Thursday, December 8, 2011

ரோட்டரி சங்கத்தின் இலவச மருத்துவ முகாமில் 300பேர் பயன் பெற்றனர் !



கீழக்கரை ரோட்டரி சங்கம் முகம்மது சதக் பாலிடெக்னிக் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கீழக்கரை கைராத்துல் ஜலாலிய அரபி பாடசாலை வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.இம்முகாமில் சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ,கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் செய்யது இப்ராகிம்,கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் 12 பேர் கொண்ட மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர். 300க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.நிகழ்ச்சி இறுதியில் சுப்பிரம்ணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.