Monday, December 5, 2011

ராமநாத‌புர‌ம் ர‌யில்வே கேட் அகற்றி புதிய மேம்பாலம்‌ அமைக்க‌ ஆய்வு !



ப‌ட‌ம்: ந‌ன்றி உண்மையாஉல‌க‌ம்.பிளாக்.காம்


கீழ‌க்க‌ரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் எல்லையில் ரயில்வே கேட் உள்ளது.இவ்வழியாக நாளொன்றுக்கு நூற்றுக்கணக்காண வாகனங்கள் செல்கின்றன.ஒவ்வொரு முறையும் ரயில் செல்லும் போது இருபுறமும் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.குறிப்பாக கீழக்கரையிலிருந்து ஏராளமானோர் மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.அதிலும் அவசர சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துமனைக்கு செல்பவர்கள் நிலை இன்னும் பரிதாபம் ரயில்வே கேட் மூடப்படுவதால் காத்து கிடந்து அதிகம் பாதிப்படைவது இவர்கள்தான்.
இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்க‌ இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர் .இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ,ரெயில்வே அதிகாரிகளும் புதிய மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். எத்தனை வாகனங்கள் இவ்வழியாக செல்கிறது.மேம்பாலம் அமைப்பதற்கு போதுமான இடம் என்பது போன்ற ஆய்வுகள் நடைபெற்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,இத‌ற்கான‌ ஆய்வு அறிக்கை ம‌த்திய மாநில அரசு ஒப்புதலுக்கு அனுப்ப‌ப‌டும் என்று தெரிவித்த‌ன‌ர்.
மேம்பால‌ம் அமைக்கும் ப‌ணி 2012 அல்ல‌து 2013ல் தொட‌ங்கும் என‌ தெரிய‌ வ‌ருகிற‌து

2 comments:

  1. inshaallah viraivil aarampamagattum keelai mannuku pudhiya vali

    ReplyDelete
  2. விவசாய கூலி தொழிலாளி மகன் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை


    புகைப்பட ஆல்பம்

    --------------------------------------------------------------------------------
    சாய் பாபா முதலாம் ஆண்டு மகா ஆராதனை
    --------------------------------------------------------------------------------
    பத்ம விருது வழங்கு விழா


    அதிகம்
    படித்தவைஅதிகம் விமர்சிக்க
    பட்டவை அதிகம் ஈ-மெயில்
    செய்தவை
    அக்னி வெயில் கொளுத்தியது சென்னையில் 107 டிகிரி வெப்பம்
    திருவண்ணாமலைக்கு700 சிறப்பு பஸ்கள்
    வங்கி கணக்கு துவங்காதவர்களுக்கு வேலை இல்லை
    பெற்றோர் பிரிந்ததால் மகன் தற்கொலை
    வெயிலில் மயங்கி குழந்தை பலி
    "மெகா' கூட்டணி - தி.மு.க., திட்டம் பலிக்குமா?
    முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பாய்ச்சல்: பயங்கரவாத தடுப்பு மைய திட்ட முடிவை கைவிட கோரிக்கை
    5 ஆண்டுகள் டி.ஜி.பி.,யாக இருப்பேன்': ஐ.ஜி., பிரமோத்குமார் மிரட்டல்
    மதுரை ஆதீனம் மடத்தில் வருமானவரி ரெய்டு: பின்னணியில் தி.மு.க.,?
    "கூட்டணி அரசை நடத்துவது ஒரு கலை': சரத் பவார்
    பூமிக்கு அருகில் வருகிறது சந்திரன்:வழக்கத்தைவிட பெரியதாக தெரியும்
    வெயிலில் மயங்கி குழந்தை பலி
    வங்கி கணக்கு துவங்காதவர்களுக்கு வேலை இல்லை
    கட்டணம் வசூலிக்க குறைந்த ஊழியர்கள் மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் கோஷம்
    2 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி


    இ-பேப்பர்
    எழுத்தின் அளவு:
    Share


    ஆல்பம்
    கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் வேல்கம்புடன் ..
    பதிவு செய்த நாள் : மே 05,2012,23:48 IST
    கருத்தை பதிவு செய்ய
    ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாவிலாதோப்பை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகன் கோபால சுந்தரராஜ்,26, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தேசிய அளவில் ஐந்தாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    மாவிலாதோப்பை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி ராஜம்மாள். இவர்களது மகன் கோபால் சுந்தரராஜ். இவர், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். கோவை விவசாய பல்கலையில் பி.எஸ்சி., டில்லியில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றார்.

    மூன்று முறை போராடி வெற்றி : முதன் முறையாக ஐ.ஏ.எஸ்., தேர்வின் போது, தந்தை இறந்தததால் தேர்வை பாதியில் கைவிட்டார். இரண்டாவது முறையும் தோல்வியே கிடைத்தது. மூன்றாவது முயற்சியில் தேசிய அளவில் ஐந்தாமிடம் பெற்று சாதனை படைத்தார்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.