Saturday, December 31, 2011

கீழக்கரை குப்பை கிடங்கை சுற்றுலா தலமாக்குவோம் !எக்ஸ்னோரா அமைப்பு உறுதி










கீழ‌க்க‌ரை குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு காண்ப‌த‌ற்காக‌ உஸ்வ‌துன் ஹ‌ச‌னா சார்பில் ச‌த‌க்க‌த்துல்லாப்பா வளாக‌த்தில் க‌ல‌ந்தாய்வு கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.இக்கூட்ட‌த்தில் முக்கிய‌ அழைப்பாளாராக‌ எக்ஸ்னோரா சார்பில் அத‌ன் நிறுவ‌ன‌ர் நிர்ம‌ல் க‌லந்து கொண்டார் .
முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளும் ,ஏராள‌மான‌ பொதும‌க்க‌ளும் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர்

நிக‌ழ்ச்சியை தொகுத்த‌ளித்து பேசிய‌ லாபிர் .. கீழ‌க்க‌ரை ந‌க‌ரை சுத்த‌மாக்க‌ நாம் அனைவ‌ரும் இணைந்து ப‌ணியாற்ற‌ வேண்டும்."ஒரு சில‌ர் வ‌ருட‌த்தில் 15நாட்க‌ள்தான் வ‌ருகிறோம் ந‌ம‌க்கு ஏன் இந்த‌ முய‌ற்சி" என்றார்கள் அவ‌ர்க‌ளுக்கு நான் சொல்லி கொள்வது, பிற‌கு ஏன் இங்கு வ‌ருகிறீர்க‌ள் அங்கேயே இருந்து கொள்ள‌லாமே ந‌மது ம‌ண் ந‌ம‌து ஊர் என்ற‌ உண‌ர்வு அனைவ‌ருக்கும் வ‌ர‌ வேண்டும்.இன்ஷா அல்லா நாம் அனைவரும் இணைந்து இதற்கான முயற்சிகளை தொடங்குவோம் என்றார்.

முகம்மது ஹீசைன், கீழக்கரையின் இளைய தலைமுறையினருக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அவர்களையும் இந்த பணிகளில் இணைத்து கொள்ள வேண்டும் என்றார்.

எக்ஸ்னோரா அமைப்பின் த‌லைவ‌ர் நிர்ம‌ல் பேசிய‌ போது,எனக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் லாபிர் அவ‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌லினார் இங்கு வ‌ந்தேன்.ஏற்கென‌வே 2 முறை வ‌ந்துள்ளேன் ஆனால் இங்கு சுகதாரத்தில் எந்த‌ மாற்ற‌மும் இல்லை இந்த‌ முறையாவ‌து சுகாதாரம் குறித்த திட்ட‌ங்களை செய‌ல்ப‌டுத்த‌
ப்ப‌டும் என்று ந‌ம்புகிறேன்.கீழ‌க்கரையை விட‌ மோச‌மான‌ நிலையில் இருந்த‌ ப‌ம்ம‌லை அழ‌குப‌டுத்த‌ உத‌வியுள்ளோம்.என‌வே கீழ‌க்க‌ரை அழ‌கு ந‌க‌ராக்க‌ முடியும் அத‌ற்கான‌ அனைத்து முய‌ற்சிக‌ளுக்கும் எக்ஸ்னோர‌ அமைப்பு துணை நிற்கும்.நீங்க‌ள் அனைவ‌ரும் உற்சாமாக‌ இருப்பாதால் மாத‌ம் 1 முறை கீழ‌க்க‌ரை வ‌ந்து இத‌ற்கான‌ ப‌ணிக‌ளில் இணைந்து கொள்வேன்.கீழக்கரை நகராட்சியின் 12 ஏக்க‌ர் குப்பை கிட‌ங்கை குப்பைகளுக்கான மறுசுழற்சி முறையை நிறுவி அப்பகுதியை சுற்றுலா த‌ல‌மாக‌ மாற்ற‌ முடியும்.ஏற்கென‌வே த‌மிழ‌க‌த்தில் 30 இட‌ங்க‌ளில் இதை செய‌ல்ப‌டுத்தியுள்ளோம்.விரைவில் சுத்த‌மான‌ கீழ‌க்க‌ரையாக‌ மாற்றுவோம் என்றார்.

கேர‌ளாவை சேர்ந்த‌ க‌ழிவுநீரிலிருந்து எரிவாயு த‌யாரிக்கும் ப‌ணியில் ஈடுப‌ட்டு வ‌ரும் ராஜேந்திர‌ன் பேசியாதவது,
க‌ழிவு நீரிலிருந்து எரிவாயு த‌யாரிக்கும் திட்ட‌த்தை ப‌ல‌ இட‌ங்க‌ளில் செய‌ல்ப‌டுத்தியுள்ளேன்.இங்கும் என்னால் செய‌ல்ப‌டுத்த‌ முடியும் என்றார்.

மாவட்ட கலெக்டர் அருண்ராய் பேசும் போது, நான் ச‌ந்தித்த‌ ஊர்க‌ளில் கீழ‌க்க‌ரை போன்று சுகாதார‌கேடான‌ ந‌க‌ராட்சியை பார்த்த‌தில்லை.நான் ப‌த‌வியேற்ற‌தும் பெற்ற‌ முத‌ல் புகாரே கீழ‌க்க‌ரை சுகாதார‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌த்தான்.மேலும் த‌ற்போது கீழ‌க்க‌ரையில் குறைந்த‌‌ அளவே சுகாதார‌ ப‌ணியாளர்க‌ள் உள்ளார்க‌ள்.இன்னும் 35 ந‌ப‌ர் தேவைப‌டுகிறது.அர‌சு இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் அது வ‌ரை கீழ‌க்க‌ரையிலுள்ள‌ த‌னியார் அற‌க்க‌ட்ட‌ளைக‌ள்,தொண்டு நிறுவ‌ன‌ங்கள் தங்கள் செலவில் தேவைப‌டும் பணியாள‌ர்க‌ளை கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு த‌ர‌லாம்.இதற்காக அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பை ஏற்ப‌டுத்தினால் அத‌ற்கு நானே த‌லைவ‌ராக‌ இருந்து செய‌ல்ப‌ட‌ த‌யாராக‌ உள்ளேன்.இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌லெக்ட‌ராக‌வும்,த‌னிப‌ட்ட‌ ம‌னிதானாக‌வும் கீழ‌க்க‌ரைக்கு உத‌வ‌ த‌யாரா உள்ளேன் என்றார்.

ஈடிஏ மேலான்மை இய‌க்குந‌ர் சலாஹீதீன் பேசும் போது,

இப்பிர‌ச்ச‌னையை தீர்க்க‌ அனைத்து உத‌விக‌ளையும் செய்ய‌ த‌யராக‌ உள்ளேன் என்றார்

ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லா பேசும்போது...
தமிழகத்தில் மோசமான நகராட்சியாக கீழக்கரை இருந்து வந்தது.ஒரு வழியாக பிரச்சனைக்குறியதாக இருந்த 12 ஏக்க‌ர் குப்பை கிட‌ங்கில் ப‌ணியை துவ‌க்குவ‌த‌ற்கு மாவட்ட ஆட்சியர் ,திலையேந்தல் பஞ்சாயத்து தலைவர் ,கீழக்கரை நகராட்சி தலைவர் ஆகியோர் கூட்டாக அமர்ந்து பேசி அப்பிர‌ச்சனை முடிவை நெருங்கி விட்ட‌து.விரைவில் அங்கு சுவர் கட்டுப‌ணியை துவ‌க்க‌ப்ப‌டும் மேலும் அங்கு நிர்ம‌ல் சொன்ன‌து போல் சுற்றுத‌ல‌மாக‌ மாற்றுவ‌த‌ற்கு அர‌சிட‌ம் அத‌ற்கான‌ முய‌ற்சியை மேற்கொள்வேன் என்றார்.


பின்ன‌ர் கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

ச‌த‌க் க‌ல்லூரி இய‌க்குநர் யூசுப் க‌லெக்ட‌ரிட‌ம் , கீழ‌க்க‌ரை கட‌ற்க‌ரை அருகே ஏராள‌மான‌ இட‌ங்க‌ள் ஆக்கிர‌ம‌க்கப்ப‌ட்டுள்ள‌து.இத‌ற்கு அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று நேர‌டியாக‌ கோரிக்கை வைத்தார்.

அஹமது புஹாரி நன்றி கூறி பேசும் போது..
கீழக்கரையிலிருந்து கடற்கரை வழியாக நான் செல்லும் போது 3 கிலோ மீட்டர் மிகுந்த அசுத்தமாக காட்சியளித்தது.ஆனால் அதை தாண்டியவுடன் மிக அற்புதமாக கடற்கரை திகழ்கிறது.மேலும் மிக அருமையான ஒரு கடற்கரையை நாம் கீழக்கரையில் பெற்றுள்ளோம் அதை பாதுகாப்போம். இதற்கான முதல் படியை அடி எடுத்துள்ளோம் விரைவில் இப்பிரச்சனையை தீர்ப்போம்.




இந்நிகழ்ச்சி குறித்து சேகு ச‌த‌க் இப்ராகிம் கூறுகையில்,
கவுசிலர்க‌ளும் மற்ற தெரு அமைப்புகளும் ,பொதுமக்களும் மிக குறைந்த அளவில் கலந்து கொண்டது மிகுந்த வேதனையான விஷயம் வருடத்தில் பத்து நாட்கள் ஊரில் இருக்கும் அவர்கள் அக்கறை எடுத்து செய்யும் பொது விசயத்தில் வருடம் முழுவதும் ஊரில் இருக்கும் நாம் நம்முடைய பங்களிப்பை செய்யாமல் இருப்பது மிகுந்த வேதனையான விஷயம்,இதில் நடந்த உரையாடலை பொதுமக்கள் கேட்காமல் இருந்ததும் வருத்த பட வேண்டிய விஷயம்,அழைப்பு இல்லாவிட்டாலும் ஊரின் நன்மை கருதி இனிமேல் ஊர் பொது விச‌யத்தில் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் கீழக்கரை முன்னேறும்.குப்பை இல்லாத ஊர் என்று பெயர் எடுப்போம்.ஊரின் முக்கிய‌மான பிரச்சனைக்கு நடைபெற்ற க‌ருத்த‌ர‌ங்கில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் இல்லாத‌து மிகுந்த‌ ஏமாற்ற‌தை அளிக்கிற‌து என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.