Monday, December 5, 2011

நகராட்சி தலைவரின் விரைவான செயல்பாடு ! பொதுமக்கள் பாராட்டு (ப‌ட‌ங்க‌ள்)


முந்தைய நிலை: மணல் நிறைந்த சாலை


தற்போதைய நிலை: மணல் அகற்றப்பட்டு புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.பணியை பார்வையிடும் நகராட்சி தலைவர்.
பேருந்து நிலையத்தில் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தப்படுவதை பார்வையிடும் நகராட்சி தலைவர்

கீழக்கரை மேலதெருவில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகளை தொடர்ச்சியாக‌ கொட்டப்பட்டு வந்ததால் சிமெண்ட் சாலை மணல்பகுதியாக மாறி டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது . மணல் சாலையாக உருவெடுத்து சேதமடைந்த சிமெண்ட் சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியில் செல்வோர் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கோரிக்கை வைத்தனர்.இதை தொடர்ந்து உடனடியாக பாதிப்படைந்த சாலையை நேரில் சென்று பார்வையிட்டு சிமெண்ட் சாலையை செப்பனிட நகராட்சி தலைவர் உத்தவிட்டதின் பேரில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நகராட்சி தலைவரின் உடனடி நடவடிக்கையை அப்பகுதியை சேர்ந்தோர் பாராட்டு தெரிவித்தனர்.
கீழக்கரையின் நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற ராபியத்துல் காதரியா கீழக்கரையின் சுகாதார பிரச்சனைகள் மட்டுமின்றி பல்வேறு ஊர் நலன் தொடர்பான விசயங்களில் விரைவான நடவடிக்கை எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பணிகள் நடைபெறும் இடங்களுக்கு தானே நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தி வருகிறார்.நகராட்சி தலைவரின் செயல்பாடுகள் இதே போல் தொடர்ந்தால் கீழக்கரை நகராட்சி முன்மாதிரி நகராட்சியாக மாறும் என்பதின் ஐயமில்லை.தொடர வேண்டும் என்பதுதான் கீழக்கரைவாசிகளின் எதிர்பார்ப்பாகும்.

13 comments:

 1. டிசம்பர் மாதம் வந்துவிட்டது என்றா இந்த அவசர வேலை(மேலதேருவில்)?... என்ன ஆயிற்று சீதக்காதி சாலை (ஜும்மாஹ் பள்ளி அருகில், சுடுகாட்டு அருகில்)?...

  ReplyDelete
 2. Abdulla Syed AbdeenDecember 5, 2011 at 10:31 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்ää
  நம் பேரூராட்சி தலைவரும் ஆக்கபூர்வமான பணிகளை செய்ய தொடங்கி விட்டார் என்று அறியும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மேலும் அவருடைய பணியை மேலத் தெருவில் இருந்து ஆரம்பம் செய்தது மூலம் கீழக்கரைக்கு ஏற்ற தலைவர் என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் மற்ற தெருகளுக்கு பணிகள் செய்தது நம் நிருபர்களின் பார்வைக்கு வரவில்லையா என்பதும் நமக்கு தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் நம் ஊர் தலைவர் பணிகளை சில குறிப்பிட்ட தெருக்களுக்கு மக்களுக்கு மட்டும் இல்லாமல்ää கடந்த கால திறமையானää நேர்மையான வடக்குத் தெருவின் வார்டு உறுப்பினரும்ää பேரூராட்சி தலைவரின் புண்ணித்தால் வடக்குத் தெரு முழுவதும், குப்பையாலும்ää சாக்கடையாலும் வழிந்து, நிறைந்து எப்பொழுதும் அசுத்தத்தின் இருப்பிடமாக திகழந்தது எல்லோரும் அறிந்ததேää தயவு செய்து தற்போதைய தலைவர் அவருடைய கடைக் கண் பார்வையை வடக்குத் தெரு பக்கமும் திருப்பினால், வடக்குத் தெருவுக்கும் விடிவு கால பிறக்கும்… இன்ஷா அல்லாஹ் துஆ செய்வோம்.
  அப்துல்லாஹ் செய்யது ஆப்தீன் (சவுதி அரேபியா)
  வடக்குத் தெரு, கீழக்கரை

  ReplyDelete
 3. கடந்த மாதம் நான் ஊர் சென்று இருந்தேன். ஊரை காணவே மிக மிக மோசமாக இருந்தது. நான் ஊர் சென்ற கடந்த 15 நாட்களாக குப்பை கூளங்கள் 4வது வார்டான கிழக்குத் தெருவில் வாறப்படவேவில்லை.

  எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் குறை தீர்க்கும் முகாமிலும் சொல்லப்பட்டும் ஆட்கள் குறைவாக உள்ளதால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்கள். நான் நகராட்சித் தலைவரை நேரில் சென்று ஊரின் குறைகளை சொன்னேன். அதிலும் குறிப்பாக கிழக்குத் தெரு மிக மிக மோசமாக நாறிப் போய் இருப்பதையும் கரடு முரடான சாலைகளை சரி செய்யும்படியும் சொன்னேன்.

  என் குறைகளை கேட்ட அவர், இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றுவான் என உறுதியளித்தார். அதன்படி பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளார். மிக்க மகிழ்ச்சி. எல்லா தெருவும் நம் ஊரை சேர்ந்ததுதான். ஆகவே எல்லா தெருக்களுக்கும் தேவையான விஷயங்களை நகராட்சித் தலைவர் செய்து தர வேண்டும் என உரிமையுடன் கேளுங்கள். அதை விடுத்து ஒரு தெரு மக்களை தயவு செய்து தவறாக பார்க்காதீர்கள்.

  நம் ஊர் குப்பைகள் கொஞ்சம் நஞ்சம் சுத்தப்படுத்துவதற்கு மேலத்தெரு புரவலர்கள்தான் உதவி செய்தார்கள் என்பதை நான் நினைவு கூறி கொள்கின்றேன். அவர்களின் சொந்த தோட்டம் மற்றும் காலி இடங்கள் இல்லை என்றால் இன்னும் ஊர் நாறி இருக்கும்.

  அன்புக்குரிய நகராட்சித் தலைவரே! எங்கள் கிழக்குத் தெருவின் (4-ம் மற்றும் 5-ம் வார்டு) சுகாதரம் மற்றும் சாலை வசதியினையும் சீர் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  வஸ்ஸலாம்.

  அன்புடன் சகோதரன்
  ஜமீல் முஹம்மது.

  ReplyDelete
 4. // Abdulla Syed Abdeen //
  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்துக்கள் காண கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி .பதிவுக்கு நன்றி. உங்கள் பார்வைக்கு......நகராட்சி தலைவர் கீழக்கரையின் மற்ற பகுதிகளையும் பார்வையிட்டது தொடர்பாக ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டுள்ளோம். http://keelakaraitimes.blogspot.com/2011/11/blog-post_30.html;http://keelakaraitimes.blogspot.com/2011/12/blog-post.html

  //keelai jamil // wajid// rafik sulthan/
  பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 5. வருத்தமில்லா வாலிபர் சங்கம்December 6, 2011 at 11:52 AM

  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்க்கு சபாஸ் சொல்லும் நாம், மக்கள் பணிகளை மறந்து ஊர் சுற்றும்
  மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரோடு போடும் காண்ட்ராக்டர்களிடம் மாமூல் வாங்கும் நபர்கள் போன்ற தகவல்களை தைரியமாக வெளியிட்டால் தவுறு செய்பவர்கள் திருந்த வாய்ப்பு வரும், தரமான சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். கீழக்கரை டைம்ஸ் புரட்சி பண்ணுமா அல்லது புராணம் பாடுமா.??

  ReplyDelete
 6. அன்புடன் நிருபர் குழுவிற்கு,
  நமதூர் செய்திகளையும், அன்றாட நிகழ்வுகளையும் என்போன்ற ஏனைய கீழை வாசிகள் வெளியூர்களில் இருந்தாலும் கீழக்கரை டைம்ஸ் மூலமாக உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம். மேலும், நம்ம ஊர் புதிய நகராட்சித் தலைவர் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு தானே நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தி வருகிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான்.
  ஒரு இளைங்கன் முகத்திலே புதிதாக மீசை முளைக்கும் போது அடிக்கடி கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்த்துக் கொள்வது இயல்பு. அதுபோன்று இல்லாமல் தன் பதவிக் காலம் முடியும் வரையிலும் இதே போன்று ஈடுபாட்டுடன் எல்லோரும் பயன் பெரும் வகையில் செயல்படுவார்கள் என்று எதிர்பர்ர்க்கும் அதே வேளையில்,
  நம் நிருபர்கள் வெளியிடும் செய்தியோடு இணைந்து வரும் நிழற்ப் படங்களில் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தப்பதும்போது அதன் அருகே கொட்டும் கழிவுகளை அகற்றுகிறார்களா? என்பதையும் ஓரிரு நாட்கள் கழித்து நிழற்ப்படம் எடுத்து ஆரம்பித்த வேலைய முழுமையா முடித்தாங்க என்பதை அறியத்தந்தால் நன்றாக இருக்கும். அன்புடன் MJS, (emmu) Riyadh.

  ReplyDelete
 7. Abdulla syed AbdeenDecember 6, 2011 at 2:42 PM

  அஸ்ஸலாமு அகை;கும் ஜமீல் காக்கா…
   
  உங்களுடைய கருத்துக்கு நன்றி… அதே சமயம் நாங்கள் (வடக்குத் தெரு வாசிகள்) கடந்த பேரூராட்சி தலைவரால் வஞ்சிக்கப்பட்டவர்கள், இன்றும் பாதிப்புடனையே இருக்கிறோம். அதே சமயம் தற்போதைய தலைவரின் நல்ல செயல்பாடுகளை வரவேற்கிறோம். அடுத்ததாக நீங்கள் கூறுவது குறிப்பிட்ட தெரு மக்கள் நம் ஊருக்காக பல உதவிகள் செய்து உள்ளார்கள்ää என்பதையும் நாம் மறுக்க வில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் முழுக்க, முழுக்க சொந்த காசில் இருந்து எதுவும் செய்யவில்லை என்றே என் அறிவுக்கு எட்டுகிறது. காரணம் பல வருடங்களாக அவர்கள் நடத்தி வரும் நிறுவனம் மூலம் கீழக்கரை வாசிகளிடம் கோடி கணக்காக வசூல் செய்யப்பட்டு அதில் இருந்துதான் இந்த நலப் பணிகள் செய்வதாக நினைத்தோம்ää ஆனால் நீங்கள் சொல்லிதான் சொந்த செலவில் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியானால் இதுவரை யாருக்குமே கணக்கு தெரியாமல் இருக்கும் அந்த பல கோடி வளர்ச்சி நிதி எங்கே??? ( நானும் சில வருடம் அங்கு வேலை செய்து, நானும் பங்களிப்பு செய்து உள்ளேன் என்ற உரிமையில் இந்தக் கேள்வியை இங்கு பதிகிறேன்)…
   
  அப்துல்லாஹ் செய்யது ஆப்தீன் (சவுதி அரேபியா)

  ReplyDelete
 8. கீழக்கரை யின் குப்பை நீக்கும் பணிகள் வெறும் விளம்பரமாக மட்டும் இல்லாமல் உண்மையான தொண்டாக இருக்க வேண்டும்

  ReplyDelete
 9. கதரியா லாத்தா ஏன் மேலத்தெருவை மட்டும் சுத்தம் செய்து வருகிறார் என்று எனக்கு தெரியவில்லை.இவரை நம்பி வாக்களித்த மற்ற தெருவின் மக்கள் நிலை என்ன கதி? ஏன் மற்ற தெருமக்கள் ஏழைகளாக அதிக அளவில் இருப்பது அந்த தெருமக்களின் சாபமா? மின்னல் வேகத்தில் மேலத்தெருவில் பனிகள் நடக்கின்றன். வருடம் பத்து நாட்கள் மட்டுமே ஊர் வந்து தங்கிவிட்டு சென்று அந்த மேல தெருமக்களுக்காக இவ்வளவு முக்கியதுவம் கொடுத்து பனிகள் செய்ய என்ன காரனம்? அப்போ காலம் எல்லாம் ஊரிலே வாழும் மற்ற தெருமக்களின் நிலை என்ன?

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்,

  நகராட்சி தலைவரின் விரைவான நடவடிக்கை பாராட்டுகுறியது. அதேபோல் மற்ற நண்பர்களின் கருத்துக்களும் ஏற்றுகொள்ளகூடியது. மேலத்தெருவை மட்டும் கவனித்துவிட்டு இருந்துவிடாமல், மற்ற தெருக்களையும் அதே கவணத்துடன் சீர் செய்ய வேண்டும்.

  சாலைகள் போல, சாலை ஓரம் பராமரிக்கப்படாமல் இருக்கும் மின்கம்பங்கள் மீதும் கவனம் செலுத்தவேண்டும். இது கீழக்கரை மக்களின் சார்பாக எஅது வேண்டுகோள்.

  உங்கள் பணி சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆ செய்வோமாக!!

  -சீனி முபாரக். சின்ன கடை தெரு.

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும்,

  நகராட்சி தலைவரின் விரைவான நடவடிக்கை பாராட்டுகுறியது. அதேபோல் மற்ற நண்பர்களின் கருத்துக்களும் ஏற்றுகொள்ளகூடியது. மேலத்தெருவை மட்டும் கவனித்துவிட்டு இருந்துவிடாமல், மற்ற தெருக்களையும் அதே கவணத்துடன் சீர் செய்ய வேண்டும்.

  சாலைகள் போல, சாலை ஓரம் பராமரிக்கப்படாமல் இருக்கும் மின்கம்பங்கள் மீதும் கவனம் செலுத்தவேண்டும். இது கீழக்கரை மக்களின் சார்பாக எஅது வேண்டுகோள்.

  உங்கள் பணி சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆ செய்வோமாக!!

  - சீனி முபாரக். (சவுதி அரேபியா)
  சின்ன கடை தெரு.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.