Saturday, December 3, 2011

3ஆண்டாக தொடரும் முயற்சி !கண்டுகொள்ளாத இயக்கங்கள் !












பள்ளிகளில் அரசு பொது தேர்வின் போது மாணவர்களையும் ,மாணவிகளையும் ஒரே இடத்தில் தேர்வு எழுத செயவதினால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இருபாலரையும் தனி தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்க கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி தாளாளர் முயற்சி செய்து வருகிறார்.



இது குறித்து அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் ......
அரசு பொது தேர்வுகளில் மாணவ மாணவியரை ஒரே இருக்கையில் அமர வைத்து தேர்வுகளை எழுத கடந்த முறை இருந்த அரசு நடைமுறைத்தியது.இவ்வாறு ஒரே இருக்கையில் மாணவ மாணவியரை தேர்வு எழுத வைப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் அவர்களின் தேர்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது மேலும் விரும்பதகாத விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வருத்தமும் கவலையும் அடந்துள்ளனர் குறிப்பாக முஸ்லீம் கோஷா மாணவியர் அதிகமுள்ள எங்களை போன்ற பள்ளிகளில் அதிக அளவில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசுக்கும் மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் பள்ளியின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் எழுத்து பூர்வமாக முறையிட்டும் எந்த தீர்வும் ஏற்படாமல் உள்ளது.

எனவே தாங்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாணவ ,மாணவியரின் நலனின் பாதிப்பு ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது பற்றி இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் கூறுகையில் ,
பொது தேர்வுகளில் மாணவிகளுக்கு தனி இடம் ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம்.இது குறித்து வலியுறுத்த வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாத்,தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்தோம் ஆனால் யாரும் இது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை.முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி ,ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ என்று பலரிடமும் கோரிக்கை வைத்து விட்டோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.நமது மாணவிகளின் எதிர்கால கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற அக்கறையில் நாம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். என்றார்.

8 comments:

  1. நல்ல ஜால்ரா அடிகிரிய கீழக்கரை டைம்ஸ்

    ReplyDelete
  2. மங்காத்தவின் தங்கச்சி மகன்December 3, 2011 at 9:33 PM

    தம்பி எம்.எம்.கே. மொய்தீன் இபுராகீம்
    அவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது. முஸ்லீம் மாணவிகள் தான் படிக்கும் பள்ளியிலேயே சென்டர் என்றால் அருகில் இருக்கும் மாண்வன் ஏற்கனவே அறிமுகம் ஆனவன் என்பதால் சற்று தர்ம சங்கடம் குறைய வாய்ப்புண்டு. வேறு பள்ளி சென்டர் என்றால் அறிமுகமே இல்லாத வயது வந்த மாணவன் அமரும் பட்சத்தில் அபரிதமான தர்ம சங்கடம் ஏற்படுவது மட்டும் அல்லாது சிந்தனை சிதறி அதிக மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் குறைய சாத்தியமுண்டு. காரணம் அவள் ஒரு கன்னிப் பெண். மிக சமீபத்தில் அன்னிய ஆடவன் .அவள் வளர்க்கப் பட்ட சமுதாய அமைப்பு முறை. ஆகவே முஸ்லீம் மாணவிகள் தேர்வுக்கு அமர்த்த படும் முறையில் மாற்றம் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்
    தனி மரம் தோப்பாகாது.இது விஷயத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் / அமைப்புகள்
    கட்டாயமாக முயற்சி செய்ய வேண்டும். ஒத்துழைகக வேண்டும்.

    மேலும் நமது தொகுதி எம்.எம்.ஏ. ஜனாப் ஜவாஹிருல்லா சாகிப் அவர்கள் தீன்தாரியாக இருப்பதால் இது விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வெற்றி காண வேண்டும்.

    தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து சிறுபான்மை பள்ளிகள் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி அது மூலமும் வழி காணலாம்.
    ஏற்கனவே மாநில அளவில் ஓமியாட் என்ற ஒரு அமைப்பு உண்டு. ஆனால் அந்த நிர்வாகம் தமிழ் பேசும் முஸ்லீம்
    களின் கல்வி பிரச்சனையில் அதிகமாக அக்கறை காட்டுவதில்லை.உருது பேசும் முஸ்லீம்களின் கல்வியில் மட்டுமே அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் வருட சந்தா மட்டும் பல நினையூட்டு கடிதம் மட்டும் வசூலித்து விடுவார்கள். குறைந்த பட்சம் வருடாந்திர கூட்டத்தை கூட தென் தமிழகத்தில் நடத்த மாட்டார்கள். அதனால்தான் தென்னக பகுதிகளை இணத்து ஒரு அமைப்பு உண்டாக்கி அதன் மூலமும் முயற்சி செய்தால் பலன் கிடைக்க வாய்ப்புண்டு.

    மேலும் இடை நிலை தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு தேர்வுகள் அனைத்தும் வெள்ளிக்கிழமையிலும் நடத்தப்படுகிற்து. இதனால் முஸ்லீம் மாணவர்கள் ஜும்மா தொழுகைக்கு செல்ல முடிவதில்லை. ஜும்மாவை தவற விட்டால் விட்டதுதான். அதற்கு கலா கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அரசு மனது வைத்தால் இதை மாற்ற முடியும். திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்களில் தேர்வுகளை நடத்துவதில் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பேயில்லை. மனம் இருந்தால் மார்க்கம் நிச்சயம் உண்டு. உண்டு.உண்டு.

    இதற்கும் முஸ்லீம் அமைப்பு / இயக்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் சமுதாய அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் முயன்றால் நிச்சயம் சாதகமாக அமையும். செய்வார்களா?

    கடந்த வருடம் (என நினைவு) ஈரோட்டில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் ஜும்மா தினத்தில் தேர்வுகளை நடத்தக் கூடாது என அரசுக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் இயற்றினார்கள். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியினுடன் கூட்டணி அமைத்து சீட் கேட்பதில் தான் குறியாக இருந்தார்களே ஒழிய அவர்கள் போட்டத் தீர்மானத்தையே வற்புறுத்த தவறி விட்டார்கள்.

    பொறுமை காத்து படித்த நல்ல உள்ளங்களுக்கு இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாக உளமார இரு கையேந்தி பிரார்த்திக்கின்றேன். ஆமீன். ஆமீன். யா ரப்பில் ஆலமீன்.

    ReplyDelete
  3. இதே பள்ளி தாளாளர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு இஸ்லாமிய மாணவன் பள்ளிக்கு இறை தூதர்(ஸல்) அவர்களுடைய கட்டளைக்கொப்ப தாடி வைத்து வந்தமைக்கு அந்த மாணவனுக்கு TC கொடுக்கும் அளவுக்கு சென்றார் என்பது நினைவு கூற வேண்டியுள்ளது.

    மேலும் இயக்கங்கள் என்று வந்து விட்டாலே , அவர்களின் எண்ணம் சதகா என்ற அடிப்படையில் பணத்தை பிடுங்குவது மட்டுமே குறிக்கோளாக இருப்பதாக தெரிகிறது, எதற்க்கேடுத்தாலும் தன்னுடைய இயக்கத்தின் பெயரை முன் மொழிகிரார்களே தவிர அவர்களின் எண்ணம் நல்லாதாக இருப்பதாக தெரியவில்லை.

    ReplyDelete
  4. அரசாங்கம் எதையும் தானாக முன் வந்து செய்யாது, மக்கள் தான் அரசாங்கத்தை செவி சாய்க்க வைக்க வேண்டும்.
    இந்த பிரச்னை ஒரு தனியார் பள்ளி சார்ந்த பிரச்னை அல்ல, இது ஒரு சமுதாயம் மற்றும் ஊர் சார்ந்த பிரச்னை, இதனால் எந்த ஒரு தனி மனிதனும் பலன் அடைய போவது இல்லை.
    நமது பெண் பிள்ளைகளின் குறைகளை போக்குவது
    அனைவரின் கடமை குறிப்பாக முஸ்லிம் இயக்கங்கள் கண் மூடி இருப்பது ஆச்சர்யமாக உள்ளது!
    இட ஓதிக்கீடுக்காக போராடும் இயக்கங்கள் அந்த இட ஒதுக்கீடு கிடைக்க அடிப்படை கல்வியின் அவசியத்தை நினைக்க மறந்து விட்டார்கள், ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட மெடிக்கல் சீட் கிடைக்காது
    என்பதை நாம் நினைவில் கொண்டு மாணவர்களின் தேர்வு அறையில் ஏற்ப்படும் சூழ்நிலைகளால் நமது
    மாணவிகள் வருடம் முழுதும் கஷ்ட்டப்பட்டு படித்து அவர்கள் தேர்வு எழுதும் சமயத்தில் அவர்களுக்கு அமைதியான சூழல் இல்லாமல் அவர்கள் வளர்ந்து வந்த நிலைக்கு நேர்மாறாக ஆண்கள் அருகில் அமர்ந்து தேர்வு எழுதும் முறையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றாக போராடினால் நல்லது நடக்கும்.

    ReplyDelete
  5. மார்க்கம் என்று பேசும் இந்த தாளாளர் இவர் பள்ளியிலே படித்த முன்னால் மானவன் ஒருவர் ரஸூல்லாஹ் காட்டிய வழியில் அவர் தாடி வைத்து பள்ளிக்கு வந்ததுக்கு TC கொடுக்கும் அளவுக்கு அந்த மானவரை ஒரு கை பார்த்துவிட்டார் அந்த மானவனுக்காக குரல் கொடுத்த இயக்கத்தையும் தாலிபான் தீவரவாதி போல் சித்தரித்து நாளிதழில் செய்தி வெளியிட்டார் இப்போது இயக்கங்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறுகிறார்.

    ReplyDelete
  6. இந்த இயக்கங்களின் வேலையே முஸ்லிம் நிறுவனங்களிலும், பள்ளிவாசல்களிலும் குழப்பம் விளைவிக்கும் வேலைகளை
    தான் செய்து வருகிறார்கள். சுன்னத் என்ற பெயரில் பர்லை மறந்து விட்டு தௌஹீத் என்று கூறிக்கொண்டு தாடியை
    மட்டும் வைத்துக்கொண்டு அனைத்து கேடு கெட்ட செயல்களை செய்து கொண்டு மக்கள் மத்தியில் குழப்பம் உண்டு பண்ணுபவர்கள் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை...!

    ReplyDelete
  7. வாழ்க்கையில் பல சாதனைகள் செய்ய காத்திருக்கும் நமது மாணவ மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு
    இடையூறாக இருக்கும் இது போன்ற தடைகளை நீக்குவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஹைராதுன் ஜலாலியா தாளாளர் ஜனாப் ஜகுபர் சாதிக் அவர்களுக்கும், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அசன் அப்துல்காதர் அவர்களுக்கும், பிரதி பலன் பாராமல் கிழக்கரை மக்களின் பிரச்சனைகள் மற்றும் நடப்புகளை எடுத்துரைக்கும் கீழக்கரை டைம்ஸ் குழுமத்திற்கும், வருத்தமுள்ள நண்பர்களுக்கும், வருத்தமில்லா வாலிபர்களுக்கும், மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், மார்க்கத்திற்காக போராடும் சமுதாய இயக்கங்களுக்கும் இறைவன் நற்க்கூலி வழங்குவான். நன்றி.

    ReplyDelete
  8. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்ற மானவனுக்காக போராடினால் அதுக்கு பெயர்தான் குழப்பம் உண்டாக்குபவர்களா? தாடி என்பது ஒரு சுன்னத் அவ்வளவுதான் என்று நினைத்து வாழும் மக்களை நினைத்து நான் கவலை படுகிறேன் அல்லாஹ் அவர்களூக்கு நேர்வழி காட்டுவானாக. யார் ரஸூலின் ஒரு வழிமுறையை விட்டுவிடுகிறாரோ அவர் ரஸூல்லாஹ்வை சார்ந்தவர் இல்லை என்ற நம் ரஸூல் சொன்னதை இங்கு பதிய வைக்கிறேன். அது மட்டும் அல்லாமல் தாடி வைப்பது நம் நாட்டு ஜனநாயக உரிமைபடி ஒருவனுக்கு அனுமதி இருக்கு அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எங்கோ ஒரு மானவன் தாடி வைப்பதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி வெற்றி பெற்றதை நினைத்து சந்தோஷம் படுவதா அல்லது முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் ஊரில் அதற்கு தடையாக இருப்பதை நினைத்து கவலை கொல்வதா என்று தெரியவில்லை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.