Sunday, December 4, 2011

கீழக்கரை குப்பை பிரச்சனை முடிவுக்கு வருகிறது ! நகராட்சி தலைவர் பேட்டி !


நேற்று ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் அமைச்சர் சுந்தராஜன்,ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ,முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,அதிமுக மாவட்ட செயலாளர் ஆனிமுத்து,அதிமுக மேலவை உறுப்பினர் ரிஸ்வான் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற‌ மாற்று திற‌னாளிக‌ளுக்கு ப‌ரிச‌ளிப்பு விழா ந‌டைபெற்ற‌து.

இவ்விழாவில் க‌ல‌ந்து கொண்ட‌ கீழ‌க்க‌ரை நக‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியாவிட‌ம் கீழ‌க்க‌ரைடைம்ஸ் சார்பாக‌ கீழ‌க்க‌ரை குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வுக்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிறதா என்று கேட்ட‌ போது அவ‌ர் கூறிய‌தாவ‌து,

தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்ப‌ட்ட கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு சொந்தமான‌ இட‌த்தில் சுற்றுசுவ‌ர் எழுப்பி அங்கு குப்பையை கொட்டுவ‌து ச‌ம்ப‌ந்த‌மாக‌ இதுவரை 2க்கும் மேற்ப‌ட்ட‌ முறை கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் நான், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் ஆகியோர் அம‌ர்ந்து இந்த‌ பிர‌ச்சனையில் சுமூக‌மாக‌ தீர்வு காண்ப‌த‌ற்கு ஆலோசனை ந‌ட‌த்தினோம்.ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல் வேறு முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர்.ஆலோசனை சுமூகமாக நடைபெற்றது மேலும் த‌ற்போதைய‌ தில்லையேந்தல் ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் எங்கள் கட்சியை(அதிமுக) சேர்ந்த‌வ‌ராக‌ இருப்ப‌தால் சுமூக‌மான‌ தீர்வு காண‌ எளிதாக‌ இருக்கும்.த‌ற்போது இப்பிர‌ச்ச‌னைக்கான தீர்வை வரைவு செய்யும் பணி இறுதி க‌ட்ட‌த்தில் உள்ள‌து. விரைவில் சுற்றுசுவ‌ர் எழுப்புவ‌த‌ற்க்கு டெண்ட‌ர் கோர‌ப்ப‌ட்டு ப‌ணிக‌ள் தொட‌ங்க‌ப்ப‌டும்.இப்ப‌ணிக‌ள் நிறைவ‌டைந்த‌வுடன் கீழக்கரை நீண்ட காலமாக நீடித்து வந்த குப்பை பிர‌ச்ச‌னைக்கு தீர்வு ஏற்ப‌ட்டு விடும்.

தமிழக முதல்வர் ஆதரவுடன் பொது மக்கள் ஒத்துழைப்புடன் கீழக்கரை நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக மாற்றுவோம் இது உறுதி என்றார்

தில்லையேந்தல் பஞ்சாயத்தில் குறிப்பிட்ட இடத்தில் குப்பை கொட்ட கூடாது என்றும் சுற்றுசுவர் கட்டுவதற்கும் அப்பகுதியை சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறப்பிட தக்கது

4 comments:

 1. மங்காத்தவின் தங்கச்சி மகன்December 4, 2011 at 7:15 PM

  இந்த செய்தியின் தங்கள் பதிவு நாள்:04/12/2011. இதில் நேற்று இராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் நகராட்சி தலைவி அவர்கள் தங்கள் நிருபரிடம் விரைவில் சுற்று சுவர் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டு ப்ணிகள் தொடங்கப்படும் என்று கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

  ஏற்கனவே 25/11 2011 வெள்ளிகிழமை தினமலர் (மதுரை பதிப்பு பக்கம் 11) இதழில் கீழக்கரை நகராட்சி சார்பாக 23/11/2011 தேதியிட்டு ந.க.எண்:
  இ 1/108/2011 குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு (ஐந்தாம் அழைப்பு)- நகராட்சி குப்பைக் கிடங்கு இடத்திற்கு சுற்று சுவர் கட்டுதல் (சர்வே எண்:87/2) நமக்கு நாமே திட்டம் (2009-2010) -ன் கீழ் ரூ. இருபது லட்சம் மதிப்பிட்டில் வேலை முடிக்கப்பட வேண்டிய காலம் ஒரு மாதம் என டெண்டர் (சமர்ப்பிக்க கடைசி நாள்: 08/12/2011 பிற்பகல் 3.30 மணி வியாழக்கிழமை - ஒப்பம் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், ஆணையாளர் - கூ.பொ) கோரப்பட்டுள்ளது.

  ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தில் தொகுதி எம்.எல்.ஏ தலைமையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் பற்றிய அறிவிப்பை நகராட்சி தலைவி அவர்கள் அறியாதது போல இதுவும் நடந்திருக்குமோ !!!!!!

  யாமோன்றும் அறியோம் பராபரமே ???

  இது தருணத்தில் நாகராட்சி தலைவியின் கனிவான் பார்வைக்கு: இது ஊர் பிரச்சனை. தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர் தமது கட்சிக்காரர் என நினைத்து மிதப்பில் இருந்து விடாதீர்கள். அங்கும் தலைவரின் கருத்துக்கு மாற்று கருத்து உள்ளவர்கள் உண்டு என்பதையும் ஏற்கனவே இந்த பிரச்சனை காரணமாக சிங்கத்தின் கோட்டையிலேயே (கீழக்கரையில்) ஊர்வலம் நடத்தியவர்கள் என்பதையும் மனதில் திடமாக கொண்டு செயல்படுங்கள்.

  தங்களின் இந்த முயற்சியில் முழுமையான வெற்றி காண உளமார்ந்த பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  நல்லதையே நினைப்போம். நல்லதையே நாடுவோம். அதற்காக பிரார்திப்போமாக.

  ReplyDelete
 2. தொடர்ச்சியாக கீழக்கரை டைம்ஸில் வெளி வந்து கொண்டிருக்கும் “ கீழக்கரை நகராட்சி தலைவி”யின் அதிவேக செயல்பாடுகள் உண்மையில் பாராட்டுக் குரியது...இது வெறும் பேச்சளவில் இல்லாது தாங்கள் உண்மையில் சாதித்து காட்ட வேண்டுமென்பது தான் எங்கள் விருப்பம்...இன்ஷா அல்லாஹ் இறைவன் அருளால் உங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. சென்னை : சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக யாத்திரிகர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு, அதிக ரயில்களை இயக்க வேண்டும் என, தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  கூடுதல் பெட்டி
  இது தொடர்பாக, ராமநாதபுரம் மக்கள் சார்பில், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை:
  ராமேஸ்வரம் - மதுரை இடையே இயக்கப்படும், "பாசஞ்சர்' ரயில்களில், கூட்டம் நிரம்பி வழிவதால், கூடுதல் பெட்டிகளை இணைத்து, இந்த வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
  அதிக பயணிகள் வசதிக்கேற்ப, பகல் நேரத்தில் இவை இயக்கப்பட வேண்டும். ராமேஸ்வரத்தில், காலை 8 மணிக்கும்; மதுரையில், காலை 10 மணிக்கும் ரயில்கள் விடலாம்.  நேரம் மாற்றம்
  சேது விரைவு வண்டி, அதிகாலை 3 மணிக்கு ராமநாதபுரம் வருவது, பயணிகளுக்கு இடர்ப்பாடாக உள்ளது. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரும் மற்றொரு ரயில், காலை 10 மணிக்கு ராமநாதபுரத்தையும்; 12 மணிக்கு ராமேஸ்வரத்தையும் அடைகிறது. இரு ரயில்களும், காலை 5 முதல், 8 மணிக்குள், ராமநாதபுரம் வந்தடையும் வகையில், நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.  அதி விரைவு ரயில் வேண்டும்
  சென்னை - ராமேஸ்வரம் இடையே, இரு மார்க்கங்களிலும், பகலில் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ராமநாதபுரம் - தூத்துக்குடி வழியாக, காரைக்குடியில் இருந்து, கன்னியாகுமரிக்கு, புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு அறிவிப்பு, 2008 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
  ஆய்வு முடிந்து, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, 2012 இறுதிக்குள் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம், ஆன்மிக யாத்திரிகர்களுக்கு உதவியாக அமையும்; சுற்றுலா பெருக உதவும். இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  "இங்குள்ள மக்களின் கோரிக்கைகளை, முன்பு இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. - ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா

  ReplyDelete
 4. விவசாய கூலி தொழிலாளி மகன் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை


  புகைப்பட ஆல்பம்

  --------------------------------------------------------------------------------
  சாய் பாபா முதலாம் ஆண்டு மகா ஆராதனை
  --------------------------------------------------------------------------------
  பத்ம விருது வழங்கு விழா


  அதிகம்
  படித்தவைஅதிகம் விமர்சிக்க
  பட்டவை அதிகம் ஈ-மெயில்
  செய்தவை
  அக்னி வெயில் கொளுத்தியது சென்னையில் 107 டிகிரி வெப்பம்
  திருவண்ணாமலைக்கு700 சிறப்பு பஸ்கள்
  வங்கி கணக்கு துவங்காதவர்களுக்கு வேலை இல்லை
  பெற்றோர் பிரிந்ததால் மகன் தற்கொலை
  வெயிலில் மயங்கி குழந்தை பலி
  "மெகா' கூட்டணி - தி.மு.க., திட்டம் பலிக்குமா?
  முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பாய்ச்சல்: பயங்கரவாத தடுப்பு மைய திட்ட முடிவை கைவிட கோரிக்கை
  5 ஆண்டுகள் டி.ஜி.பி.,யாக இருப்பேன்': ஐ.ஜி., பிரமோத்குமார் மிரட்டல்
  மதுரை ஆதீனம் மடத்தில் வருமானவரி ரெய்டு: பின்னணியில் தி.மு.க.,?
  "கூட்டணி அரசை நடத்துவது ஒரு கலை': சரத் பவார்
  பூமிக்கு அருகில் வருகிறது சந்திரன்:வழக்கத்தைவிட பெரியதாக தெரியும்
  வெயிலில் மயங்கி குழந்தை பலி
  வங்கி கணக்கு துவங்காதவர்களுக்கு வேலை இல்லை
  கட்டணம் வசூலிக்க குறைந்த ஊழியர்கள் மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் கோஷம்
  2 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி


  இ-பேப்பர்
  எழுத்தின் அளவு:
  Share


  ஆல்பம்
  கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் வேல்கம்புடன் ..
  பதிவு செய்த நாள் : மே 05,2012,23:48 IST
  கருத்தை பதிவு செய்ய
  ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாவிலாதோப்பை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகன் கோபால சுந்தரராஜ்,26, ஐ.ஏ.எஸ்., தேர்வில், தேசிய அளவில் ஐந்தாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
  மாவிலாதோப்பை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி ராஜம்மாள். இவர்களது மகன் கோபால் சுந்தரராஜ். இவர், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். கோவை விவசாய பல்கலையில் பி.எஸ்சி., டில்லியில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றார்.

  மூன்று முறை போராடி வெற்றி : முதன் முறையாக ஐ.ஏ.எஸ்., தேர்வின் போது, தந்தை இறந்தததால் தேர்வை பாதியில் கைவிட்டார். இரண்டாவது முறையும் தோல்வியே கிடைத்தது. மூன்றாவது முயற்சியில் தேசிய அளவில் ஐந்தாமிடம் பெற்று சாதனை படைத்தார்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.