கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் மனநோயாளி (பழைய படம்)
கீழக்கரையில் சுற்றி திரிந்த மனநோயாளி
ஏர்வாடி தர்ஹாவில் சுற்றி திரிந்த மன நோயாளிகள் அரசு அதிகாரிகளால் வாகனங்களில் மனநல காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்
வெளியூரை சிலர் மன நோயாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து ஏர்வாடி தர்ஹா - கீழக்கரை சாலைகளில் இறக்கி விட்டு செல்லும் அவலம் நீண்ட காலமாக இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு இறக்கி விடப்பட்ட மனநோயாளிகள் அருகிலுள்ள ஏர்வாடி தர்காவிற்கும்,எஞ்சியவர்கள் கீழக்கரை மற்றும் அருகிலுள்ள ஊர்களில் பரிதாபமாக சுற்றி திரிகிறார்கள்.
இநிலையில் தற்போது 10க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் கீழக்கரை நகருக்குள் சுற்றி திரிகிறார்கள்.ஒரு சிலர் தலையில் காயங்களுடன் உள்ளார்கள்.ஒரு சில மனநோயாளிகள் கடைக்கு கற்கள் எரிவது,சிறுவர் சிறுமிகளை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.ஒரு சிலர் நடுரோட்டில் படுத்து உறங்குகிறார்கள்.
இநிலையில் தற்போது 10க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் கீழக்கரை நகருக்குள் சுற்றி திரிகிறார்கள்.ஒரு சிலர் தலையில் காயங்களுடன் உள்ளார்கள்.ஒரு சில மனநோயாளிகள் கடைக்கு கற்கள் எரிவது,சிறுவர் சிறுமிகளை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.ஒரு சிலர் நடுரோட்டில் படுத்து உறங்குகிறார்கள்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹாஜா முகைதீன் என்பவர் கூறுகையில் ,சமீபத்தில் ஏர்வாடி தர்ஹாவில் சுற்றி திரிந்த மன நோயளிகளை சுகாதாரத்துறையினர் வாகனங்களில் ஏற்றி மன நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதுபோல் கீழக்கரையில் சுற்றி திரியும் இவர்களையும் அழைத்து செல்ல வேண்டும்.மேலும் கேரளாவை சேர்ந்தவர்கள்தான் இதுபோல் மனநோயாளிகளை சாலைகளில் இறக்கிவிட்டு செல்கிறார்கள்.இரக்கமில்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை வேண்டும் என்றார்.
ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் மன நலகாப்பகத்தில் தீவிபத்து நடந்தது. இதில் 28 மனநோயாளிகள் தீயில் கருகி உயிரழந்தனர். மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால் தப்பிக்க முடியாமல் உயிரழப்பு அதிகமாக இருந்தது பின்னர் வழக்கம் போல் அசம்பாவிதம் நடைபெற்ற பிறகு தான் அரசாங்க அனுமதியில்லாமல் ஏர்வாடி தர்ஹாவில் நடத்தப்பட்ட அனைத்து மனநல காப்பகங்களும் அரசின் நடவடிக்கையால் மூடப்பட்டது.இச்சம்பவத்திற்கு பிறகும் மன நோயால் பாதிப்படைந்தவர்களை ஏர்வாடி தர்ஹாவிற்கு அழைத்து வந்தால் குணமாகும் என்று பலர் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இப்பகுதிக்கு அழைத்து வந்தவாறு இருந்தார்கள்.எனவே அரசே மனநலகாப்பகம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். காப்பகங்களை அமைக்க எந்த துறையின் கீழ் இப்பணியை மேற்கொள்வது என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. இதுவே அரசு காப்பக பணிகள் முடங்க முதல் காரணமானது. இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி, மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனற்று உள்ளது. ஏர்வாடி தர்ஹாவை சேர்ந்தவர்கள் மன நல காப்பகம் அமைப்பதற்கு அரசுக்கு இடம் தருவதாக அறிவித்து நீண்ட காலமாகி விட்டது ஆனால் மனநல காப்பகம் அமைப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விரைவில் அரசு ஏர்வாடி தர்ஹாவில் மனநல காப்பகம் அமைக்கப்பட்டால் இது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்
விரைவில் அரசு ஏர்வாடி தர்ஹாவில் மனநல காப்பகம் அமைக்கப்பட்டால் இது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்
idhu pondra paava seyalgalai seipavargal mana noyaliyum oru manitha uyir endru enna vendum manathal than avargal noyali atharku apparpattu mananoyaalikalai roadtil thallupavargal than mana valarchi kundriyavar muthalavathaga allahu thaala idhupondra mananoyaligalai roadtil thallu pavargalukku nalla mananilaiyai koduka vendum
ReplyDelete