Friday, December 16, 2011

கீழக்கரை அரசு தலைமை மருத்துவரின் நடவடிக்கையால் நோயாளிகள் அவதி!





கீழக்கரையில் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள மக்கள்


கீழக்கரை அரசு மருத்துவமனையில்(செவ்வாய்,வியாழன்) ஆகிய இரண்டு நாட்கள் சர்க்கரை நோயாளிகளுக்கும்,இருதய நோயாளிகளுக்கும் மருந்து வழங்கப்பட்டு வந்தது.ஆனால் அதை மாற்றி கடந்த மூன்று மாதங்களாக மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே மருந்துகள் கொடுக்கப்படுகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து கீழக்கரையை முகம்மது ஹனிபா என்பவர் கூறுகையில், எனக்கு சர்க்கரை நோய் உள்ளது தனியார் கடைகளில் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு எனக்கு வசதியில்லை அரசு மருத்துவமனையில்தான் பல ஆண்டுகளாக மருந்து வாங்கி சாப்பிட்டு வருகிறேன். இந்த மூன்று மாதங்களாக இரண்டு முறைதான் மருந்து தருகின்றனர்.இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது காலை 7 மணியிலிருந்து வரிசையில் நின்று சென்றால் மருந்து தீர்ந்து விட்டது என்று கூறுகின்றனர் அடுத்த முறை மருந்து தரும் வரை நான் காத்திருக்க வேண்டும் என்றார் வருத்தத்துடன்

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த முஸ்தபா கூறியாதவது ,இத்தனை ஆண்டுகளாக மருந்துகள் தட்டுபாடு இல்லாமல் கிடைத்து கொண்டிருந்தது.ஆனால் தற்போது மருந்து மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை என்று கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.உடனடியாக மக்கள் பிரதிநிதிகள் ,மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீண்டும் வாரத்திற்கு இரண்டு முறை மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தலைமை மருத்துவர் கூறுவது போல் மாற்று மருந்து தருவதில்லை என்றார்

இது பற்றி தலைமை மருத்துவர் அங்காரெட்டி கூறியதாவது, ஒரு சில மருந்துகள் வருவதில்லை அதற்கு பதில் மாற்று மருந்து கொடுக்கிறோம் .மேலும் மாதத்திற்கு 2 முறை மட்டும் கொடுப்பது என்ற முடிவை அனைத்து மருத்துவர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து தான் எடுத்தேன்.

ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ ,மாவட்ட ஆட்யை மீண்டும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழை எளிய‌ ம‌க்க‌ளை பாதிப்ப‌டைய‌ செய்யும் இந்த‌ விச‌ய‌த்தில் உட‌ன‌டி க‌வ‌ன‌ம் செலுத்த ‌ வேண்டும்

1 comment:

  1. நம் சமுதாய மக்கள் என்றாலே, அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஒரு இளாக்காரம்தான்.

    இந்த விஷயத்தை பிற சமுதாய மக்களிடம் நடத்தி இருந்தால், மருந்து வாங்க வந்து ஏமாற்றுத்துடன் திரும்பும் அந்த மக்கள் அரசு மருத்துவமனை வாசலிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பார்கள். பிரச்னைக்கு தீர்வு வராமல் விட்டு இருக்க மாட்டார்கள்.

    இது குறித்து உடனே நம் எம்.எல்.ஏவிடம் எடுத்து சொல்ல வேண்டும். தீர்வு காண வேண்டும்.
    -கீழை ஜமீல் முஹம்மது.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.