Saturday, December 3, 2011

பெற்றோர்களுடன் கல்வி ஆலோசனை கூட்டம் !





கீழக்கரை :
மாணவர்களின் பெற்றோரே நிரந்தர ஆசிரியர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைபள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் காலாண்டு, மாதாந் திர தேர்வுகளில் மூன்று படங்களுக்கு மேல் தோல்வியுற்ற மாணவர்கள் மற் றும் பெற்றோர் கலந்துரையா டல், ஆலோசனை கூட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தேர்வு காலம் நெருங்கி கொண்டு உள்ளது. குழந்தைகள் நன்றாக பெற்றோர் அமைதியான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். பெற்றோர் தான் நிரந்தர ஆசிரியர்கள். பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்கள் ஆவர். குழந்தைகளிடம் மனம் திறந்து பேச வேண் டும். அப்போதுதான் உங்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படும்.
மாணவர்கள் அதிகாலையில் எழுந்து விடா முயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கீழக்கரை இஸ்லாமியா மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் ரவி, மஹ்து�மியா மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி, கைரத்துல் ஜலாலியா பள்ளி தலைமையாசிரியர் முகம்மது மீரா, ஹமீதியா பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சகர்பானு, ஞானகலாவதி, ஹசன் இபுராகிம், மற்றும் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்கள், பெற் றோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.