Friday, December 30, 2011

தாசிம் பீவி கல்லூரி பிரம்மாண்ட விழாவில் விஜய் டிவி"நீயா நானா" கோபிநாத் சிற‌ப்புரை!





கீழ‌க்க‌ரை தாசிம் பீவி ம‌க‌ளிர் க‌ல்லூரியில் முன்னாள் மாண‌விய‌ர் பேரவை சார்பில் மாபெரும் விழா நடைபெற்ற‌து. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் விஜ‌ய் டிவி புக‌ழ் கோபிநாத் க‌ல‌ந்து சிற‌ப்புரையாற்றினார்.

இன்று காலை நடைபெற்ற‌ விழாவில் ப‌ரீசுன் ந‌பா கிராத் ஓதினார். க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா வ‌ர‌வேற்புரையாற்றினார். க‌ல்லூரி தாளாள‌ர் ர‌ஹ்ம‌த்நிசா த‌லைமையுரை நிக‌ழ்த்தினார். சீத‌க்காதி டிர‌ஸ்ட் செய‌லாள‌ர் காலித் புகாரி, கிரஸண்ட் குழும பள்ளிகளின் இயக்குநர் சரிபா அஜீஸ் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளை கெள‌ர‌வித்த‌ன‌ர்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌லந்து கொண்ட‌ கோபிநாத் பேச்சில் சில குறிப்புகள் மட்டும் ...


அழகின் அடையாளமாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள‌ பெண்கள் அந்த மாயையை உடைத்தெறிய வேண்டும் அறிவின் அடையாளமாக சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.பேஸ்புக் போன்ற சமூக தளங்கள் மூல‌மாக‌ ப‌ல்வேறு ச‌மூக‌ பிர‌ச்ச‌னைக‌ளை ப‌ற்றி விவாதிக்க‌ வேண்டும்.



ஆணுக்கு உள்ள‌ அனைத்து குணங்ளும் பெண்க‌ளுக்கும் உண்டு வெட்க‌ம்,கோப‌ம்,பொறுமை ஆனால் பெண்க‌ள் ம‌ட்டுமே வெட்க‌ப்ப‌டுவார்க‌ள் என‌பதாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள் ஆனால் உண்மை அப்ப‌டி இல்லை ஆண்க‌ளுக்கு வெட்க‌ப்ப‌டும் குண‌ம் உண்டு இது போன்ற‌ ஏராள‌மான‌ விச‌ய‌ங்க‌ள் பெண்க‌ளுக்கு ம‌ட்டுமே என்று பெண்களை அடிமைபட்டுத்துவதற்காக‌ த‌வ‌றாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌டுள்ள‌து.


அமெரிக்கா போன்ற‌ வெளிநாடுக‌ள் த‌ங்க‌ள் நாடுக‌ளில் உள்ள‌ குப்பைக‌ளை விற்ப‌னை செய்யும் க‌ள‌மாக‌ இந்தியாவை பய‌ன் ப‌டுத்துகின்ற‌ன.த‌ற்போது உள்ள‌ த‌லைமுறையினர் விழித்தெழுந்து இந்திய‌ தயாரிப்புக‌ளை உருவாக்க‌ வேண்டும் .புதிய‌ க‌ண்டுபிடிப்புக‌ளை உண்டாக்க‌ வேண்டும்.பெண்களுக்கு எதிரி ஆண்கள் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் இந்த‌ பின்த‌ங்கிய‌ ப‌குதியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தாசிம் பீவி மகளிர் க‌ல்லூரியை ஆர‌ம்பித்த‌ வெற்றிக‌ர‌மாக செய‌ல்ப‌டுத்திய‌ பாராட்டுக்குறிய‌வ‌ரும் ஒரு ஆண்தான்.



மேலும் பெண்க‌ள் ச‌மைய‌ல் அறையிலிருந்து வெளியில் வ‌ந்து ச‌முக‌த்தில் ப‌ங்கு ஆற்ற‌ வேண்டும் .தொட‌ர்ந்து ஒரு மணி நேரம் பேசிய‌ கோபிநாத் ப‌ல் வேறு நிக‌ழ்வுக‌ளையும்,பெண்க‌ளின் க‌ட‌மைக‌ளையும் ப‌ற்றி விரிவாக‌ எடுத்து கூறினார். பின்ன‌ர் கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

பொதுமேலாளர் தாவுத்,க‌ல்லூரி மேலாள‌ர் அஜிஸ் உள்பட நிர்வாகத்தினர் விழாவுக் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த‌ன‌ர்

புவேனேஸ்வ‌ரி ந‌ன்றி கூறினார்.இவ்விழாவில் ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.