Wednesday, December 28, 2011

தாசிம் பீவி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு விழா மற்றும் பேரணி !


கல்லூரி தாளாளர் ரஹ்மத் நிஷா எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு குறித்த இதழை வெளியிட தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஜெயக்குமார் பெற்று கொண்டார்.

செஞ்சுருள் சங்கம் மற்றும் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டக்குழு ஆகியவை இணைந்து எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு வார விழா கல்லூரியின் தாளாளர் ரஹ்மத்நிஷா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக‌ தாசிம் பீவி கல்லூரி வளாகத்தில் தொடங்கி கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை மாணவிகள் பேரணியாக சென்று எய்ட்ஸ் விழிப்புணவு துண்டு பிரச்சுரங்களை விநியோகித்தனர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் இது தொடர்பாக வண்ணக்கோலப்போட்டி ,கவிதை எழுதும் போட்டி , நாடகங்கள் மற்றும் பேச்சுபோட்டியும் நடைபெற்றது. இதில் செஞ்சுருள் இயக்க மாவட்ட மேலாளர் ஜெய்குமார் உள்ளிட்டோர் பேசுகையில், ஹெச் .ஐ வியால் பாதிக்கப்பட்டவர்கள ஒதுக்கி வைக்காமல் அன்புகாட்டி அரவணைத்து தகுந்த சிகிச்சை அளித்தால் அவர்களது வாழ்நாளை நீட்டிக்க முடியும்.கல்லூரி தாளாளர் ரஹ்மத்நிஷா உள்பட பலர் விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பேசினர்.இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.