கீழக்கரை நகராட்சியில் கமிசனர் மூன்று மாதங்களுக்கு முன் இட மாறுதல் செய்யப்பட்டார்.எனவே ராமநாதபுரத்தில் கமிசனராக பணிபுரியும் முஜிபுர்ரஹ்மான் கீழக்கரையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். கடந்த மூன்று வாரங்களாக இவர் கீழக்கரை வரவில்லை இதனால பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. சுகாதார அதிகாரி பணியிடமும் காலியாக உள்ளது.
இது குறித்து அசினா என்பவர் கூறுகையில் , கீழக்கரை நகராட்சியில் நிரந்த கமிசனர் இல்லாததால் கட்டிட வரைபடம் ஒப்புதல் மற்றும் வரி மாறுதல் சம்பந்தமான பணிகள் முடங்கியுள்ளன. சுகாதார அதிகாரி இல்லாததால் பிறப்பு,இறப்பு சான்றிதழ்கள் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக நிரந்தர கமிசனர் மற்றும் சுகாதார அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார்.
நகரின் முதல் குடிமகளும் மற்றும் இருபது மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் படும் துயரை காணது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? முன்னவர்கள் சென்ற வழியில் செல்லும் முகமாக ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்களா ? என்ன கொடுமைடா இது ?
ReplyDeleteஉடனடியாக நிர்வாக கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்றி பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் மாவட்டத்தை நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளரை ஒன்றுக்கு பல முறை சந்தித்து உடனடி தீர்வு காண வேண்டாமோ !!! மேலும் தொகுதி எம்.எல்.எ யின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று உரிய பரிகாரம் காண வேண்டாமோ !!!
ஜனநாயக ஆட்சி அமைப்பில் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணத் தான் மக்கள் பிரதிநித்துவ சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் அங்கம் வகிப்பவர்கள் தங்கள் பொருப்புணர்ந்து செயல் பட தவறினால் மக்களின் சாபத்திற்கு ஆளாகி அவர்கள் ஓட்டு மூலம் கொடுத்த கவுரவத்தை இழக்க நேரிடும் என்பதை திண்ணமாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் கமிஷனர் நியமன பிரச்சனை நமது கீர்த்தி மிகு கீழக்கரை நகர், என்று நகராட்சியாக அந்தஸ்து பெற்றதோ அன்றையிலிருந்து உள்ளது. இது நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. நிர்வாகப் பிரச்சனை மட்டுமே. மக்கள் பிரதிநிதிகள் முறையாக மாவட்ட ஆட்சியாளரை அணுகினால் பிரச்சனை தீர நிச்சயமாக வழி பிறக்கும். புண்ணு நமக்குத்தான்.
கடந்த கால சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கீழக்கரையை தாலுகா அந்தஸ்து தீர்மானம் கிடப்பில் உள்ளது.இது பற்றியும் தீர்மானம் இயற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் தொகுதி எம்.எல்.எ யின் மேலான நடவடிக்கைக்கு தொடர் முயற்சி எடுத்து வரும் கல்வி ஆண்டு முதல் செயல் பட தொடங்குமானல் ஆயிரக்கணக்கான பள்ளி,கல்லூரி மாணவமணிகளின் மற்றும் பெற்றோர்களின் புண்ணியத்தை தேடிக் கொள்வீர்கள் என்பதில் அணு அளவும் ஐயமில்லை.
அதே சந்திபின் போது காவேரி குடி நீர் வினியோகத்திற்கு பொறுப்பு வகிக்கும் மாவட்ட ஆட்சியரிடம் நமது நகரில் வினியோகத்தை முறை படுதத்வும் குறிப்பிட்ட நேரத்தில் அனுதினமும் கிடைக்கவும், எல்லாப் ப்குதியிலும் எல்லா பயனாளிகளுக்கும் சீரான அழுத்தத்துடன் வினியோகம் கிடைக்க அழுத்தமான கோரிக்கையை வையுங்கள். உங்கள் கடைமையை சிறப்பாக முறையாக் செய்து மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
செய்வீர்களா? ஓட்டு போட்ட மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் பார்த்திருக்கிறார்கள்.
கமிஷனர் மூன்று மாதங்களுக்கு முன் இட மாற்றப்பட்டார் என்பது தவறான பதிவாகும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.அவர் கமிஷனர் அந்தஸ்து பெற்றவர் அல்லர்.செயல் அலுவலர் அந்தஸ்து பெற்றவர் என்பது தான் உண்மை. அரசு நிர்வாக சீர்கேடு. என்னை திருத்திக்கொள்ள தங்கள் தரப்பில் ஆய்வு செய்து கொள்ள்ங்கள்
ReplyDeleteவேதனை. வேதனை மேல் வேதனை. சோதனை மேல் சோதனை.இது சம்பந்தமாக இரு வகை பதிவுகளை செய்த பின் இரு வகையான செய்திகள் என் காதில் தேனாக பாய்ந்ததா அல்லது ஈயத்தை காய்ச்சி ஊற்றப்பட்டதா என என் மர மண்டைக்கு புரியவில்லை. இதனால் என் கண்கள் வீங்கி விட்டன. ஆச்சரியத்தில் அளவுக்கு அதிகமாக விரிந்ததாலோ அல்லது கீழக்கரை நகருக்கு எற்பட இருக்கும் சுகாதார இழிநிலையை நினைத்தோ என்று புரியவில்லை.படைத்த அவனுக்கே வெளிச்சம்.
ReplyDeleteஇன்று முதல் நாம் அனைவரும் கணாக் காணும் காலம் இனிதே தொடங்கி விட்டது. இரண்டு காதுகளையும் சுத்தமாக வைத்திருங்கள், பூ சுற்ற தொடக்கி விட்டார்கள். புத்தியை கூர்மையாக்கிக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்
நேற்று மேலத்தெரு சதகத்துல்லா அப்பா வளாகத்தில் உஸ்வத்துல் ஹசனா முஸ்லீம் சங்கமும் சென்னை எக்ஸ்நோரா என்ற தன்னார்வ அமைப்பும், கீழக்கரையை குப்பைக்கரையாக மாற்றிய குப்பை பிரச்சனையை தீர்க்க கலந்தாய்வு கூட்டம் அனைவருக்கும் பரவலாக அறிவிப்பு செய்யாத நிலையில் மாவட்ட ஆட்சியர், தொகுதி மக்கள் பிரதிநிதி மற்றும் குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடந்ததுள்ளது. அல்ஹம்துலில்லா.
அப்போது மரியாதைக்குரிய மாவட்டத்தின் முதல் குடிமகன் உயர்திரு. அருண்ராய் ஐ.எ.எஸ் அவர்கள் உதிர்த்த முத்தான பேச்சை அறிந்து ஆனந்த கண்னீர் விட அன்புடன் வேண்டுகிறேன்.
“தமிழ் நாட்டில் கீழக்கரையை போல் குப்பை பிரச்சனை உள்ள ஊரை எனது அனுபவத்தில் காண்பது இதுவே முத்ல் முறை. குப்பை அள்ளும் பணியாளர்கள் இங்கு மிகவும் குறைவு. 1964-ல் நியமிக்கப்பட்ட 34 பணியாளர்கள் எண்ணிக்கையே இன்றும் இங்கு தொடர்கிறது. தற்போது உள்ள சூழ்நிலைக்கு குறைந்தபட்சம் 75 துப்பரவு பணியாளர்கள் அவசியம். அந்த பணியாளர்களை அரசு வ்ழங்கும் வரை தற்காலிக எற்பாடாக ஊர் பிரமுகர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அதற்கு நானும், நகராட்சி கமிஷனரும் (பொருப்பு)கூட்டு தலைமை ஏற்பதாகவும், அக்குழு மூலம் 35 துப்பரவு பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை கீழக்கரை நகரை சார்ந்தவர்கள் வழங்க முன் வந்தால் இந்த பிரச்சனையை சுலபமாக தீர்க்க முடியும்”.
என்ன ஒரு நோபல் பரிசுக்குரிய அறிவுறுத்தல்.வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி என்று எதற்காக கட்டுகிறோம்? ஒரு சமயம் அந்த வரி பணம் எல்லாம் அருகில் உள்ள ஸ்ரீலங்கா அரசுக்கு செல்லுகிறதோ? யாம் அறியோம் பராபரமே !!!
27/12/2011 வெள்ளிக்கிழமை அன்று மேலத்தெரு ஹமீதியா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸனா மூஸ்லீம் சங்கத்தின் சார்பாக நமது தொகுதி மக்கள் பிரதிநிதி சகோதரர். ஜவாஹிருல்லா அவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஏற்புரை நிகழ்த்திய அவர், முஸ்லீம் நிறைந்த காயல் பட்டிணம், கூத்தாநல்லூர் போன்ற ஊர்கள் சுத்தமாக இருக்கும் போது கீழக்கரைக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை என வினா எழுப்பி உள்ளார்கள்.
இப்போது மாவட்ட ஆட்சியரின் மூலம் அவர்களுக்கு விடை கிடைத்திருக்கும்.
பொது மக்களுக்காக அரசு மானியம் போனற உதவிகளை செய்து தன் கடைமையை செவ்வனே செய்ய அவர்கள் அயராது முயற்சிக்க கீழக்கரை மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்.