Saturday, December 17, 2011

சாலையா ? கழிவுநீர் சாலையா ?



கீழக்கரை 17வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு ஜாமியா நகர் பள்ளிவாசல் அருகே நீண்ட நாட்களாக சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சாஹிர் என்பவர் கூறுகையில் ,புதுத்தெரு ஜாமியா நகர் தொழுகைப்பள்ளி அருகே கழிவு நீர் தேங்கியுள்ளதை நீங்கள் காணலாம்.இந்த வழியாகத்தான் ஹமீதிய ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர்.இந்த கழிவு நீரை தாண்டிதான் செல்கின்றனர்.சில சமயம் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் கீழே விழுந்து அடிபடும் நிலையும் ஏற்படுகிறது.கீழக்கரை நகராட்சிக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது வரை சுத்தம் செய்யப்படவில்லை.தயவு கூர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கேட்ட போது, இதற்கு நிரந்தர தீர்வு(கழிவு நீர் தொட்டி அமைக்க) காண்பதற்கு 5 சென்ட் இடம் தேவைபடுகிறது இதற்காக‌ உரியவர்களிடம் பேசி வருகிறோம்.விரைவில் இப்பிரச்சனையை தீர்ப்போம் என்றார்.

அப்பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கூறுகையில் ,நிரந்தர தீர்வு வரும் வரை கழிவுநீர் அகற்றும் லாரிகளில் உறிஞ்சும் குழாய்கள் மூலம் கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

1 comment:

  1. நிரந்தர தீர்வு எல்லாம் எடுக்கட்டும்... தற்காலிக நடவடிக்கை என்ன?..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.