Wednesday, December 28, 2011

கீழக்கரையில் அடமானம் என்ற பெயரில் வீடு மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் கும்பல் !கீழக்கரையில் சிலர் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை தாங்களின் பணதேவைகளுக்காக வட்டி தொழில் செய்பவர்களிடம் தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து பின்னர் சிக்கலில் சிக்கி கொள்வது நடந்தேறி வருகிறது.வெளியூரை சேர்ந்த சிலர் ரவுடிகள் உதவியுடன் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த தொழிலில் ஈடுபடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ம‌னித‌னின் அடிப்ப‌டை தேவைக‌ளான‌ உணவு உடை இருப்பிட‌ம் என்பார்கள் அந்த வகை நாம் வாழும் வீடு நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வீட்டையே அடமானம் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவனை அவனுடைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீடு மற்று சொத்துக்களை அபகரிக்கும் கும்பல் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் அமோக‌மாக‌ செய‌ல்ப‌டுவ‌தாக‌ குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌டுகிற‌து.


பைனான்ஸ் என்ற பெயரில் வட்டி தொழில் செய்பவர்கள், சிறு கடை முதல் பெரிய கடைகள் வரையும், வட்டிக்கு பணம் கொடுத்து, தினமும் வசூல் செய்கின்றனர். சிலர் சொத்துக்களை அடமானம் எழுதி கொடுத்து கடன் பெறுகின்றனர். இதில் இன்னும் சிலர் சொத்துக்களை விலைக்கு வாங்குவதற்கு பயன்படுத்தபடும் கிரைய ஒப்பந்தம் பத்திரம் எழுதி பதிவு செய்யும் முறையை பயன்படுத்தி, வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர். இதையும் கடந்து ஒருபடி மேல்சென்று, கடன் கேட்பவர்களின் முழுசொத்துக்களையும், பைனான்ஸ் தொழில் செய்பவர் பெயரில் கிரையப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு, அதன்பேரில் கடன் வழங்கப்படுகிறது. இம்முறை நம்பிக்கை என்ற அடிப்படையில் நடப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பத்திரம் எழுதி கொடுத்த பின்பு, வாங்கப்படும் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போகும்போது, சொத்துக்களை இழப்பதை தவிர வேறுவழியில்லாமல் போய் விடுகிறது.

மேலும் ஒரு சிலர் முறையாக பணத்தை திருப்பி செலுத்தினாலும் சொத்தை திருப்பி ஒப்படைக்காமல் அவர்களே அபகரித்து கொள்வதாக கூறப்படுகிறது.
ஒரு சில சமயத்தில், பணம் கொடுத்தவர் இறந்து போய்விட்டால், பணத்தை யாரிடம் செலுத்தி, மீண்டும் சொத்துக்களை மீட்பது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு பைனான்ஸ் என்ற பெயரில், சொத்துக்களை அபகரித்து வருகின்றனர். .கிரையப் பத்திரம் எழுதும் செலவும், கடன் வாங்குபவர்களின் தலையில் கட்டப்படுகிறது.இதுமட்டுமில்லாமல், மீட்டர் வட்டி கணக்கில் வட்டியும் வசூல் செய்யப்படுகிறது.
இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. பைனான்ஸ் என்ற பெயரில் மோசடி செய்து வரும் கும்பலிடம் சென்று, சொத்துக்களை கிரையம் எழுதி கொடுத்து பணம் வாங்கி, சொத்துக்களை இழந்து வருகின்றனர். தற்போது, சொத்துக்களின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சொத்துக்களை கிரையம் வாங்கும் பைனான்ஸ்(வட்டி) தொழில் நடத்துபவர்கள் சொத்துக்களை திருப்பி தருவார்கள் உறுதி கூற முடியாது.


இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த அம்ஜத் கூறுகையில் ,
எனக்கு தெரிந்த‌ சிலர் இதுப்போன்ற கும்பலிடம் சிக்கி சொத்துக்களை இழந்துள்ளார்கள்.கீழ‌க்கரையில் ப‌ல்வேறு அமைப்புக‌ளும் ,இய‌க்க‌ங்க‌ளும் வ‌ட்டியில்லா கட‌ன் திட்ட‌ங்க‌ளை செய‌ல்ப‌டுத்தி வ‌ருகிறார்கள்.ஆனாலும் சில‌ர் உட‌ன‌டி ப‌ண‌த்தேவைக்காக‌ இதுபோன்ற‌ சொத்துக்க‌ளை அப‌க‌ரிக்கும் கும்ப‌லிட‌ம் சிக்கி கொள்கிறார்க‌ள். வ‌ட்டி என்ற‌ பெய‌ரில் சொத்துக்க‌ளை அப‌க‌ரித்து கொள்கிறார்கள்.ம‌க்க‌ள் விழிப்புண‌ர்வோடு இருந்து இது போன்ற‌ சிக்க‌லில் சிக்கி கொள்ளாம‌ல் இருக்க‌ வேண்டும் .மேலும் அர‌சு இது போன்ற‌ அடியாட்க‌ளுட‌ன் மிர‌ட்டி திரியும் இக்கும்ப‌ல் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

2 comments:

  1. முஸம்மில் ஹுசைன்December 28, 2011 at 1:12 PM

    என்னோட லாத்த வீட்டை ராம்நாட் காரன்ட அடகு வச்சு எல்லா ப்ணதஹியும் கட்ட்டியாச்சு வீட்ட திருப்பி தரல இவனுவல் உள்ளே போடனும் வெளியெய விட குடாது .எபடி மீட்குரது யாரவது தெரிஞ்சா சொல்லுங்க

    ReplyDelete
  2. please complaint to the police and inform to cm cell

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.