Monday, December 19, 2011

அடிக்கடி விபத்து ! பல்லாங்குழியாக கீழக்கரையின் முக்கிய சாலை !




கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை பெட்ரோல் பங்க் வரை உள்ள வள்ளல் சீதக்காதி சாலையை சில வருடங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை அமைத்தது.இந்த சாலை நெடுஞ்சாலைதுறையின் பொறுப்பில் உள்ளது.
தற்போது இந்த சாலையில் பல்லாங்குழி விளையாடலாம் என்ற அளவில் குண்டும் குழியுமாக உள்ளது. அதிலும் தற்போது பெய்த மழையால் அதிகம் சேதமடைந்து ரோட்டில் கழிவு நீர் தேங்கி மோசமான நிலையில் உள்ளது.

குறிப்பாக பழைய காவல் நிலையம் அருகில் உள்ள விஏஓ அலுவலகம் எதிரில்,சுடுகாட்டுக்கு எதிர்புறம்,நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகில் டிராவல்ஸ் அலுவலகங்கள் எதிரில் என மூன்று இடங்களில் அதிக அளவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் டூவீலர்களில் சென்றோர் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தோர் கூறியதாவது, இந்த சாலையை நெடுஞ்சாலைதுறை அமைக்கும் போது ஒரெ சீராக இல்லாமல் மேடு பள்ளமாகவே அமைத்தார்கள்.எனவே மழை காலங்களில் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலை சேதமடைகிறது. த‌ற்போது மீண்டும் இந்த‌ சாலையை சீர‌மைத்து ச‌ரியான‌ முறையில் அமைக்க‌ வேண்டும்.நெடுஞ்சாலைதுறை அதிகாரிக‌ளின் இத‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்ற‌ன‌ர்.


இது குறித்து கீழக்கரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் கூறியதாவ‌து,
இது சம்பந்தமாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளேன்.விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். இந்த சாலையை சீர் செய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.

2 comments:

  1. நெடுஞ்சாலைத்துறை அமைத்துக்கொடுத்த சாலைக்கே இந்த கதியா? அய்யகோ!
    நெடுஞ்சாலைதுறை அமைக்கும் போது ஒரெ சீராக இல்லாமல் மேடு பள்ளமாகவே அமைத்த இந்த ரோட்டை மேற்பார்வை (Quality Check) செய்து ஒப்புதல் அளித்தது (பில் பாஸ் பண்ணியது) யாரு?
    எங்கே நம்ம மன்காத்தாவின் தங்கச்சி மகனோட comments?
    அன்புடன் கடலோசைக்கு,
    பாதிக்கப்பட்ட இடங்களை போட்டோ எடுத்து செய்தி போடுறதோட உங்க வேலை முடிஞ்சிடுத்தா? இல்லே சம்பத்தப்பட்ட அதிகாரிங்களை அணுகி இந்த அவலங்களை சரி பண்ணுற விசயமா follow-up ம் பண்ணுவீங்களா?

    ReplyDelete
  2. ஹி ஹி பிரசவத்திர்க்கும் பிற சவத்திற்க்கும் இலவசம்....
    (ஹசனுல் ஆரிபின் - தெற்கு தெரு)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.