டு. இருப்பினும் புதிய நிர்வாகத்தினர் மீது அபார நம்பிக்கை வைத்து ஓட்டளித்த பொது மக்களை மனதில் கொண்டும். ஊரின் மேம்பாட்டையும் மனதில் கொண்டு சிறப்பாக இது போன்று ஆர்வமுடன் அயராது போர் கால அடிப்படையில் மற்ற பணிகளையும் செயது முடிக்க
  பொது மக்களின் சார்பாக வேண்டுகிறோம்.

  இப்போது நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இருந்து பின்னர் சோர்வடைந்து நம்பிக்கை துளிரை கருக விட மாட்டீர்கள் என பூரணமாக நம்புகிறோம்.

  நம்பிக்கைதானே வாழ்வின் ஆதாரம்.

  இது தருணத்தில் ஒரு கனிவான ஆலோசனை

  கழிவு நீர் வாய்க்கால்களை தூர் வருவதோடு நினறு விடாமல் மீண்டும் மீண்டும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க கால்வாயின் இரு மருங்கிலும் ஒரு செங்கல் (படுக்கை வசத்தில்) அளவுக்கு பித்தி கட்டி அதில் காங்கிரீட் சிலாபுகளை உயர்ந்த தரத்தில் தயாரிக்கச் சொல்லி இங்கும் அங்கும் நகராமல் இருக்கும் வண்ணமாக நெருக்கமாக போட்டீர்களானால் சாலையில் உள்ள மண், பிலாஸ்டிக் பைகள் கால்வாயில் செல்லுவதை தடுக்கலாம். மேலும் ஆங்காங்கே மூடியுடன் ஜங்ஸன்களை மூடியுடன் குறிப்பாக திருப்பங்களில் அமைத்து அதற்குள் 2 அல்லது 3 கம்பித் துண்டுகளை தடுப்பாக வைத்தீர்களானால் பிலாஸ்டிக் பைகள் கழிவு துணிகள் ஆங்காங்கே தடுக்கப்ப்டும். துப்பரவு பணியாளர்க்கு சோர்வு இல்லாமல் நீக்க பெரும் உதவியாக இருக்கும்.

  இதை உடனடியாக நடைமுறைப் ப்டுத்த வேண்டும். காரணம் ஊரில் அதிகமான இடங்களில் சாலைகளை விட வாய்க்கால் தாழந்து விட்டது. அதன் காரணமாக அடைப்புகள் இனி சர்வ சாதாரணமாகி விடும்.அதன் பின் நிர்வாகத்திற்கு தான் தலை வலியும் திருகு வலியும்.

  இதன் பின் பள்ளி கல்லூரி மாணவ் மணிகளை அழைத்து பொது மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  மற்றுமொரு கனிவான ஆலோசனை

  பொது மக்களின் வரிப் பணத்திலிருந்து கொஞ்சமும் பொருப்பு இல்லாமல் தான் தோன்றிதனத்தில் நமதூர் சாலை அமைப்புக்கு ஒவ்வாத, நகராட்சி அலுவலகத்தின் வலதுபுரத்தில் அழகுப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை வந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்து விட்டு அந்த பணத்தில் மதுரை மாநகராட்சியில் இருப்ப்து போல ஆட்டோவில் வடிவமைக்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்களை வாங்கினால் முடிந்த அளவு நமதூர் சந்து பொந்துக்களில் அதிக பட்ச அளவு குப்பைகளை சேகரிக்க முடியும்.

  NOW BALLS ARE IN YOUR COURT.

  ReplyDelete
 2. மங்காத்தவின் தங்கச்சி மகன்December 1, 2011 at 7:23 PM

  இந்த நிழற் காட்சியை பார்த்தீர்களா !!

  பொது மக்கள் எவ்வளவு ஆவலுடன் பார்வை இடுகிறார்கள். இந்த பணிகள் சிறப்பாக அமையுமானால் அவர்கள் வாயார, மனதார வாழ்த்த மாட்டார்காளா? நிச்சயம் புகழ் பாடுவார்கள்.எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

  சிந்தித்து செயல்பட்டு பொது மக்களிடத்தில் நல்ல பெயர் எடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.