கீழக்கரை கடற்கரையில் படகு கயிற்றில் பின்னப்ப்பட்டு இறந்த நிலையில் பாம்பு (பைல் படம்)
மன்னார் வளைகுடாவை சேர்ந்த கீழக்கரை கடல் பகுதியில் கடல் பாம்புகள் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் வாழ் உயிரனங்களின் உல்லாச புரியாக சொல்லப்படும் மன்னார் வளைகுடாவில் பவள பாறைகள் ,அரிய வகை கடல் உயிரனங்கள் வாழ்கின்றன.ஊர்வன இனத்தை சேர்ந்த கடல் பாம்புகள் 11 வகைகள் இருப்பதாகவும்,மொத்தம் 70 வகையான சிற்றினங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கீழக்கரை கடல் பகுதியில் பாம்புகள் உள்ளது சில சமயம் கடலின் மேல் பகுதியில் காண முடிகிறது ,சில சமயம் பாம்புகள் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்குங்கிறது இது வரை பாம்புகளால் எந்த ஆபத்தும் ஏற்பட்டதில்லை என்று மீன் பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்
இது குறித்து கடல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, இந்த கடல் பாம்புகளில் சில வகை நல்ல பாம்பின் விஷத்தை விட 4 மடங்கு வீரியம் உடைவையாக உள்ளது. ஆனால் மனிதர்கள் துன்புறுத்தினால் மட்டுமே தாக்கு குணம் படைத்தவை.மேலும் சில நாடுகளில் மக்கள் இவ்வகை பாம்புகளை விரும்பி சாப்பிடுவதால் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
வால் பகுதி தட்டையாக இருந்தால் விஷத்தன்மை கொண்டதாகவும் கூர்மையானதாக இருந்தால் விஷமில்லாத பாம்பாகவும் அறியப்படுகிறது.மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் இக்கடல் பாம்புகள் தீண்டி யாரும் இறந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை.குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் இவ்வினங்கள் நிலத்திலோ அல்லது தண்ணீரிலோ வாழ முடியாது. ஏனெனில் இவை கடல் தண்ணீரில் மட்டுமே வாழ்வதற்கு ஏற்ற வகையில் இயற்கையாகவே இதன் உடலமைப்பு இருக்கிறது. விசைப்படகுகள் மூலம் இறால் மீன்களைப் பிடிக்க செல்லும்போது அதன் வலையில் இவையும் சிக்கி இறந்துவிடுகின்றன. சின்னஞ்சிறு மீன் குஞ்சுகளைப் பிடித்து தின்று உயிர் வாழும் இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் கடலின் சுற்றுப் புறச் சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது'' என்றார்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.