

பைல்(பழைய) படம்
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.மீன்கள் அதிக அளவில் பிடிபடும் சமயங்களில் வெளியூர் சென்று கொள்ளளவு அதிகமுள்ள மீன் பதனிடும் நிலையங்களில் மீன்களை சேமித்து வைக்க வேண்டியுள்ளது.இதனால் செலவு அதிகமாகி வருகிறது.ஏற்கெனெவே பல்வேறு பிரச்சனைகளில் மீன் பிடி தொழில் நசிந்து வருகிறது அதிலும் இது போன்ற செலவுகள் அதிகமாகும் போது மேலும் சிக்கலாகிறது என மீனவர் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே கீழக்கரையிலேயே அரசு மீன் பதனிடும் நிலையம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மீன் தொழிலில் ஈடுபடும் இப்ராகிம் என்பவர் கூறுகையில் ,
கீழக்கரை முற்றிலும் குளிரூட்டப்பட்ட மீன் பதனிடும் நிலையத்தை அரசு அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை ஏற்கபடவில்லை.நாளொன்றுக்கு 2 டன்னுக்கு அதிகமாக இப்பகுதியில் மீன்கள் பிடிபடுகிறது.மீன் பதனிடும் நிலையம் கீழக்கரையில் அமைக்கப்பட்டால் இங்கேயே பதப்படுத்தி கொள்ளளாம். சுற்றியுள்ள ஏராளமான கிராம மீனவர்களும் பயன் பெறுவார்கள்.எனவே அரசு இது குறித்து கவனம் செலுத்தி மீன் பதனிடும் நிலையம் அமைத்து நலிந்து வரும் மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு சலுகை விலையில் கட்டணங்களை பெற வேண்டும்.இதன் மூலம் இப்பகுதியில் இத்தொழில் வளம் கொழிக்கும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.