Thursday, December 22, 2011

கீழக்கரையில் பொது மக்களிடம் வாஷிங் மெஷின் தருவதாக நூதன மோசடி !


திற‌ப்பு விழா(வாஷிங் மிஷின்) அழைப்பித‌ழ்
கீழக்கரையில் கடந்த சில நாட்களாக டிப் டாப்பாக டிரஸ் அணிந்து கொண்டு 2 நபர்கள் அனைத்து தெருக்களுக்குக்கும் சென்று, "20ஆம் தேதி ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில ஸ்ரீமகாசக்தி பர்னிச்சர் திறக்க உள்ளோம். அதனால் விளம்பரத்திற்க்காக ரூ 3500க்கு ஒரு மின்சார‌ அடுப்பும் அதற்கு இலவசமாக ஒரு மிக்ஸியும் தற்போது தருவோம் கடை திறப்பு விழா அன்று அழைப்பிதழை எடுத்து வாருங்கள் வாஷிங் மிஷின் தருவோம்" என்று சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்துள்ளனர். 20ம்ந்தேதி கடைதிறப்பார்கள் வாஷிங் மிஷின் வாங்கி வரலாம் என்று பணம் கொடுத்தவர்கள் ராமநாதபுரம் சென்றனர்.ஆனால் அப்பகுதியில் எந்த கடையும் புதிதாக திறக்கவுமில்லை வாஷிங் மிஷின் கொடுக்கபடவுமில்லை.இதனால் பணம் கொடுத்தவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.நூதனமான முறையில் நடைபெற்ற மோசடி என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து நெய்னா என்பவர் கூறுகையில், நான் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன்.நான் வீட்டில் இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்கள் என் வீட்டிற்கு வந்து தற்போது ரூ3500 தந்தால் ஒரு கரண்ட் அடுப்பும் ,மிக்ஸியும் தந்து விடுவோம் கடை திறப்பு விழாவிற்கு நீங்கள் வரும் போது வாஷிங் மிஷின் தந்து விடுவோம் என்று சொல்லி ரூ 3500 பெற்று கொண்டு ரூ 2000 மதிப்புள்ள மிக்சியும்,மின்சார அடுப்பையும் கொடுத்து சென்றுள்ளனர். பின்னர் நாங்கள் வாசிங் மிஷின் வாங்கி வரலாம் என்று ராமநாதபுரம் சென்றால் அப்படி கடை எதுவும் திறக்க வில்லை.எல்லாம் ஏமாற்று வேலை இது போல் ஆசாமிகள் வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.

இது குறித்து ஜாஹிர் என்பவர் கூறுகையில் ,சில வருடங்களுக்கு முன்பு உங்க‌ளுக்கு குக்கர் ப‌ரிசு விழுந்துள்ளது எங்கள் கடையில் வந்து பரிசை வாங்கி செல்லுங்கள் என்று சொல்லி குலுக்கல் தொகை ரூ100மட்டும் தாருங்க‌ள் என்று சில‌ர் ஏராள‌மானோரிட‌ம் ஏமாற்றி வாங்கி சென்ற‌ன‌ர்.த‌ற்போது கொஞ்ச‌ம் வித்தியாச‌மாக‌ ரூ 2000 பொருளை கொடுத்து ரூ 3500 வாங்கி சென்றுள்ளார்க‌ள். ம‌க்க‌ள்தான் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் நாம் அதிக‌ லாப‌த்துக்கு ஆசைப்ப‌டுவ‌தால்தான் மோச‌டிக்கார‌ர்க‌ள் எளிதாக‌ ஏமாற்றி விடுகிறார்க‌ள்.காவ‌ல்துறையும் இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்

அவர்க‌ள் கொடுத்த‌ அழைப்பித‌ழில் ஸ்ரீமகாசக்தி பர்னிச்சர் ஐ.எஸ்.ஓ முத்திரை பெற்ற‌ நிறுவ‌ன‌ம் என்று அச்சிட்டிருந்த‌து குறிப்பிட‌த‌க்க‌து

1 comment:

  1. ஏமாற்றுவது குற்றம் ..............................
    நீங்கள் ஏமாற்ற்ற நினைத்தீர்கள்
    அவன் ஏமாற்றிவிட்டான்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.