கீழக்கரையில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா அரங்கத்தில் 29-12-11 வியாழக்கிழைமை அன்று காலை 8.30 மணியளவில் "ஆற்றம் மிகு ஹாஃபிழ் யார்" என்ற தலைப்பில் மறை குர்ஆன் மனனப்போட்டி நடைபெற உள்ளது.ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.எம். சாகும் ஹமீது ஜமாலி (தலைவர் சுலைமான் ஆலிம் அறக்கட்டளை,தலைவர்-ராமநாதபுரம் ஷரிஅத் கோர்ட்) மற்றும் டாக்டர் தைக்கா சுஐபு ஆலிம் (மேனேஜிங் டிரஸ்டி தைக்கா அருஸிய்யா,கீழக்கரை.கெளரவ தலைவர்- தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை,சேர்மன்-கண்ணாடி வாப்பா ஹமிதிய்யா அரபிக் கல்லூரி) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தலைமை நடுவராக துபாய் இஸ்லாமிய விவாகரத்துறையின் அஸிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஒமர் எம் அல் கத்தீப் பங்கு பெற உள்ளார்.மேலும் நடுவர்களாக மெளலவி அப்ரார் அஹ்மது காஸிமி மற்றும் மெளலவி ஸித்தீக் அலி ஆலிம் ஆகியோர் செயல்பட உள்ளனர்
நிகழ்ச்சியின் துவக்கத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் (ஆசிரியர் மதரஸா ஹாமித்திய்யா மற்றும் மஹ்ழரா ,காயல்பட்டணம்) கிராஅத் ஓதுகிறார். சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர்(நிறுவனர்:சீட் டிரஸ்ட் & சீனா தானா டிரஸ்ட்-சென்னை) வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சுலைமான் ஆலிம் மஹ்ழரி (தலைமை நிகழ்ச்சி ஆலோசகர்-மூன் டிவி) நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைக்கிறார்.
செய்யது அப்துல் காதர்(தலைவர் சங்கம் கீழக்கரை),மெளலவி செய்யது மஸ்வூத் ஆலிம்(முதல்வர்-கீழக்கரை புகாரியா அரபிக் கல்லூரி),மெளலவி ஹாஜா முயீனுத்தீன்(பேராசிரியர் உஸ்மானிய அரபிக் கல்லூரி,மேலப்பாளையம்),மெளலவி ஸலாஹுத்தீன்(முதல்வர் அல்மதரசத்துல் அரூஸிய்யா,கீழக்கரை) ஆகியோர் வாழ்த்துரை வழங்க் உள்ளனர்.
பி.எஸ்.ஏ.ஆரிஃப் புஹாரி ரஹ்மான் (பி.எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான் யுனிவர்சிட்டி) விருது வழங்குகிறார். செய்யது எம் சலாஹுத்தீன்(நிறுவனர் :கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபிக் கல்லூரி கீழக்கரை & சென்னை) பரிசு வழங்கி பாராட்டி பேசுகிறார்.
மூன் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியை ஆசிப் அஹமத் குரைஷி (கிரிஈடிவ் ஹெட் & புரோகிராம் - மூன் டிவி) இயக்கி வடிவமைக்கிறார். மெளலவி சாலிஹ் சேட் (முதல்வர்-கண்ணாடி வாப்பா அரபிக் கல்லூரி)நன்றி கூறுகிறார்.
போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளில் பங்கேற்றவர்களுக்கு லேண்ட் மார்க் ஹோட்டல்ஸ் & சூட்ஸ் -துபாய், சார்பில் பரிசுகள் வழங்கப்படும் .
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தர நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தர நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு மூன் டிவி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நல்ல தொடக்கம் ...
ReplyDeleteஇது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன் .....