கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச சைக்கிள் வழங்கும் விழா மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்கத்தலைவர் எஸ்.ஏ.செய்யது அப்து காதர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார்.இதில் 110 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.மேலும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி,உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க துணை தலைவர் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர்,செயலாளர் அமீர்தீன் ,ஹபீபுல்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழா இறுதியில் ஆசிரியர் ஆறுமுக நன்றி கூறினார்.
இலவச சைக்கிள் தமிழக அரசால் வழங்கப்பட்டதா அல்லது இவர்கள் சங்கத்து மூலம் வழங்கினார்களா..???
ReplyDelete