Friday, December 9, 2011

கீழக்கரையில் பிப்ரவரி 2 முதல் பிளாஸ்டிக் பை,கப்களுக்கு தடை! வியாபாரிகள் ஏற்பு !



கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்தாலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்றது . முந்தைய நகராட்சி கூட்டத்தில் கீழக்கரையில் பிளாஸ்டிக் பை,கப் போன்றவை விற்பதற்கு 2012 ஜனவரி 1 முதல் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.இது குறித்து இக்கூட்டத்தில் வியாபாரிகளின் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மான்,அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கீழக்கரை வியாபாரிகள் சங்க பொருளாளர் சந்தாணகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பை மற்றும் கப்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து கமிசனர் முஜிப் ரஹ்மான் எடுத்து கூறினார்.

வியாபரிகள் தரப்பில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜனவரிப் 1 முதல் தடை விதித்திருப்பதை மாற்றி கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தனர்.இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 2-2-2012 முதல் தடை விதிப்பு அமலுக்கு வருமென்று அறிவித்து தேதி மாற்றப்பட்டது.வியாபாரிகளும் நகராட்சியின் இம்முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பிப் 2ந்தேதி பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு தடை விதிப்பதாக நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா அறிவித்தார்.

3 comments:

  1. வருத்தமில்லா வாலிபர் சங்கம்December 9, 2011 at 9:50 PM

    அப்ப இனிமேல் கறி, மீன் வாங்குவதற்கு பட்டையை தூக்கிக்கிட்டு தான் போக வேண்டும்.! இனி தெருவெல்லாம் பிளாஸ்டிக் பை போயி
    பட்டையாய் கிடக்கும்,
    பன ஓலையும் விலை ஏறிடும்.

    ReplyDelete
  2. கீழக்கரையை தூய்மையாக்கும் முயற்சியில் நகராட்சி தலைவர் அவர்கள் எடுத்த இந்த முடிவு மிகவும் வரவேற்க்கத்தக்கது. இதற்க்கு ஒத்துழைப்பு தந்த வியாபாரிகளுக்கு நன்றி. என்னதான் நகராட்சியும் வியாபாரிகளும் இணைந்து முடிவெடுத்தாலும் சட்டம் இயற்றினாலும் பொது மக்களாகிய நாம் அதை ஈடுபாட்டுடன் செயல்படுத்தினால் தான் இந்த திட்டம் வெற்றியடையும்.
    கடைகளில் ஒரு சின்ன பொருளுக்கும் பிளாஸ்டிக் கவர் கேட்பது திருமணம் மற்றும் விசேஷங்களில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது என நாமும் நமதூரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு நல்குவோமாக

    ReplyDelete
  3. vision of kilakarai 2020December 10, 2011 at 7:03 PM

    இறைவன் நமக்கு சிந்திக்கும் அரிய சக்தியை தந்து விட்டான் என்பதற்காக வருத்தமில்லாத வாலிபர் சங்கம் போல எதிலும் எந்த விதத்திலாவது குற்றம் குறை காணாது தெற்கு தெருவான்(ர்)போல் மாற்றியும் யோசிப்போமே!!!

    இப்போது உபயோகத்தில் இருக்கும் பிலாஸ்டிக் பை எந்த சூழ்நிலையிலும் மக்காது. பட்டை அப்படி அல்ல. மக்குவதோடு உரமாகவும் மாறி விடும். கழிவு நீர் கால்வாய் அடைப்புக்கு பிரதான காரணமே பிலாஸ்டிக் பைகள்தான்.

    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் இதற்கும் பொருந்துமே,,.

    இருப்பினும் இன்றைய நாகரிக காலத்தில் ஒரு கையில் செல் போனும் ம்ற்றொரு கையில் மீன் பட்டையும் கொண்டு செல்லுவது வருத்தமில்லா வாலிபர் சங்கத்தினர்க்கு வருத்தமான விஷயந்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!! இதை பார்க்கும் வருங்கால மாமியார்க்கு பரம சந்தோஷமாக இருக்குமே ?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.